Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவின் டாப் 100 பிசினஸ் பெண்கள் பட்டியல்... முதலிடம் பிடித்த ரோஷினி நாடார் யார்?

ரோஷினி நாடார்
ரோஷினி நாடார்

வருவாய்க்கான ஆதாரம், அவர்கள் சார்ந்த தொழில்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின் இந்தப் பெண்கள் இடம் பிடித்துள்ளனர்...

கோட்டக் வெல்த் நிறுவனம் ஹுருன் (Kotak Wealth Hurun) என்ற நிறுவனத்துடன் இணைந்து 2020-க்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தப் பட்டியலில், இந்த முறை ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் சேர்பெர்சன் ஆன ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் முதல் பணக்காரப் பெண் (ரூ.54,850 கோடி) என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார்.

பயோகானின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா (ரூ.36,600 கோடி), யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி (ரூ.21,340 கோடி) ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

ரோஷினி - ஷிவ் நாடார்
ரோஷினி - ஷிவ் நாடார்

'கோடக் வெல்த் ஹுருன் லீடிங் வுமென் 2020' என்ற தலைப்பில் வெளியான இந்தப் பட்டியலில் 69 பேர் பரம்பரை செல்வந்தர்களாகவும் 31 பெண்கள் சுயமுன்னேற்றத்தால் முன்னேறியவர்களாகவும் உள்ளனர். மேலும், பட்டியலில் உள்ள 19% பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், 30% பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், கனிகா டெக்ரிவால் (ஜெட் செட்கோ), அஞ்சனா ரெட்டி (யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிஸ்), விதி சங்க்வி (சன் பார்மாசூட்டிகல்ஸ்) ஆகியோர் இந்தப் பட்டியலில் இளம்வயது பெண்களாக இடம்பெற்றுள்ளனர். திவ்யா கோகுல்நாத் (BYJU-ன் இணை நிறுவனர்) உட்பட ஆறு பெண்கள் ஸ்டார்ட் அப் மூலம் இந்த இடத்தை அடைந்துள்ளனர். இந்தப் பட்டியலைப் பொறுத்தவரை, பெண்கள் மருந்துகள், ஜவுளி, ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் அதிக பங்களிப்பை செய்துள்ளனர்.

business
business

"தொழில் துறைகளில் பெண்கள் வெற்றியாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போது எழுச்சி ஏற்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்பதை இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. பெண்களின் தேவை இன்றியமையாத வகையில் வளர்ந்து வருகிறது" என வெல்த் மேனேஜ்மென்ட் கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓஷார்யா தாஸ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வருவாய்க்கான ஆதாரம், அவர்கள் சார்ந்த தொழில்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின் இந்தப் பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

HCL: `விலகிய ஷிவ்  நாடார்’ - தலைமைப் பொறுப்பேற்கும் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா

யார் இந்த ரோஷினி நாடார்?

தமிழகத்தைச் (திருநெல்வேலி) சேர்ந்த ஷிவ் நாடாரின் ஒரே மகள்தான் இந்த ரோஷினி நாடார். ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார் விலகிய பிறகு, ரோஷினி நாடார், கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ரோஷினி நாடார்
ரோஷினி நாடார்

இவருடைய கணவர் பெயர் ஷிக்தர் மல்கோத்ரா. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு வர்த்தகம் தவிர, இசை, யோகா போன்றவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. இவர் வளர்ந்தது புது டெல்லியில். அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமான இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அதோடு கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் நிர்வாகவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு