Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாரத்தின் இறுதியில் இறக்கம் வரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாரத்தின் இறுதியில் இறக்கம் வரலாம்!

பிரீமியம் ஸ்டோரி

பொதுவான      சென்டிமென்ட் பாசிட்டிவ்வாக இருப்பதால் ஒரு ரேஞ்ச் பவுண்ட் ஏற்றம் தொடர்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும், செய்திகள் நெகட்டிவ்வாக இருக்கும்பட்சத்திலும் இரண்டுக்கு மேற்பட்ட நெகட்டிவ் குளோஸிங்குகள் வந்தால்தான் இறக்கம் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

ஐந்து டிரேடிங் தினங்களிலும் ரேஞ்ச் பவுண்ட் மூவ்மென்ட்டிலேயே இருந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஏறக்குறைய 52 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் முக்கிய இந்திய டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லை. அமெரிக்க டேட்டாக்களில் திங்களன்று இண்டஸ்ட்ரியல் புரொடக்‌ஷன் டேட்டாவும், செவ்வாயன்று பிபிஐ டேட்டாவும், வியாழனன்று எஃப்ஓஎம்சி மினிட்ஸ், இன்ஃப்ளேஷன் டேட்டாவும், ஜாப்லெஸ் க்ளைம் டேட்டாவும் வெளிவர இருக்கின்ற முக்கிய டேட்டாக்களாகும்.

வரும் வாரம் சற்று புல்லிஷ் டிரெண்டில் ஓப்பன் ஆக வாய்ப்பிருக்கிறது. என்றாலுமே, வாரத்தின் இறுதியில் நல்லதொரு வாலட்டைலிட்டியுடன் இறக்கத்தில் முடிவடைந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம். எனவே, ஓவர்நைட் பொசிஷன்களை புதன்கிழமைக்குமேல் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

வாலட்டைலாக மாறினால் சந்தை இறங்கும்போது ரெக்கவரியை எதிர்பார்த்து லாங் சைடு டிரேடிங் செய்யலாமே தவிர, கணிசமான இரண்டு நெகட்டிவ் குளோஸிங் வராதவரை டிரெண்ட் மாறிவிட்டது என்று டிரேடர்கள் ஷார்ட் சைடு வியாபாரத்தில் இறங்கிவிடக்கூடாது. கவனம் தேவை.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாரத்தின் இறுதியில் இறக்கம் வரலாம்!

14/11/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

 புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

 பஜாஜ்ஆட்டோ (2652.85), ஓஎன்ஜிசி (393.25), கோல்இந்தியா (356.30), சின்டெக்ஸ் (94.95), ஷிவம் ஆட்டோ (74.60), ப்ராஜ்இண்ட் (73.85), எம்இஜிஹெச் (29.85), புஞ்ச்லாயிட் (40.55)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

  புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

ஐடிசி(369.20), என்ஐஐடிலிட் (50.95), இகேசி (15.25), டெக்ஸ்இன்ஃப்ரா (47.45), டாடாமோட்டார்ஸ் (523.90), அக்ஷ் ஆப்டிபைபர் (17.30), காக்ஸ்அண்ட்கிங்ஸ்(308.55), டாபர்(231.35)-நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

ஏசியன்பெயின்ட் (672.20), எடெல்வெய்ஸ் (58.15), டிவி18ப்ராட்காஸ்ட் (29.55), ருச்சிசோயா (41.55), ஓபராய்ரியாலிட்டி (254.95), காஸ்ட்ரால் (442.05), ஜிஎஸ்பிஎல் (103.80), டிக்யூஇ (26.30), ஆர்ச்சீஸ் (31.90), ஹெச்டிஎஃப்சிபேங்க் (930.10), ஷிவம்ஆட்டோ (74.60), ப்ராஜ்இண்ட் (73.85).

  உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

பிப்பாவ்டாக் (38.50), பினோலெக்ஸ்பைப்(285.30), அர்விந்த்ரெமடீஸ் (36.75), அலோக்டெக்ஸ்ட் (11.30).

 சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாரத்தின் இறுதியில் இறக்கம் வரலாம்!

என்டீபிசி (143.10), டிடிபவர்சிஸ் (439.50), ஏசியன்பெயின்ட்(672.20), பிடிலைட்(414.55), பஜாஜ் ஆட்டோ (2652.85), டிசிஎஸ் (2606.45), கேஸ்ட்ரால் (442.05) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபரத்துக்குத் தவிர்க்கவும்.

  சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்:

 டிஎஃப்சிஐலிட் (46.75), என்ஐஐடிலிட் (50.95), பெடரல் பேங்க் (139.60), டாடாமோட்டார்ஸ் (523.90), பால்கிருஷ்ணாஇண்ட் (690.80), ஜெயின்இர்ரிகேஷன் (82.25), எம்ஆர்பிஎல் (57.25), எல்டி(1621.65), சிண்டிகேட் பேங்க்(126.50)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

 வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்:

ராம் டிரான்ஸ்போர்ட்ஃபைன் (1043.10), என்டிபிசி(143.10), மெக்லியோட்ரஸ்ஸல் (242.30), டெக்ஸ்ரயில் (109.90), ஏசியன்பெயின்ட் (672.20), கெயில் (489.70), சவுத் பேங்க்(27.40), ஃபெடரல்பேங்க் (139.60), ஐபிபவர் (12.05), கெர்ய்ன் (267.70), ஜிஎஸ்பிஎல்(103.80), லஷ்மிவிலாஸ் (88.40), பிபிசிஎல் (734.85), டாடாமோட்டார்ஸ் (523.90), சன்பார்மா (886.75), அக்ஷ்ஆப்டிபைபர்(17.30), ஹெச்டிஎஃப்சிபேங்க் (930.10) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

 வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஐடீசி(369.20), ஐசிஐசிஐபேங்க்(1692.30), டிவி18ப்ராட்காஸ்ட் (29.55), விப்ரோ (563.90), டாடாகுளோபல்(155.25), என்எம்டிசி (154.85), பவர்கிரிட்(144.10), ஓஎன்ஜிசி(393.25), பார்திஏர்டெல் (388.35), எம்டிஎன்எல்(28.45), சுஸ்லான்(14.25), ஹெச்டிஎஃப்சி(1126.25), கோல்இந்தியா(356.30), ரிலையன்ஸ்(969.15), இசட்ஈஈஎல்(376.15), எக்சைட்இன்ட்(161), எல்ஐசிஹவுஸிங்ஃபின் (420.65), சின்டெக்ஸ்(94.95), ஜெயின் இர்ரிக்கேஷன் (82.25)- இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

 வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: டீடிபவர்சிஸ் (439.50), கேசிபி(60.10), ருச்சிசோயா (41.55), கிரீன்பவர் (15.55), ஜிஎஸ்பிஎல் (103.80), ஜேஎஸ்எல் (34.65), ஷிவம்ஆட்டோ (74.60), ப்ராஜ்இண்ட்(73.85), எவரெடி (159.85), ஹோட்டல்லீலா (26),  புஞ்ச்லாயிட் (40.55).
மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபரத்துக்கு
தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு