Published:Updated:

பங்கு முதலீட்டில் பக்கா லாபத்துக்கு 10 கட்டளைகள்!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

கவர் ஸ்டோரி

பங்கு முதலீட்டில் பக்கா லாபத்துக்கு 10 கட்டளைகள்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.rkgcapitalgains.com/

நவீன வாழ்க்கை முறை மாற்றத்தால், முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம், வருமானத்துக்கு வரி அனுகூலம் பெற நினைப்ப வர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, பொறுமை மிக முக்கியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதுபோல் பங்குச் சந்தையையும் ஆள்வார் எனச் சொல்லலாம்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
https://www.rkgcapitalgains.com/
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.rkgcapitalgains.com/

பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் ஈட்ட கீழ்க்கண்ட 10 கட்டளைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

1. நீண்ட கால முதலீடு... கவனம் கொள்ளுங்கள்!

நம்மில் பலர் பங்குச் சந்தை முதலீட்டுக்கு வரக் காரணம், அது கொடுக்கும் அபரிமிதமான வருமானம் ஆகும். எந்த அளவுக்கு பங்குச் சந்தை அதிக வருமானம் கொடுக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ரிஸ்க்கும் இருக்கிறது. அதே நேரத்தில், அந்த ரிஸ்க் என்பது நீண்ட காலத்தில் பரவலாக்கப்பட்டு விடுகிறது.

இந்தியப் பங்குச் சந்தையில் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட பங்கு முதலீட்டின் மூலம் இழப்புக்கு வாய்ப்பில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன. நீண்ட காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியாக 15% அளவுக்கு வருமானம் கொடுத்து வருகிறது. பங்குச் சந்தை மற்றும் நிறுவனப் பங்கு கொடுக்கும் வருமானம் என்பது யாராலும் சரியாகக் கணிக்க முடியாததாக இருக்கிறது. காரணம், ஒரு நிறுவனப் பங்கின் விலையில் ஏற்படும் மாற்றம் என்பது அந்த நிறுவனத்துக்குள் நடக்கும் விஷயங்கள், உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், உலக அளவில் நடக்கும் நிகழ்வுகள் எனப் பலவற்றைச் சார்ந்திருப்பதாகும்.

ஆனால், நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாப செயல்பாடு சிறப்பாக இருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்தின் பங்கு விலை நீண்ட காலத்தில் நன்றாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பங்குச் சந்தையில் லாபம் பார்க்கும் சூத்திரமாக அனைவரும் சொல்வது, குறைந்த விலையில் வாங்கி, அதிக விலையில் விற்பதாக இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. உண்மையைச் சொல்வது எனில், சந்தையில், பங்கு விலையின் ஏற்ற இறக்கத்தைக் கணிப்பது அவ்வளவு சுலபமில்லை. அதே நேரத்தில், சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனப் பங்கின் விலை, இடையில் ஏதாவது காரணங்களுக்கு இறங்கினாலும் நீண்ட காலத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும். அந்த வகையில், நல்ல நிறுவனத்தை அடையாளம் கண்டு, அதன் பங்கில் எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் முதலீடு செய்து வர வேண்டும்.

ஒட்டுமொத்த சந்தை இறக்கத்தின்போது நல்ல நிறுவனப் பங்குகளின் விலையும் இறக்கம் காணும். அப்போது காத்திருந்து முதலீடு செய்யலாம். அல்லது அப்போது கூடுதலாக முதலீடு செய்யலாம். இப்படிச் செய்யும்போது சராசரியாக நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பங்கு முதலீட்டில் பக்கா லாபத்துக்கு 10 கட்டளைகள்!

2. நீங்களே அலசி ஆராயுங்கள்!

