Published:Updated:

ரியஸ் எஸ்டேட்... சாதகங்கள்... பாதகங்கள்! - கொரோனாகாலப் பார்வை!

ரியஸ் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
ரியஸ் எஸ்டேட்

தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 7.5 சதவிகித அளவுக்குக் குறைந்திருக்கிறது. அது இன்னும் குறையக்கூடும்.

ரியஸ் எஸ்டேட்... சாதகங்கள்... பாதகங்கள்! - கொரோனாகாலப் பார்வை!

தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 7.5 சதவிகித அளவுக்குக் குறைந்திருக்கிறது. அது இன்னும் குறையக்கூடும்.

Published:Updated:
ரியஸ் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
ரியஸ் எஸ்டேட்
லகமே கொரோனா பாதிப்பால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறது. கூடவே பொருளாதாரமும் முடங்கியிருக்கிறது.

பல துறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவற்றில் முக்கியமானது, ரியல் எஸ்டேட். கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் ரியல் எஸ்டேட் துறை இப்போது பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. ``கொரோனா காலத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை எப்படியிருக்கும்?’’ என்று அந்தத் துறை சார்ந்தவர்களிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

ரியஸ் எஸ்டேட்
ரியஸ் எஸ்டேட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கர் பேசும்போது... “இந்த ஊரடங்கின்போது 130 கோடி இந்தியர்களில் 30 கோடிப் பேர் மட்டுமே நிம்மதியாக இருக்கிறார்கள். கட்டுமானத் தொழிலாளர்கள் பணப்புழக்கம் இல்லாமல் போனதால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட ரூ.2,000 எத்தனை நாள்கள் செலவுக்கு வரும்?

சாப்பாட்டுச் செலவு தவிர்த்து மின் கட்டணம், நெட் பில், டெலிபோன் பில் என ஏகப்பட்ட செலவுகள் இருப்பதால், கஷ்டப்படும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15,000 கொடுத்தால்தான் ஓரளவுக்குச் சமாளிக்க முடியும். மாநில அரசு மின் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 7.5 சதவிகித அளவுக்குக் குறைந்திருக்கிறது. அது இன்னும் குறையக்கூடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீட்டுக் கடன் வட்டி

வீடு வாங்குபவர்கள் மத்தியில் அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை பெரிதாக இருப்பதால், `இப்போது வீடு வாங்குவது, முதலீடு செய்வது சரியாக இருக்குமா...’ என்று யோசிக்கிறார்கள். சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நிலையற்றதன்மையால் ரியல் எஸ்டேட் முதலீடு குறித்த முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். வீடு வாங்க, பெரிய அளவில் முதலீடு வேண்டும் என்பதால் முன்பணம் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்கள் தொடங்கி, புதிதாக வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் வரை அனைவரும் குழப்பத்திலிருக்கிறார்கள்.

ரியஸ் எஸ்டேட்
ரியஸ் எஸ்டேட்

இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பு சரியாவதற்கு எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும். இந்த நிலை சீராக மத்திய அரசுதான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் தாராளமாகக் கடன் தருவதால் மட்டும் பலரும் வீடு வாங்க வந்துவிட மாட்டார்கள். வீட்டுக் கடன் வட்டியை 4% என்ற அளவுக்குக் குறைக்க வேண்டும். திருப்பிச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு தலா ரூ.3 லட்சம் வரிச் சலுகை அளிக்க வேண்டும்” என்றார்.

நவீன்ஸ் ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஆர்.குமார் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவால் வீடு கட்டுவது தடைப்பட்டிருக்கிறது. நாடு இயல்புநிலைக்கு வந்த பிறகு அடிப்படை வசதிகளுக்குத் தேவை அதிகரிக்கும் எனலாம். தற்போதைய நிலையில், சம்பளக் குறைப்பு, வேலையில் நீடிப்பதில் சிக்கல், வேலை இழப்பு போன்றவற்றால் வீடு வாங்குவது நின்றுவிட்டது. மேலும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்கள் மனரீதியாக சரியாக வேண்டும். பொருளாதார மந்தநிலை மாற வேண்டும். அப்போதுதான் மீண்டும் முன்போல் ஆர்வமாக வீடு வாங்க முன்வருவார்கள்.

இந்த ஊரடங்கு, ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்குக் கற்பித்திருக்கிறது. `சொந்த வீடு ஏன் அவசியம்...’ என்பதை மிகத் தெளிவாகப் புரியவைத்திருக்கிறது. `சொந்த வீடு இருந்தால் உணவுக்கு மட்டும் சிறிது செலவு செய்தால் போதும்; வாழ்க்கையைப் பாதுகாப்பாக, நிம்மதியாக ஓட்டிவிடலாம்’ என்ற எண்ணம் வாடகை வீடுகளில் குடியிருக்கும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. எங்கு சுற்றினாலும் வீடுதான் நிம்மதியைத் தரக்கூடிய அமைதியான இடமாக இருக்கிறது. கொண்டாட்டம் / குதூகலாம் எதுவாக இருந்தாலும், வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவதுபோல் இருக்காது. `நாம் வசிக்கும் வீடு சொந்த வீடாக இருக்க வேண்டும்’ என்று பலரும் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பாதிப்பு வந்தால் வாடகை வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து அந்த வீட்டில் வசிக்க அனுமதிப்பது கடினம். மேலும், சாதாரணமாக வேறு வீடு மாறிப் போகும்போது `முன்னர் குடியிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்குமோ...’ என்ற பயம் வீடு மாறுபவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. நிலைமை சீராகும்போது இவர்கள் அனைவரும் நிச்சயம் சொந்த வீடு வாங்குவார்கள் எனலாம். அதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 7.5 சதவிகித அளவுக்குக் குறைந்திருக்கிறது. அது இன்னும் குறையக்கூடும். அப்போது வீடு பாதுகாப்பு தரக்கூடிய நல்ல முதலீடாக இருக்கும்.

மணிசங்கர், ஆர்.குமார்
மணிசங்கர், ஆர்.குமார்

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 7 சதவிகித்துக்குமேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டில் சம்பள உயர்வு அதைவிட அதிகமாக இருக்கும். அப்போது வீடு வாங்குவது அதிகரிக்கும். அதுவரைக்கும் சிறிது காலம் ரியல் எஸ்டேட் துறையில் தளர்வு இருக்கும்.

என்.ஆர்.ஐ-க்களுக்குச் சாதகம்

இந்திய ரூபாயின் வெளி மதிப்பு குறைந்திருப்பதால் என்.ஆர்.ஐ-க்கள் அமெரிக்க டாலர் மூலம் வீடு வாங்கும் போது அவர்களுக்கு சுமார் 10% விலை குறைவாக வீடு கிடைக்கும். மேலும், இப்போது அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வெளிநாட்டில் வசித்தாலும், கொரோனா பாதிப்புக்குப் பிறகு, `தாய்நாடுதான் நிரந்தரம்’ என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இது இந்தியாவில் வீடு விற்பனையைக் கணிசமாக அதிகரிக்கும்.

`கோ-லிவிங்’ என்ற முறையில் ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதன் மூலம் செலவைக் குறைத்து வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்குப் பிறகு அவர்களால் போதிய சமூக இடைவெளியைப் பராமரிக்க இயலவில்லை. சொந்த வீடுதான் பாதுகாப்பான இடம் என்பதால், தனி வீடு வாங்குவது அல்லது தனி வீட்டுக்கு வாடகைக்குச் செல்வது போன்றவை கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.

கொரோனா வைரஸ் பிரச்னையில் சீனா கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கிறது. பல நாடுகள் இறக்குமதிக்கு சீனாவை தவிர்க்கும்போது அது இந்தியாவுக்கு வாய்ப்பாக மாறக்கூடும். இதனால் நாட்டின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கால் இப்போது உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீராகும்போது உள்நாட்டின் தேவை மிகவும் அதிகரிக்கும். இது ரியல் எஸ்டேட் துறைக்கு குறிப்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரிக்கும்.

குறுகியகாலப் பிரச்னைகள்

அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறுகியகாலத்தில் சில சிக்கல்களைச் சந்திக்கும். சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் பணியாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புவார்களா என்று தெரியாது. மேலும், கட்டுமானப் பொருள்களை யாரும் இருப்பு வைத்துக்கொள்வதில்லை. அது தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். மணல், ஜல்லி, செங்கல் சப்ளைக்கான போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்ப வேண்டும்.

ரியஸ் எஸ்டேட்
ரியஸ் எஸ்டேட்

மத்திய அரசு உதவ வேண்டும்!

தற்போது அனைவரின் வருமானமும் குறைந்திருக்கிறது. பொருளாதார மீட்புக்கு மத்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவ வேண்டும். ஊரடங்கு காலம் மற்றும் நிலைமை சீராகும் வரை நாட்டில் ஜி.எஸ்.டி., தனிநபர் வருமான வரி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நிதியாண்டில் 12 மாதங்களில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்துவிட்டு, மீதியைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தக் காலகட்டத்தில் கடன்களுக்கு எந்த வட்டியும் வசூலிக்கக் கூடாது. மார்ச் 1 முதல் ஆறு மாத காலத்துக்கு ஜி.எஸ்.டி., வருமான வரி, கடன் வட்டி எல்லாவற்றையும் நிறுத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிகாணும். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அனைத்துத் துறைகளையும் மீட்டெடுக்க முடியும். ரியல் எஸ்டேட் துறைக்கு உள்ளீட்டு வரிக் கழிப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; ஜி.எஸ்.டி-யை 18 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். இது வீடுகளின் விலை குறைய உதவும். இதனால், வீடு வாங்குபவர்களின் நிதிச்சுமை குறையும். இவை, மத்திய அரசு செய்ய வேண்டியவை.

மாநில அரசு, உடனடியாக பத்திரப் பதிவுக் கட்டணத்தை 11% (7% முத்திரைக் கட்டணம் + 4 பதிவுக் கட்டணம்) என்பதை 3 (2+1) சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். இதர மாநிலங்களிலெல்லாம் பத்திரப் பதிவு கட்டணம் சுமார் 5% அளவில் இருக்கிறது. அந்த வகையில் நிலைமை சீரான பிறகு தமிழ்நாட்டிலும் பத்திரப்பதிவு கட்டணத்தை 5 (4+1) சதவிகிதமாகக் கொண்டு வர வேண்டும். இதன் மூலமும் வீடு வாங்குபவர்களின் நிதிச்சுமை குறையும்” என்றார்.

வீடு தேடுவது அதிகரிப்பு!

பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா பாதிப்பால் தனிநபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் வீடு வாங்கும் திட்டம் தள்ளிப்போகக்கூடும். ஆனால், அவர்கள் ஆன்லைனில் சொத்து தொடர்பாகத் தேடுவது 2020, முதல் காலாண்டில் 5.3% அதிகரித்திருப்பதாக மேஜிக்பிரிக்ஸ் பிராப் இண்டெக்ஸ் குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்களில் இது அதிகரித்திருக்கிறது. இவை முறையே 8.1% மற்றும் 6.4 சதவிகிதமாக உள்ளது. அதுவும் ஒன்று மற்றும் இரண்டு படுக்கை அறை வீடுகள் மற்றும் உடனே குடியேறக்கூடிய நிலையில் உள்ள வீடுகளைத் தேடுவது அதிகமாக உள்ளது.

இந்தியா முழுக்க அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை இறக்கத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் விலை சுமார் 3.5% அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்த நகரங்களில் மெட்ரோ ரயில், புதிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவை காரணங்களாக இருக்கின்றன. மிக முக்கியமானது, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டியுடன் வீட்டுக் கடன் வட்டி இணைக்கப்பட்டு, வட்டி விகிதம் குறைக்கப் பட்டது. தற்போது சுமார் 7.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது மற்றும் முதன்முறை வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் மானியம் சுமார் ரூ.2.5 லட்சம் கிடைப்பதாகவும் உள்ளது. இது புறநகர்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தேவையை அதிகரித்திருக்கிறது.

கொரோனாநோய்த் தொற்று காரணமாகப் பலரும் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு சரியான பிறகும் அது தொடர வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்துச் செலவு, மின்சாரச் செலவு போன்றவை மிச்சப் பட்டிருப்பதுடன், கட்டடத்துக்கான வாடகைச் செலவும் கணிசமாகக் குறையும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. குறைவான பணியாளர்களுக்கு எதற்கு பிரமாண்ட அலுவலகம் என நிறுவனங்கள் சிறிய கட்டடங்களுக்கு மாற வாய்ப்பிருக்கிறது. இதனால் இனி பிரமாண்ட கட்டடங்களுக்கு அதிக தேவை இருக்காது என்பதுடன், கட்டடங்களுக்கான வாடகையும் குறைய வாய்ப்பிருக்கிறது. பணியாளர்களில் பெரும்பாலானோர் புறநகர்களில் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், தாங்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் மனை, வீடு வாங்கக்கூடும். இதனால் புறநகர் ரியல் எஸ்டேட் வளர்ச்சிகாணும் சூழல் உருவாகும். மேலும், புறநகர்ப் பகுதிகளில் பெரிய அளவில் நிறுவனங்களும் அவற்றின் கிளைகளை அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

`வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற புதிய செயல்முறை பரவலாக நடைமுறைக்கு வந்திருப்பதால், நகர்ப்புறங்களில் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு. அதே நேரம், நகர்ப்புறங்களுக்கு வெளியே பலரும் புதிதாக வீடு வாங்க வாய்ப்புண்டு. புறநகர்ப் பகுதிகளில் மக்கள் குடியேறுவதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், ரியல் எஸ்டேட் மீண்டும் பெரிய அளவில் வளர்ச்சிகாண வாய்ப்புண்டு.

‘‘அடுக்குமாடிக் கட்டடங்களுக்குத் தேவை அதிகரிக்கும்!’’

சந்தோஷ் குமார், துணைத் தலைவர், அனராக் பிராப்பர்ட்டி கன்சல்டன்ட்ஸ் (Anarock Property Consultants)

ரியஸ் எஸ்டேட்... சாதகங்கள்... பாதகங்கள்! - கொரோனாகாலப் பார்வை!

“இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி மற்றும் விரைவான விநியோக எதிர்பார்ப்புகளால் கிடங்குகளின் தேவை மிகவும் அதிகரிக்கும். தெற்காசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் டோக்கியோவில் ஏற்கெனவே பல மாடிக் கிடங்குகள் இயங்கிவருகின்றன. மும்பை போன்ற நிலப்பகுதி குறைவான நகரங்களில் அதிகபட்ச பயன்பாட்டுக்கு இத்தகைய கிடங்குகள் உதவுகின்றன. இது விநியோக நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் உதவும்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இயல்புநிலை திரும்பும்போது இ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ச்சி காணும். அந்தத் துறை நிறுவனங்களுக்கு சிட்டி எல்லைக்குள் பல அடுக்குக் கிடங்குகள் இருந்தால், டெலிவரி எளிதாக இருக்கும். இதன் மூலம் நேரம், எரிபொருள் செலவு, மனிதப் பயன்பாடு கணிசமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம், புறநகர்களில் பரந்து விரிந்துள்ள கிடங்குகளைவிட, நகருக்குள் பல அடுக்குக் கிடங்குகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பம் என்கிறபோது, பொருள்களை அடுக்கிவைப்பது தொடங்கி அவற்றை டெலிவரிக்கு அனுப்புவது வரை மென்பொருள் மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், மனிதவளத்தின் தேவை கணிசமாகக் குறைகிறது. அதேநேரத்தில், இவற்றைக் கண்காணிக்கும் பணி, இதர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ரியஸ் எஸ்டேட்
ரியஸ் எஸ்டேட்

இந்தக் கிடங்குகள் உருவாக்கம், ஸ்டீல் பொருள்கள், தொழிற்சாலை முன்தயாரிப்பு பொறியியல் பொருள்கள், குளிர்பதனப் பொருள்கள், சி.சி.டி.வி கேமராக்கள் போன்றவற்றுக்கு அதிக தேவை உருவாகும். பட்ஜெட் 2020-ல் கிடங்குத்துறைக்குச் சாதகமான அறிவிப்பாக, தடையில்லாக் குளிர்சாதனத் தொடர் வசதியை ஏற்படுத்துவது இருக்கிறது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களைத் தாண்டி கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் கிடங்குக்கு தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிகாணும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism