Published:Updated:

பழைய வீடுகளின் விற்பனை உயர்வு... வாங்க விரும்புவோர் கவனத்துக்கு..!

வீடு
வீடு

பழைய வீடுகளில் மறு விற்பனை மதிப்பு நன்றாகவே இருக்கிறது. உதாரணமாக, சென்னை அண்ணாநகரில் 2011-ம் ஆண்டுவாக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு சதுர அடி விலை சுமார் ரூ.6,000-ஆக இருந்தது

புது வீடுகளின் விற்பனை ஏற்கெனவே மந்தகதியில் இருந்துகொண்டிருக்க, பழைய வீடுகளின் விற்பனை தற்போது சூடுபிடித்திருக்கிறது. காரணம், கொரோனா ஏற்படுத்தியுள்ள பரபரப்பான சூழ்நிலை.

''கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு இப்போதுவரைக்கும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பழைய அடுக்குமாடி வீடுகளின் விலை சதுர அடிக்கு சுமார் ரூ.1,000-ரூ.2,000 வரை குறைந்திருக்கிறது. இதனால் இரண்டு படுக்கை அறை வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் மூன்று படுக்கை அறை வீட்டை வாங்குகிறார்கள்.

சென்னை அசோக்நகரை எடுத்துக்கொண்டால், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒரு சதுர அடி 10,000 ரூபாய் என்றால், மறு விற்பனைக்கு வரும் 10 முதல் 15 ஆண்டுகள் பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விலை சதுர அடி ரூ.7,000 முதல் ரூ.8,000-ஆக உள்ளது'' என்றார் பெஸ்ட் சர்வீஸ் ரியால்டி நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார்.

சொத்து ஆலோசகர் அரசு அழகப்பனிடம் பேசினோம். ''பழைய வீடு வாங்குவதில் உடனே குடியேறும் வசதி இருப்பதால், பெரும்பாலானவர்கள் அதை விரும்புகிறார்கள்.

பழைய வீடுகளின் விற்பனை உயர்வு... வாங்க விரும்புவோர் கவனத்துக்கு..!

புது வீடு என்றால் பில்டர் எப்போது ஒப்படைப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதுவும் அண்மைக் காலத்தில் பொருளாதார மந்தநிலை, கொரோனா பரவல் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், வீட்டை ஒப்படைக்கும் காலம் ஆறு மாதங்கள் முதல் ஒன்பது மாதங்கள் வரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமான ரெரா அனுமதிப்படியே தள்ளிப்போகிறது. இதனால், பழைய வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், பழைய வீடுகளில் மறு விற்பனை மதிப்பு நன்றாகவே இருக்கிறது. உதாரணமாக, சென்னை அண்ணாநகரில் 2011-ம் ஆண்டுவாக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு சதுர அடி விலை சுமார் ரூ.6,000-ஆக இருந்தது. இப்போது 2020-ம் ஆண்டில் அதே பழைய வீட்டை சதுர அடி ரூ.10,000-க்கு விற்க முடியும்.

காரணம், நகரத்துக்குள் மனை விலை மிகவும் அதிகரித்திருப்பது. மேலும், இவ்வளவு நாளும் அந்த வீட்டில் குடியிருந்திருப்பார்கள் அல்லது வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பார்த்திருப்பார்கள்'' என்றவர், பழைய வீடு வாங்குபவர்களுக்குச் சில பயனுள்ள டிப்ஸ்களையும் வழங்கினார்.

"தற்போது பழைய வீடுகளின் விலை குறைந்திருந்தாலும் வீட்டின் உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு விலை சொல்வதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. கையில் ரொக்கப் பணம் அல்லது வங்கிக் கடன் விரைந்து வாங்குவதற்கான சாத்தியக்கூறு இருந்தால் வீட்டின் விலையைக் குறைத்துக் கேட்க முடியும்.

உதாரணமாக, ஒரு வீட்டின் விலை ரூ.35 லட்சம் என்றால், சுமார் ரூ.28 லட்சத்துக்குப் பேசி முடிக்கலாம். தற்போது ரொக்கப் பணம் மற்றும் வேகமான கடன் என்பது முக்கிய அங்கமாக இருக்கிறது.

வீடு விற்பவர்கள் அவசரத் தேவைக்குத்தான் விற்கிறார்கள். மகள் கல்யாணம், மகன் மேற்படிப்பு போன்றவற்றுக்காகத்தான் விற்க முன்வருகிறார்கள். உங்களால் ஒரு மாத காலத்துக்குள் பணம் தந்து பத்திரம் செய்துகொள்ள முடியும் என்றால் நன்றாக விலையைக் குறைத்து வாங்க முடியும்" என்றார்.

> பழைய வீட்டை வாங்குவது ஏன்?

> பழைய வீடுகளுக்கு எப்படி விலை நிர்ணயிப்பது?

> பழைய வீடுகள் வாங்க வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

> வருமான வரிச் சலுகை விவரம்

- முழுமையான வழிகாட்டுதல்களுக்கு நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க.. > பழைய வீடு வாங்கினால் லாபமா..? - பயனுள்ள டிப்ஸ் https://bit.ly/2NFPrS4

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு