Published:Updated:

ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்: தீபாவளிக்குள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சேவை..!

5G சேவை
News
5G சேவை

இந்த ஆண்டு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அந்த நிறுவனத்தின் வாரிசுகளுக்கு எவ்வாறு பிரித்து தரப்பட போகிறது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்: தீபாவளிக்குள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சேவை..!

இந்த ஆண்டு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அந்த நிறுவனத்தின் வாரிசுகளுக்கு எவ்வாறு பிரித்து தரப்பட போகிறது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

Published:Updated:
5G சேவை
News
5G சேவை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் (ஏ.ஜி.எம்) அண்மையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் நிறுவனம் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள், வருமான இலக்கு, முதலீட்டாளர் நலன் சார்ந்த விஷயங்கள் போன்ற பல விஷயங்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதனால் வருடாந்தர பொது கூட்டங்கள் முதலீட்டாளர் மற்றும் சந்தை வல்லுநர்களால் உற்று நோக்கப்படும்.

ரிலையன்ஸ் அம்பானி
ரிலையன்ஸ் அம்பானி
reliance ambani

இந்த ஆண்டு நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அந்த நிறுவனத்தின் வாரிசுகளுக்கு எவ்வாறு பிரித்து தரப்பட போகிறது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு தற்போது 65 வயதாகிறது. அவருக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற இரண்டு மகன்களும் நிஷா என்ற மகளும் உள்ளனர்.

பொதுவாக பெரிய நிறுவனங்களில் சொத்துகளை பிரிக்கும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகும். ரிலையன்ஸ் நிறுவனத்திலும் முன்னதாக முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில்அம்பானி இடையே சொத்துகள் பிரிக்கப்படும் போது சர்ச்சைகள் ஏற்பட்டது. அதற்கு மாறாக தற்போது முகேஷ் அம்பானி தமது நிறுவனத்தின் சொத்துகளை முறையாக பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத் தகுந்த விஷயம் என்று பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோருக்கு டெலிகாம் மற்றும் ரீடைல் நிறுவனத்தில் உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை நிறுவனத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் (Anat) எரிபொருள் மற்றும் எனர்ஜி தொடர்புடைய நிறுவனங்களின் உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி,  முகேஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானி

நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் இஷா அம்பானி கலந்துகொண்டு தொலைத் தொடர்பு துறை சார்ந்த செயல்பாடுகளை முதலீட்டாளர்களுக்கு விளக்கினார்.

தொலை தொடர்பு துறையில் வரும் தீபாவளிக்குள் நமது நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் முழுமையான 5G சேவைகளை தமது நிறுவனம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் வேகமான 5 G சேவைகள் அறிமுகப்படுத்தப்படும், ஏற்கனவே உள்ள 4 G சேவைகளுக்கான கட்டமைப்பை பயன்படுத்தாமல் முழுவதும் புதிதாக 5 G சேவை கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

5G நெட்வொர்க்
5G நெட்வொர்க்

இந்தச் சேவைகள் முழுமையாக கிடைக்கும் பொழுது அதி நவீன மற்றும் விரைவான இன்டர்நெட் சேவைகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறினார். நாடு முழுவதும் சிறப்பான 5 G சேவைகள் வழங்குவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜியோ ஏர் பைபர் ஹாட்ஸ்பாட் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவான பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடி ரூபாய் பெட்ரோல் கெமிக்கல் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீடைல் துறையில் ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் whatsapp வசதியுடன் எளிமையான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் தற்போது வீட்டிற்கே பொருட்களை கொண்டு சேர்க்கும் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு பெருத்த வரவேற்பு உள்ளது. தற்போது ஜியோ மார்ட் இந்தச் சேவைகளை மேலும் நவீனபடுத்துவது இந்தத் துறையில் அதிக வருமானத்தை பெற்று தரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

சென்ற காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பொழுது அந்த நிறுவனம் தமது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூபாய் 8 டிவிடெண்ட் வழங்குவதற்கு பரிந்துரை செய்திருந்தது. நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்கிற்கு எட்டு ரூபாய் நேற்று இரவே அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நமது நாட்டில் முதல் முறையாக ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றே மிக விரைவாக முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் தொகை அளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 33 லட்சம் முதலீட்டாளர்கள் வைத்து இருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்தப் பணம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது காரணமாக அந்த நிறுவனத்தின் பங்குகள் பொது கூட்டத்திற்கு பிறகு 2% விலை ஏற்றம் கண்டது.