யார் எந்தப் பங்கை பரிந்துரை செய்தாலும், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் பழக்கத்தைக் கைவிட்டு விடுங்கள். எந்தப் பங்காக இருந்தாலும், அதை நீங்கள் அலசி ஆராய்ந்து அதன் பிறகு, முதலீட்டு முடிவை எடுங்கள். அதற்கு பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடுகள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

எந்த மாதிரியான உள்நாடு மற்றும் சர்வதேச பொருளா தாரப் போக்குகள் பங்குச் சந்தையைப் பாதிக்கும். ஒரு நிறுவனத்தில் எந்த மாதிரியான சிக்கல் வந்தால் பங்கு விலை இறங்கும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

ஒரு நிறுவனத்தின் கடந்த கால வருமானம் மற்றும் லாப செயல்பாடுகள் பற்றி ஆராயும் அதேநேரத்தில், எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கவனிப்பது அவசியமாகும்.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் எப்போதும் சரியான ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம். ஆனால், இது அரிதாகவே செய்யப்படுகிறது.

பொதுவாக, முதலீட்டாளர்கள் வேலைபார்க்கும் நிறுவனம் சார்ந்த துறை பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். இது தவறு. காரணம், ஒரு குறிப்பிட்ட துறை பாதிக்கப்படும் போது, அந்தத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் பாதிப்பு வரும். அந்தத் துறை சார்ந்த பங்குகளின் விலையும் இறக்கம் காணும். இந்த நிலையில், வேலையிலும் சிக்கல், பங்கு முதலீட்டிலும் சிக்கல் என இரட்டை பிரச்னை வரக்கூடும். எனவே, பணிபுரியும் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது அவசியத்திலும் அவசியம்.

3. சரியான விலையில் வாங்குங்கள்; விற்பனை செய்யுங்கள்!

எந்த நிறுவனப் பங்கை வாங்க வேண்டும் என்பதை அடிப்படைப் பகுப்பாய்வு (Fundamental Analysis) மூலம் முடிவு செய்யலாம். எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதைத் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical analysis) மூலம் முடிவு செய்யலாம். பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க சரியான விலையில் வாங்குவதும் சரியான விலையிலும் விற்பதும் மிக முக்கியமாகும்.

பங்குச் சந்தையின் இயல்பு ஏற்ற இறக்கம் ஆகும். ஏதாவது காரணத்தால் பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சியைச் சந்திக்கும் போது, நல்ல நிறுவனப் பங்கு களின் விலையும் சரியும். அப்போது பதற்றப்பட்டு அல்லது அவசரப்பட்டு நஷ்டத் தில் இருக்கும் அல்லது சிறிது லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்றுவிட வேண்டாம்.

நீங்கள் முதலீடு செய்திருப்பது, நல்ல நிறுவனப் பங்காக இருக்கும் பட்சத்தில், அடிப்படையில் வலுவான நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் நிலவரம் சரியானதும் அதன் விலை கட்டாயம் ஏற்றம் காணும்.

நல்ல பங்கை நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில், சந்தை இறக்கத்தின்போது, அதை விற்ப தற்கு பதில், மலிவாகக் கிடைக்கும் அந்தப் பங்கை இன்னும் அதிகமாக வாங்கிச் சேர்க்கத் தயங்கக் கூடாது. அதே நேரத்தில், அடிப் படையில் வலுவில்லாத நிறுவனப் பங்கு விலை குறைந் திருக்கும்போது, பெரும்பாலானோர் வாங்கு கிறார்கள் என்பதற்காக வாங்கக் கூடாது.

4. தொடர் முதலீடு செய்யுங்கள்!

பங்குச் சந்தை முதலீடு என்கிற போது எப்போதும் ஒரே முறையாக மொத்தமாகச் செய்யக் கூடாது. மொத்த முதலீட்டை மேற்கொண்டபிறகு சந்தை அதிகமாகச் சரிந்துவிட்டால் மீண்டுவருவதற்கு அதிக காலம் எடுக்கும். இதனால், முதலீட்டுத் தொகையை நான்கு அல்லது ஐந்து பிரிவாகப் பிரித்து வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடை வெளியில் முதலீடு செய்யலாம்.

இதைவிட சிறந்த வழி, மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்வதாகும். இப்படிச் செய்யும்போது நல்ல நிறுவனப் பங்கைத் தேர்வு செய்வது மிக முக்கியம். தொடர்ந்து முதலீடு செய்து வரும்போது வாங்கும் விலை சராசரியாகி ‘Rupee cost average’ என்கிற முறையில் சராசரியாக நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக் கிறது. தொடர்ந்து முதலீடு செய்யும்போது முதலீட்டுத் தொகை பெரிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறிய தொகையைக்கூட மாதம்தோறும் முதலீடு செய்துவரலாம்.

5. முதலீட்டைப் பிரித்து செய்யுங்கள்!

பல்வேறு பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது (Diversification) என்பது பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் ஈட்டுவதற்கான பழைமையான உத்தியாகும். அதாவது, அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பது எப்படி அதிக ரிஸ்க்கானதோ, அதேபோல்தான் மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவனப் பங்கில் போடுவதாகும்.

எப்போதும் ஒரே ஒரு பங்கு அல்லது ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாகச் செயல்படும் எனக் கருதி அதில் முதலீடு செய்யக் கூடாது. ஒருவர் முதலீடு செய்திருக்கும் குறிப்பிட்ட துறையும் அந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்கும் சரியாகச் செயல்படாமல் போனால் சிக்கல்தான். எனவே, பல் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பங்குகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது அவசியாகும்.

ஒருவர் குறைந்தது 3 அல்லது 5 துறைகளைச் சேர்ந்த நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க முடியும். உதாரணமாக, (பரிந்துரை அல்ல) தகவல் தொழில்நுட்பம், பார்மா, ரியல் எஸ்டேட், நிதிச் சேவை மற்றும் வாகனம் என்பது போன்ற துறைகளில் முறையே டி.சி.எஸ், லூபின், டி.எல்.எஃப், ஹெச்.டி.எஃப்.சி, டிவிஸ் மோட்டார் கம்பெனி பங்குகளில் முதலீடு செய்யலாம்.

சிலர் மிகப்பெரிய நிறுவனப் பங்குகளான லார்ஜ்கேப் பங்கு களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். அப்படிச் செய்யும் போது ரிஸ்க் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், வருமானமும் குறைவாகத்தான் இருக்கும்.

பங்கு முதலீட்டுக் கலவை மூலம் நல்ல லாபம் பார்க்க அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட பங்குகளிலும் முதலீட்டைப் பரவலாக்க வேண்டும். அதாவது, லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்ய வேண்டும். 3 - 5 ஆண்டுகள் முதலீட்டுக் காலம் என்கிறபட்சத்தில், லார்ஜ்கேப் பங்குகள் சரியாக இருக்கும். இதுவே முதலீட்டுக் காலம் 5 முதல் 10 ஆண்டுகள் எனில் மிட் கேப் பங்குகளும், 10 ஆண்டு களுக்கு மேற்பட்ட முதலீட்டுக் காலம் எனில், ஸ்மால்கேப் பங்குகளும் பொருத்தமாக இருக்கும்.

6. டிப்ஸ், வதந்திகளின் அடிப்படை யில் முதலீடு செய்யாதீர்கள்!

பலரும் டிப்ஸ் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் பங்கு முதலீட்டை மேற்கொள் கிறார்கள். இப்படிச் செய்வது மூலம் பெரும்பாலும் இழப்பையே சந்திக்க வேண்டி யிருக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்க இப்படிப்பட்ட விஷயங்களில் இருந்து விலகியிருப்பது மிக முக்கியமாகும்.

பொதுவாக, பங்குச் சந்தையில் பெரும் பாலானோர் ஒரு பங்கில் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக அந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதாவது, ஆட்டு மந்தை மனநிலையில் (Herd mentality) செயல்படுவது சரியில்லை. அது உங்களின் மூலதனத்தை இழக்க வழி வகுக்கக்கூடும்.

உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட், “மற்றவர்கள் பேராசையுடன் இருக்கும்போது பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும்போது பேராசையுடன் இருங்கள்!” என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்க தாகும். அதாவது, மற்றவர்கள் பங்கின் விலையைத் துரத்திக்கொண்டு போய், அதிக விலையில் முதலீடு செய்யும்போது விலகியிருங்கள்; விலை குறையும்போது, மற்றவர்கள் பயத்தில் விற்கும்போது முதலீடு செய்யுங்கள் என்பதாகும்.

நிறுவனங்களின் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மற்றும் பங்குகளின் டெக்னிக்கல் அனாலிசிஸில் கூடுதல் கவனம் செலுத்தவும். இவற்றைக் கற்றுக்கொள்ள முயலவும். அப்படி இல்லை எனில், இந்த இரண்டிலும் திறமையாக இருப்பவர்களின் உதவியை நாடுவது மூலம் பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

7. நிறுவனங்களின் வணிகத்தைக் கவனியுங்கள்!

நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனத் தின் வணிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகே அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யுங்கள். உலகின் வெற்றிகரமான முன்னணி முதலீட்டாளர் களில் ஒருவரான வாரன் பஃபெட் இப்படிதான் முதலீடு செய்திருக்கிறார்.

நிறுவனத்தின் வணிக மாடல் மற்றும் உத்தி சிறப்பானதாக இருக்க வேண்டும். மேலும், எதிர் காலத்திலும் அந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படும் விதமாக அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இருக்க வேண்டும். மேலும், நிதி நிலையில் மிகவும் வலிமையாக இருப்பது நல்லது.

8. கடன் இல்லாத நிறுவனமா எனக் கவனியுங்கள்!

கூடிய வரையில் பங்கு முதலீடு செய்யும் நிறுவனத்துக்கு கடன் இல்லாமல் இருப்பது நல்லது. அப்போதுதான் கொரோனா பாதிப்பு போன்ற இக்கட்டான நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும்.

அப்படியே கடன் இருந்தாலும் குறைவாக இருக்க வேண்டும்; அதற்கான வட்டியும் குறைவாக இருக்க வேண்டும். கடனை விரைந்து அடைப்பதற்கான நடவடிக்கை யில் ஈடுபட்டு வர வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

9. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கடன் வாங்காதீர்கள்!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வலியுறுத் தும் கருத்து இதுவாகும். பங்கு முதலீடு அதிக ரிஸ்க் ஆனது என்பதால், குறுகிய காலத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டின் மதிப்பு குறையக்கூடும். கூடவே கடன் வட்டி கட்ட வேண்டியிருக்கும். திடீர் சிக்கல் ஏதாவது வந்தால், பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்திருக்கும் பட்சத்தில், அவற்றை விற்றுக்கூட கடனை அடைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

ஒரு விஷயத்தை முதலீட் டாளர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. உபரிப் பணத்தைதான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலத் தேவைக்கு வைத்திருக்கும் தொகையை எக்காரணம் கொண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது.

10. முதலீட்டை மேற்பார்வை செய்யுங்கள்!

பலர் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, அதைக் கவனிப்பது இல்லை. ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பது போல் முதலீட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை யாவது மேற்பார்வை மற்றும் மறுஆய்வு (Review) மேற்கொள்வது அவசியமாகும். பங்குச் சந்தை முதலீடு என்பது ஃபிக்ஸட் டெபாசிட் போன்றது அல்ல. அதன் மதிப்பு மற்றும் செயல்பாடு எப்போது வேண்டுமானாலும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பதால், அதன் செயல் பாட்டைக் காலாண்டுக்கு ஒருமுறையாவது கவனிப்பது அவசியமாகும்.

மேற்கண்ட 10 கட்டளை களைப் பின்பற்றினால் பங்குச் சந்தை முதலீட்டில் நிச்சயம் லாபம் பார்க்க முடியும்.

நியாயமான லாபம் எதிர்பார்க்கவும்..!

பங்குச் சந்தை மூலம் ஆண்டுக்கு 50%, 100% லாபம் வேண்டும் எனச் சில அநியாயத்துக்கு ஆசைப்படுகிறார்கள். இது மிகப் பெரிய தவறாகும். பொதுவாக, பங்குச் சந்தையின் மூலம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்க விகிதத்தைக் கூட்டினால் கிடைக்கும் கூட்டு எண் அளவுக்கு லாபம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7%. பணவீக்க விகிதம் 6% எனில், பங்குச் சந்தை முதலீடு மூலம் 13% அல்லது அதிகபட்சம் 15% வருமானம் எதிர் பார்க்கலாம். ஆண்டுக்கு 15 சதவிகிதத்துக்குமேல் லாபம் கிடைக்கும்போது அஸெட் அலொகேஷன்படி, வேறு ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு லாபத்தை மாற்றுவது புத்திசாலித்தனமாகும்.

சரியான நேரத்துக்காக காத்திருக்காதீர்கள்..!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர், நேரம் பார்த்து சந்தைக்குள் (Timing themarket) நுழையலாம் என நினைக்கிறார்கள். சந்தை இறக்கத்தில் இருக்கும்போது இன்னும் நன்றாக இறங்கட்டும் என சிலர் காத்திருக்கிறார்கள். ஆனால், சந்தையோ சிறிது இறங்கிவிட்டு மேலேறிவிடுகிறது. இன்னும் சிலர் சந்தை புதிய உச்சத்தில் இருக்கிறது. இப்போது அதிக விலையில் கொடுத்து வாங்குவதா என இறக்கத்துக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அப்போது சந்தை இறங்காமல் மேலே சென்று விடுகிறது. எனவே, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.

இதுவரைக்கும் யாராலும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை 100% கணிக்க முடிந்ததில்லை. அதைத் துல்லியமாகக் கணிக்கவும் முடியாது. டெக்னிக்கல் அனாலிசிஸ் அதற்கு ஓரளவுக்கு கைகொடுக்கும். பங்குச் சந்தையின் உச்சம் மற்றும் அடியைக் கணிப்பது என்பது யாராலும் இயலாத காரியமாகும்.

இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் எப்போது?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2019–ம் ஆண்டு 2.9 டிரில்லியன் டாலராக வளர்ச்சி கண்டிருந்தது. ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடியாகும். கோவிட் பாதிப்பால் இந்தியாவின் ஜி.டி.பி 2020-ம் ஆண்டில் 2.7 டிரில்லியன் டாலராகக் குறைந்துபோனது. கோவிட் ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் 2020-21 ஜூன் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு 24.4% இறக்கம் கண்டது. 2020-21-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.3% வீழ்ச்சி கண்டது. 2022 ஜனவரியில் இந்தியாவின் ஜி.டி.பி 3.1 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. 2022 மார்ச்வுடன் முடிவடையும் 2021-22-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 9.2 சதவிகிதமாக இருக்கும்; இது உலக நாடுகளிலேயே மிகவும் வேகமான வளர்ச்சியாக இருக்கும் என மத்திய அரசு கணித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு கொரானா பாதிப்புக்கு முன்னால் இந்தியாவின் ஜி.டி.பி 2025–ம் ஆண்டு 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், கோவிட் பாதிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இறக்கிவிட்டிருக்கிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ஜி.டி.பி 9.5% வளர்ச்சி கண்டால்தான் இந்தியாவின் ஜி.டி.பி 2025-ல் 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும். இல்லையெனில், 2030-ம் ஆண்டில்தான் இந்தியாவின் ஜி.டி.பி 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக உயரும்.

இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துதான் லாபம் ஈட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. நாட்டின் மக்கள் தொகை அதிகம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை பரப்பி உள்ளதால், உள்நாட்டு நுகர்வே பல நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டி தரும் விஷயமாக இருக்கிறது. உள்நாட்டில் அதிக விற்பனை செய்யும் மற்றும் அதிக சேவைகளை அளிக்கும் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது. எதிர்கால வளர்ச்சி உள்ள பார்மா, ஐ.டி, டிஜிட்டல், நிதிச் சேவை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளைச் சார்ந்த நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யும்போது நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism