Published:Updated:

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் சிறிய நகரங்கள்; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Home (Representational Image)

சிறிய நகரங்களில் மனை, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், வாங்குபவர்கள் சொத்தை இறுதி செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் சிறிய நகரங்கள்; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

சிறிய நகரங்களில் மனை, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், வாங்குபவர்கள் சொத்தை இறுதி செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

Published:Updated:
Home (Representational Image)

தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குச் சொந்த வீட்டுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம்.

இதற்கு மிக முக்கிய காரணம் கோவிட்-19 வைரஸ் பரவல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் `வீட்டிலிருந்தே வேலை’ (WFH - Work From Home) என்கிற புதிய வசதியாக உள்ளது. இது தவிர அண்மைக் காலமாகவே பெரு நகரங்களுக்குள் காணப்படும் வீட்டுமனை பற்றாக்குறை காரணமாக பல முன்னணி ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் சிறிய நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய நகரங்களை ஒட்டி இருக்கும் சிறு நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம் முழுக்க வரத் தொடங்கிவிட்டன.

Home (Representational Image)
Home (Representational Image)

அண்மைக் காலத்தில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரங்களில் நிறுவனங்களை அமைக்கக் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றன. இவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதிகளிலேயே வசிக்க ஆசைப்படுகிறார்கள். இதற்கு ஏற்ப பில்டர்கள் பல புராஜெக்ட்களை அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது புதிதாகப் பல பில்டர்கள் புறநகர்களில் மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லா திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

இந்தச் சிறிய நகரங்களில் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முன்பைவிட இப்போது நன்றாகவே இருக்கின்றன. மேலும், வீடுகள் கட்டுவதற்கு போதுமான நிலம் மற்றும் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது பில்டர்கள் இந்தச் சிறிய நகரங்களில் புராஜெக்ட்களை மேற்கொள்வதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நகரங்களில் வீடு வாங்க, வீட்டுக் கடன் வாங்குவது சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சமாக இருக்கிறது. இதுவே, பெரு நகரங்கள் என்றால் சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சமாக இருக்கிறது. இந்த அளவுக்கு அதிக தொகைக்கு வீட்டுக் கடன் வாங்கப் பலரும் யோசிக்கிறார்கள். காரணம், கோவிட் 19 பரவல் மிக அதிகமாகும்பட்சத்தில் தொழில், வேலை பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என யோசிக்கிறார்கள். மேலும், பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கும் சிறு நகரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால், சிறு நகரங்களில் வீடுகளின் விலை குறைவு என்பதால், அங்கு வேலை பார்ப்பவர்களில் பலருக்கு எளிதில் வாங்கும் தகுதி இருக்கிறது. மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 7 சதவிகித அளவுக்கு இறங்கியுள்ளது. திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு நிதி ஆண்டில் முறையை ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரிச் சலுகை இருப்பதும் சம்பளதாரர்களுக்கு வீடு வாங்குவதற்குத் தூண்டுதலாக இருக்கிறது.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன் துறை அதிக வளர்ச்சிக்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.

டி.லஷ்மிநாராயணன், எம்.டி, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
டி.லஷ்மிநாராயணன், எம்.டி, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
Vikatan

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை 3 நகரங்கள் அனைவருக்கும் கவர்ச்சிகரமான முதலீடாகவும் மாறி இருக்கின்றன. அதற்குப் பல காரணிகள் உள்ளன. வீடு கட்டுவதற்குப் போதுமான இடங்கள் கிடைக்கின்றன. குறைந்த செலவில் பெரிய வீடுகளை வாங்க முடியும். இந்த நகரங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிய குறைந்த சம்பளத்துக்குக் கிடைக்கிறார்கள். கட்டுமான பணி மேற்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னைகளும் குறைவாக உள்ளன. வீடு கட்டும் மனைக்கான விலை குறைவாக இருப்பது மற்றும் தொழிலாளர் சம்பளம் குறைவாக இருப்பது போன்றவற்றால் டெவலப்பர்களுக்கு அதிக லாப வரம்பு இருக்கிறது.

2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் ரியல் எஸ்டேட்டை மேம்படுத்த மத்திய அரசின் ஆதரவும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் & மூன்றாம் நிலை நகரங்களின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள்!

2 & 3-ம் நிலை நகரங்களின் முக்கிய சாதக அம்சங்கள் வருமாறு:

1. குறைந்த செலவில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகள்.

2. காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு குறைவு.

3. போக்குவரத்து நெரிசல் குறைவு

4. வாழ்க்கைச் செலவு மிதமானது.

5. குறைந்த செலவில் வாழ்க்கைத் தரம் நன்றாக உள்ளது.

6. வீட்டு மனையின் விலை குறைவாகவும் அனைவருக்கும் கிடைப்பதாக உள்ளது.

7. தொழில் / வியாபாரம் / வணிகம் செய்வதற்கான செலவு குறைவு.

2 & 3-ம் நிலை நகரங்களின் முக்கிய பாதக அம்சங்கள் வருமாறு:

1. சர்வதேச விமான இணைப்பு மிகக் குறைவு.

2. பொருளாதார செயல்பாடு குறைவு.

3. பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடு மிகக் குறைவாக இருப்பது.

4. பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது வேலை வாய்ப்புகள் குறைவு.

Real estate
Real estate

இரண்டாம் & மூன்றாம் நிலை நகரங்களில் சொத்து வாங்கப் போகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்தச் சிறிய நகரங்களில் மனை, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், வாங்குபவர்கள் சொத்தை இறுதி செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், ரியல் எஸ்டேட் துறையை நெறிப்படுத்தும் ரெரா (RERA) அமைப்பில் சொத்து பதிவு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா, அதன் பதிவு எண் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதோடும் உறுதிப்படுத்த வேண்டும். ஆவணங்களின் உண்மைத்தன்மையை வழக்கறிஞர் ஒருவரிடம் சட்டக் கருத்து பெற்று உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.

ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் / பில்டர்கள் சிறிய நகரங்களில் பலரிடமிருந்து நிலங்களை வாங்கியிருப்பார்கள். இந்தச் சிறிய இடங்களில் நகரத்தை (Township) உருவாக்கும்போது, டெவலப்பர்கள், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (Local Planning Authority – LPA - https://www.tn.gov.in/tcp/lpa_office.htm) திட்ட அனுமதி பெறுவதற்குப் பதிலாக, உள்ளாட்சி அமைப்பிடமிருந்து (Local Body) திட்ட அனுமதி பெறுகின்றனர். இதைப் பஞ்சாயத்து அப்ரூவல் என்பார்கள். இந்த அப்ரூவல் செல்லத்தக்கது அல்ல என்பதால் சிறிய நகரங்களில் வீட்டு மனை, வீடு வாங்குபவர்கள் இந்த அம்சத்தைச் சரிபார்க்க வேண்டியது மிக அவசியம்.

கோவிட்-19 தொற்றுநோய் நம் வாழ்க்கை வேலை, படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தையும் மாற்றிவிட்டது. அதாவது, கோவிட்-19 நமது ஒட்டுமொத்த உடல்நலம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை மாற்றி அமைத்திருக்கிறது. நெருக்கடி மற்றும் மாசு நிறைந்த பெருநகரங்களிலிருந்து விலகி, பசுமையான சிறிய நகரங்களுக்கு விசாலமான வீடுகளை நோக்கி கவனத்தைக் கணிசமாகத் திருப்பியுள்ளது.

மேலும், வருங்காலத் தேவை மற்றும் ஓய்வுக் காலத் தேவை, வார விடுமுறை இல்லம் / இரண்டாம் வீடு போன்றவற்றையும் சிறிய நகரங்களில் பலரும் வாங்கத் தூண்டியிருக்கிறது.

பெரிய நகரங்களிலிருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுடன் சுற்றுலாத் தலங்களில் உள்ள வீடுகளை வாங்குபவர்களும் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறார்கள். சுற்றுலா நகரங்களில் குறைந்த விலை, கணிசமான வாடகை வருமானம் மற்றும் நீண்ட காலத்தில் சொத்தின் மதிப்பு நன்றாக அதிகரிக்கும் என இப்படி வீடு வாங்குபவர்கள் நம்புகிறார்கள்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய சிறிய நகரங்கள்

தமிழ்நாட்டில் பெரிய நகரங்களையொட்டி உள்ள சிறிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம், திருப்பூர், சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

- டி.லஷ்மிநாராயணன், எம்.டி, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism