Published:Updated:

கட்டுமானத்துறை... வாய்ப்புகளும் சவால்களும்..! - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்

கட்டுமானத்துறை
பிரீமியம் ஸ்டோரி
கட்டுமானத்துறை

இடம் வாங்கும்போதே பொறியாளர்களுடன் ஆலோசித்து வாங்கினால், கட்டுமானத்துக்கு ஏற்ற மனையை வாங்க முடியும்.

கட்டுமானத்துறை... வாய்ப்புகளும் சவால்களும்..! - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்

இடம் வாங்கும்போதே பொறியாளர்களுடன் ஆலோசித்து வாங்கினால், கட்டுமானத்துக்கு ஏற்ற மனையை வாங்க முடியும்.

Published:Updated:
கட்டுமானத்துறை
பிரீமியம் ஸ்டோரி
கட்டுமானத்துறை
ன்றைக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் துறைகளில் முக்கியமானது கட்டுமானத்துறை. காரணம், விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவது கட்டுமானத்துறை.

இந்தத் துறை தற்போது சந்தித்துவரும் சவால்களையும், இனிவரும் காலத்திலுள்ள எக்கச்சக்கமான வாய்ப்புகளையும் பற்றி அலசி ஆராய நாணயம் விகடனும், ஜி.பி.ஆர் டி.எம்.டி (GBR TMT) நிறுவனமும் இணைந்து ‘கட்டுமானத் தொழில்-சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் (Builders Meet) ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

கட்டுமானத்துறை
கட்டுமானத்துறை

வீடு வாங்க வேண்டிய நேரமிது..!

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் (BAI) தேசியத் தலைவர் மு.மோகன், ‘‘வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு (Affordable Housing) மத்திய அரசு வட்டி மானியம் ரூ.2.5 லட்சம் வழங்கிவருவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்தத் திட்டத்தின்கீழ் (பிரதம மந்திரி யோஜனா) ரூ.45 லட்சத்துக்குக் குறைவான விலையுள்ள வீட்டை வாங்கும்போது வட்டியில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க 50 லட்சம் பேர் வட்டி மானியம் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரைக்கும் வெறும் 10,000 பேர்தான் இதன் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டுக் கடனில் வட்டி மானியம் பெற தமிழக அரசு உதவ வேண்டும். முடிவடைந்த பல பணிகளுக்கு ஆறு மாதங்களாகியும் பணம் வரவில்லை. எனவே, உள்கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிவிட்டு, தமிழக அரசு டென்டர் விட வேண்டும். ஒட்டுமொத்தமாக, ஒரே நிறுவனத்துக்கு 1,000 கோடி ரூபாய்க்குமேல் நீண்டகால ஒப்பந்தம் கொடுப்பதை நிறுத்தி, பல நிறுவனங்களுக்குப் பிரித்துத் தர வேண்டும்.

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்மவர்கள் தங்கத்துக்கு அடுத்து ரியல் எஸ்டேட்டில்தான் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள்; செய்யப் போகிறார்கள். நிலம், வீடு வாங்குபவர்களுக்கு இன்றைக்குப் பொற்காலம். இன்றைக்கு பலப் பில்டர்கள் பணம் வேண்டும் என்பதற்காக விலையைக் குறைத்துத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். கொரோனா பரவல் சரியாகிவிட்டால், விலை உயர்ந்துவிடும்.

இன்றைக்கு இந்தியா முழுக்க பத்திரப் பதிவுக் கட்டணம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவவொருவிதமாக இருக்கிறது. கர்நாடகாவில் இந்தக் கட்டணம் 5% இருந்தது, கோவிட் காரணமாக 3.5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 11% என அப்படியே இருக்கிறது. இதை 5 சதவிகிதமாகக் குறைத்தால், வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி-யை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக, போராடிக் குறைத்திருக்கிறோம். இதை 5 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம். இதைக் குறைக்க மாநில அரசும் தன் வருமானத்தை விட்டுக் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும்.

கட்டுமானத்துறை
கட்டுமானத்துறை

மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல் கட்டுமானத்துக்கு ஒரே இடத்தில் ஒப்புதல் அளிக்கும் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் அலைச்சல் குறையும்; வேலை விரைவாக நிறைவேறும். வீடுகளின் விலையும் குறையும்” என்றார்.

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு நல்ல வரவேற்பு..!

அடுத்ததாகப் பேசியவர் கிரெடாய் (Credai) அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன். இவர் நியூவ்ரி பிராபர்டீஸ் (Newry Properties Pvt Ltd) நிறுவனத்தின் இயக்குநரும்கூட. அவர் பேசியதாவது...

‘‘தற்போதைய நிலையில் வீடுகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கிறது. புதிய விதிமுறைகளின்படி, சென்னையில் 40 அடி சாலையில் ஒரு நிலம், கட்டடம் இருந்தால் அது தானாகவே வர்த்தக ஏரியாவாக மாறிவிடும். இதர நகரங்களில் 30 அடி சாலை இருந்தால்தான் அதில் கமர்ஷியல் பில்டிங் கட்ட முடியும். கட்டடப் பரப்புக்கான எஃப்.எஸ்.ஐ (Floor Space Index) இரண்டு வரைக்கும் அனுமதிக்கப்படுவதால், குறைவான நிலத்தில் அதிக கட்டடப் பரப்பு கட்ட முடியும். இது நிச்சயம் லாபகரமாக அமையும். கார் பார்க்கிங் ஏரியாவைச் சரியாக வடிவமைத்தாலே கணிசமாக லாபம் பார்க்க முடியும்.

அடுத்து, வாங்கக்கூடிய விலையிலுள்ள வீடுகளுக்கான அளவு சென்னை போன்ற பெருநகரங்களில் 40 சதுர மீட்டரிலிருந்து 60 சதுர மீட்டராகவும், சிறு நகரங்களில் 60 சதுர மீட்டரிலிருந்து 90 சதுர மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் எஃப்.எஸ்.ஐ 2 வரை கிடைப்பதுடன், பிரீமியம் எஃப்.எஸ்.ஐ-யும் கிடைக்கிறது. வாங்கக்கூடிய விலை என்று வரும்போது பிரீமியம் எஃப்.எஸ்.ஐ-க்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்த புராஜெக்ட்டுக்கு வரிச் சலுகை பெறும் வசதியும் இருக்கிறது. அந்த வகையில், வாங்கக்கூடிய விலை மூலம் விலை குறைத்து விற்றாலும் பில்டர் லாபம் பார்க்க முடியும். ‘வாங்கக்கூடிய விலையிலான வீடுகளை சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.45 லட்சம் என்று இருப்பதை ரூ.75 லட்சமாக மாற்றுங்கள்’ என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

பில்டர்கள், வீடு கம்ப்ளிஷன் சர்ஃடிபிகேட் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இது இப்போது தமிழகம் முழுக்க அமல்படுத்தப்பட்டுவருகிறது. இது கிடைக்கவில்லையென்றால், கட்டிய வீடுகளை வாங்கியவர்களிடம் ஒப்படைப்பது கஷ்டம். இது இருந்தால்தான் மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு கிடைக்கும். தற்போது முடிக்கப்பட்ட, முடிக்கும் நிலையிலுள்ள வீடுகளுக்கு நல்ல தேவை இருக்கிறது.”

திட்டமிட்டுக் கட்டினால் செலவு குறையும்..!

தமிழ்நாடு & புதுச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FACEAT&P) மாநிலச் செயலாளர் ஜி.கணேஷ். இவர் கோயம்புத்தூரிலுள்ள ஆர்.ஜி.அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். அவர் பேசியதாவது...

கட்டுமானத்துறை
கட்டுமானத்துறை

‘‘கட்டுமானத்துறைக்கு என ஒரு கவுன்சில் அல்லது இலாகா கொண்டுவருவது அவசியம். அப்போதுதான் கட்டுமானப் பொருள்களின் விலை கண்டபடி உயர்வதைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுமானத்துறையில்தான் அதிக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கட்டுமானத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதைப் பொறியாளர்கள், வீட்டின் உரிமையாளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். சுண்ணாம்புக்கு பதில் சிமென்ட் வைத்து கட்டும்போது சுவரின் தடிமன் மிகவும் குறைந்திருக்கிறது. இதனால் அதிக இடம் புழங்குவதற்குக் கிடைத்திருக்கிறது.

இடம் வாங்கும்போதே பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து வாங்கினால் சிக்கல் இல்லாத, கட்டுமானத்துக்கு ஏற்ற மனையை வாங்க முடியும். இதனால், வீடு கட்டும் செலவு மற்றும் அப்ரூவல் வாங்கும் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். முதலிலேயே கட்டுமான பிளானை முடிவு செய்துவிடுங்கள். இடையில் பிளானை மாற்றினால் செலவு கூடுவதுடன், கட்டடத்தின் வலிமையும் குறையும்.

கொரோனாவுக்குப் பிறகு எல்லோரும் சொந்த வீட்டை நோக்கிப் போகிறார்கள். அதே நேரத்தில், தரமான குறைந்த விலை வீடுகளை அதிகம் பேர் விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட்-ஐ பயன்படுத்தத் தயங்கினோம். இப்போது அதை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். பல வகைகளில் ஆற்று மணலைவிட எம்.சாண்ட் சிறப்பானதாக இருக்கிறது. மேலும், விலையும் குறைவாக இருக்கிறது. செங்கல்லுக்குக்கூட மாற்றுப் பொருள்கள் வந்துவிட்டன. நிலக்கரிச் சாம்பல் செங்கல், செம்மண் செங்கல்லைவிட விலை குறைவாகவும், செலவு குறைவாகவும் இருக்கிறது. கட்டுமான இடத்திலேயே பணியாளர்கள் தங்கியிருந்தால், மொத்த செலவில் சுமார் 2.5% குறைகிறது.

பொறியாளர்கள் தனியாக இயக்குவதற்கு பதில் ஒரு சங்கத்துடன் இணைந்து செயல்பட்டால் பல நன்மைகள் இருக்கின்றன. குறைந்த விலையில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும்.

மு.மோகன், எஸ்.ஸ்ரீதரன், ஜி.கணேஷ்
மு.மோகன், எஸ்.ஸ்ரீதரன், ஜி.கணேஷ்

வீடு கட்டிக் கொடுக்கும்போது, சதுர அடியில் விலை சொல்வதைவிட அதில் என்னென்ன வசதிகள் தேவை என்பதைப் பொறுத்து சங்கம் விலை நிர்ணயம் செய்யும். வீடு கட்டி முடிக்கக் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.

கட்டுமானத்துறையைப் பொறுத்தவரையில், தொழிலாளர் கூலி ஆண்டுக்கு 10%, கட்டுமானப் பொருள்களின் விலை 5% அதிகரித்துவருகிறது. கட்டுமானப் பொருள்களின் விலை இதற்குமேல் அதிகரித்தால், கூடுதல் தொகையைக் கொடுக்க வேண்டும் என்பதை அக்ரிமென்ட்டில் குறிப்பிடுவதுடன், அதை யாருக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போகிறீர்களோ, அவர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். இதனால் பில்டர், வீட்டு உரிமையாளர்கள் இடையே சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், கட்டுமான வேலைக்கு என்னென்ன பொருள்கள் வேண்டும் என்பதை முன்தினமே ஏற்பாடு செய்துகொள்வது மிக முக்கியம். இல்லையென்றால், இடையில் வேலை தடைப்பட்டு கட்டுமானச் செலவு அதிகரிக்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடந்தாலும் பலரும் கலந்துகொண்டது மிக முக்கியமான விஷயம். நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொன்னார்கள்.

வீடு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என்பதால், ரியல் எஸ்டேட் துறை விரைவில் சீரடையும் என்று எதிர்பார்ப்போம்.

வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஏற்ற வீடுகள்..!

கட்டுமானத்துறை... வாய்ப்புகளும் சவால்களும்..! - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்

சென்னையைச் சேர்ந்த முன்னணி டி.எம்.டி கம்பிகள் உற்பத்தி நிறுவனமான ஜி.பி.ஆர் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ரதி பேசும்போது, ‘‘கட்டுமானத்துறை என்பது 200 துறைகளின் தாய்த்துறையாக இருக்கிறது. இதில் சப்ளையர்களின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் ஸ்டீல் விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிவருகிறது. தற்போது, `வீட்டிலிருந்து வேலை’ என்பது புதிய இயல்பாக மாறியிருக்கிறது. வீட்டிலேயே ஓர் அலுவலக அறை உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், வீடுகள் பற்றிய அபிப்ராயம் மாறியிருக்கிறது.

பில்டர்கள் அலுவலக அறையுடன் வீடு கட்டி விற்பனை செய்யும் காலம் விரைவிலேயே வரும். நீண்டகாலத்தில், சென்னை தவிர்த்த தமிழகத்தின் இதர நகரங்களில் ரியல் எஸ்டேட் தேவை அதிகமாக இருக்கும். புதிய இயல்புநிலையால் டயர் 2, டயர் 3 நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும். அதுவும் வாங்கக்கூடிய வீடுகளுக்குத் தேவை உயரும்.

கட்டுமானத்தில் செலவு குறைப்பு மற்றும் விரைந்து முடிப்பது மிக முக்கியம். ஸ்டீல் கம்பிகள் இப்போது ரெடிமேடாகக் கிடைக்கின்றன. நாங்களும் ரெடிமேட் ஸ்டீல் கம்பிகளை விற்பனை செய்கிறோம். இதனால் செலவு குறைவதோடு, விரைவாகவும் வீடுகளைக் கட்டி முடிக்க முடியும்” என்றார்.