நடப்பு
Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்கலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்கலாம் !

புல்லிஷ் டிரெண்ட் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் வாய்ப்பு இருக்கின்றது என்றும், செய்திகள் நெகட்டிவ்வாக இல்லாதபட்சத்தில் அடுத்த வாரம் முழுவதுமே இந்த சூழல் தொடர்ந்துவிட லாம் என்றும், இதுபோன்ற அதீத புல்லிஷ் டிரெண்ட் இருக்கும்போது ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது என்றும் சொல்லி யிருந்தோம்.

மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சிறிய எண்ணிக்கையில் ஏறியும், ஒருநாள் இறங்கியும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வெள்ளியன்று வாராந்திரரீதியாக ஏறக்குறைய 14 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் திங்களன்று பேலன்ஸ் ஆஃப் டிரேட் டேட்டாவும், புதனன்று இன்ஃப்ளேஷன், மேனுபேக்சரிங் புரொடக்‌ஷன் (YoY), இண்டஸ்ட்ரியல் புரொடக்‌ஷன் (YoY),  வெள்ளியன்று ஹோல்சேல் பிரைஸ் இன்ஃப்ளேஷன் (YoY)  போன்ற இந்திய டேட்டாக்கள் வெளிவர இருக்கின்றன.
அமெரிக்க டேட்டாக்களில் வியாழனன்று ஜாப்லெஸ் கிளைம் டேட்டாவும், வெள்ளியன்று ரீடெயில் சேல்ஸ் (YoY) மற்றும் எம்ஓஎம், ரீடெயில் ஆட்டோ சேல்ஸ் மற்றும் மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்ட் டேட்டா போன்ற டேட்டாக்கள் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும்.
பொதுவான, சென்டிமென்ட் பாசிட்டிவ்வாக இருப்பதால், ஒரு ரேஞ்ச்பவுண்ட் ஏற்றம் தொடர்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்கலாம் !


 செய்திகள் நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்திலும், இரண்டுக்கு மேற்பட்ட நெகட்டிவ் குளோஸிங்குகள் வரும்பட்சத் திலுமே இறக்கம் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

தற்போது இருக்கும் சூழலில் டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகப் போய்விடும் வாய்ப்பு அதிகம் இருக்கின்ற படியால், டெக்னிக்கல் டிரேடர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் டிரேட் செய்ய வேண்டும்.

பெரிய அளவிலான ஓவர்நைட் பொசிஷன்களை தவிர்ப்பதே நல்லது. வேகமான ஏற்றம் என்பதை எதிர்பார்த்து பெரிய அளவிலான பொசிஷன்களை எடுக்காதீர்கள்.

07/11/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்&: போனிக் ஸ்லேம்ப்ஸ் (137.70), இந்தியன் பேங்க் (172.20),ஜூப்லியன்ட் ஃபுட்(1281.85), எம்ஆர்பிஎல்(60.90), கெடில்லா ஹெல்த்கேர்(1491.75) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் இந்தியாபுல் ஹவுஸிங்(461.80), செஞ்சுரிப்ளை(145), விப்ரோ (553.45), அலோக் டெக்ஸ்ட்(11.95), சவுத் பேங்க்(27.75), காமன் இன்ஃப்ரா(19.05), பிடிசி(91.30), கிராம்ப்டன் கிரீவ்ஸ்(188), எஸ்பிஐ(2742.50), ஆர்பிட் கார்ப்(18), ஜெயின் இர்ரிக்கேஷன் (83.75), ஐசிஐசிஐ பேங்க்(1684.70), டிவி18 ப்ராட்காஸ்ட்(29.30)நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்கலாம் !

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஹிந்த் யூனிலீவர்(761.50), ராம்ட்ரான்ஸ்போர்ட்ஃபைனான்ஸ்(970.85), இசட்இஇஎல் (371.90), நெக்லைஃப்(41.70), ரெடிங்டன்(101.65), மேக்ஸ்வெல்(30.10), டாக்டர் ரெட்டி (3397.15), கேஇஐ(42.50), லூபின் (1419.35), இன்ட்ராட் மெட்கோ(56.40), ஹிமாத் சிங்காசீட்(100.75)
 
உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): விப்ரோ(553.45), அம்டெக் ஆட்டோ (93.80), ஸ்டார்(675.10), ட்ரீஹவுஸ் (444.90), எம்ஹெச்ஆர்ஐஎல்(278.40) சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: மைண்ட்ட்ரீ(1102.85), சைகாம்(125.75), மேக்ஸ்வெல்(30.10), டாக்டர்ரெட்டி(3397.15), ஜிஎஸ்பிஎல் (97.50), எஃப்எஸ்எல்(41.45), ப்ரகாஷ் (63.20), டாடா குளோபல்(160.90), ஹிந்த் பெட்ரோ(571.15), மணலி பெட்ரோ(17.15), இன்ட்ராட் மெட்கோ(56.40) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

 சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஹிந்த்சிங்க்(165.85), அம்புஜா சிமென்ட்(221.95), பிஎஃப்சி(282.55), எஸ்எஸ்எல்டீ(246.10), எம்இஜிஹெச் (27.25), சியுபி(81.55) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

 வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ஜோதி லேப்(246.70), இந்தியாபுல் ஹவுஸிங் ஃபைன்(461.80), விப்ரோ (553.45), ஐடிசி(355.65), ஹீரோ மோட்டோகோ(2887.60), பார்திஏர்டெல் (390.85), என்எம்டிசி(157.75), எக்ஸைடு இண்ட் (160.75), அலோக் டெக்ஸ்ட்(11.95), அம்புஜா சிமென்ட்(221.95), கோல் இந்தியா (344.55), மாதர்சன் சுமி(428.25), ஐஓசி(375.20). தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

 வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஹெச்டிஎஃப்சி(1099.75), ஏசியன் பெயின்ட்(646.10), என்டிபிசி (144.45), ரிலையன்ஸ் (980.50), டிசிஎஸ் (2572.85), சவுத் பேங்க் (27.75), ஜிஎஸ்எஃப்சி (113.75), பவர்கிரிட் (144.90), அர்விந்த் ரெமடீஸ் (46), எம் அண்ட் எம் ஃபைன் (310), யுபிஎல் (333.35), பிடிசி (91.30) இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

 வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: எஸ்கேஐஎல் (34.85), போனிக்ஸ்லேம்ப்ஸ்(137.70), தீபக் நைட்ரைட் (86.70), ஜேகே லட்சுமி (400.25), சைகாம்(125.75), ரெடிங்டன்(101.65), மேக்ஸ்வெல்(30.10), கேஇஐ(42.50), எஃப்எஸ்எல் (41.45), எ2இசட்எம்இஎஸ் (26.25), எஸ்ஜேவிஎன் (25.30), மணலி பெட்ரோ(17.15), இன்ட்ராட் மெட்கோ(56.40).

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபரத்துக்கு தவிர்க்கவும்.