Published:Updated:

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

Published:Updated:

இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ள கம்பெனி, இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ் எனும் ஆட்டோமொபைல்களுக்கான எலெக்ட்ரிக்கல் உபகரணங் களைத் தயாரிக்கும் நிறுவனம். 1984-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 1986-ம் ஆண்டு லூகாஸ் இந்தியன் சர்வீசஸ் லிட் (லூகாஸ்-டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்) மற்றும் ஜப்பானிய நிறுவனமான கோகுசென் டென்கி கம்பெனி லிமிடெட் (ஹிட்டாச்சி நிறுவனத்தின் துணை நிறுவனம்) என்ற இரண்டு நிறுவனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனமாக (ஜாயின்ட் வெஞ்சர்) மாற்றப்பட்டது.

இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் போர்ட்டபிள் இன்ஜின்களுக்கான எலெக்ட்ரானிக் இக்னீஷன் சிஸ்டம் தயாரிப்பதற்காகத் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். காலப்போக்கில் இந்திய அளவில் அனைத்து இருசக்கர, மூன்று சக்கர மற்றும் ஜெனரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இக்னீஷன் அசெம்ப்ளியை சப்ளை செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஓசூரில் முதல் தொழிற்சாலையை ஆரம்பித்த இந்தியா நிப்பான், தற்போது புதுச்சேரி யிலும் ஹரியானாவில் உள்ள ரேவாரி என்ற இடத்திலுமாகச் சேர்ந்து மூன்று தொழிற்சாலைகளைத் தன்வசத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று தொழிற்சாலைகளிலுமே இரண்டு/மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கான டிஜிட்டல் மற்றும் அனலாக் இக்னீஷன் அசெம்ப்ளி உற்பத்தி செய்யப்படு கின்றது. 

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

தொழில் என்ன?

இந்தியா நிப்பான் தனது தொழிற்சாலையில் ஃப்ளைவீல் மேக்னட்டோ ஏசி ஜெனரேட்டர்கள், கெப்பாசிட்டர் டிஸ்சார்ஜ் இக்னீஷன் யூனிட்கள், இக்னீஷன் காயில்கள், ரெகுலேட்டர் மற்றும் ரெக்டிஃபையர் யூனிட்கள் போன்றவற்றைத் தயாரிக்கின்றது. இவை அனைத்துமே இரண்டு/மூன்று சக்கர வண்டிகளிலும், போர்ட்டபிள் இன்ஜின்கள் (ஜெனரேட்டர்கள் போன்ற உபயோகத்திலிருப்பவை) போன்றவற்றிலும் உபயோகிக்கப்படுபவை. டிவிஎஸ் மோட்டார்ஸின் மொத்த இருசக்கர வாகன உற்பத்திக்கும் இந்தியா நிப்பான் நிறுவனமே இந்தவகை உதிரிபாகங்களை சப்ளை செய்துவருகின்றது.

இந்தியா நிப்பான் நிறுவனத்தின் விற்பனையில் ஏறக்குறைய 50 சதவிகித விற்பனை, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்குச் செய்யப்படுவதால் வருவதேயாகும். டிவிஎஸ் மோட்டாரின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்து வருவதால், இந்தியா நிப்பான் நிறுவன மும் இதனால் நிச்சயம் பலனடையும். அதேபோல், இந்தியா நிப்பானின் மற்றுமொரு பெரிய வாடிக்கையாளராக இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் திகழ்கின்றது. இந்தியா நிப்பான் நிறுவனத்தின் விற்பனையில் ஏறக்குறைய 25 சதவிகித பங்களிப்பை இந்த நிறுவனமே அளித்துவருகின்றது.

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

ராஜஸ்தானில் ஹீரோமோட்டோ கார்ப்பரேஷன் செய்யவிருக்கும் விரிவாக்கத் திட்டங்களில் உற்பத்தியாகவிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கான தேவைகளை இந்தியா நிப்பான் நிறுவனமே சப்ளை செய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இதுவும் வியாபாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகைச் செய்யும் எனலாம். பொருளாதாரச் சுணக்கம் சரியாகி, இருசக்கர வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் ஏற்றம் காணும் சூழ்நிலையில் இந்திய அளவில் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மோட்டார் மற்றும் சுஸூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்டர்களும் இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தவிர, புதிய வாகனங் களுக்கான இக்னீஷன்கள் சப்ளை தவிர்த்து, பழுதுமாற்றுச் சந்தையிலும் (ஆஃப்டர் மார்க்கெட்) இந்த நிறுவனம் கால் பதித்துள்ளது. 
 
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

சமீப காலமாக முழுக்க முழுக்க இந்தியா நிப்பான் நிறுவனத்தில் இருந்து உதிரிபாகங்களை வாங்கிவரும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வியாபார அளவு கணிசமாக அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதேபோல், இந்த வருடம் அக்டோபர் மாதம் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷ னின் ராஜஸ்தான் தொழிற்சாலைக்கு முழுக்க முழுக்கத் தனது தயாரிப்புகளை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேபோல், ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷனின் ஆர்டரும் மீண்டும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு விஷயம்.

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

பொருளாதாரச் சுணக்கம் இருந்தபோதிலுமே, இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமான அளவில் இருந்து வந்தது. பொருளாதாரச் சுணக்கம் தீர்ந்தால் வாகனங்களின் விற்பனையளவும் கணிசமான அளவு உயரும் என்றே எதிர்பார்க்க லாம். சமீப காலமாக உயரும் டிவிஎஸ் மோட்டார்ஸின் வாகன விற்பனை எண்ணிக்கையும், இந்தியா நிப்பானுக்குக் கிடைத்து வரும் ஏனைய நிறுவனங்களின் ஆர்டர்களும் இந்தியா நிப்பானின் லாபம் அதிகரிப்பதற்கு உதவும்.  விற்பனை அதிகரிப்பு எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக்கத் திட்டங்களையும் இந்த நிறுவனம் கைவசம் வைத்திருப்பதால் உற்பத்தி அளவினை உயர்த்துவதற்கும் கஷ்டப்பட வேண்டியிருக்காது.
 
ரிஸ்க் ஏதும் உண்டா?

இந்தியா நிப்பானின் மொத்த விற்பனையில் டிவிஎஸ் நிறுவனத்துக்குச் செய்யப்படும் விற்பனை சுமார் 50  சதவிகித அளவுக்குச் செய்யப்படுகின்றது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை உயரும் அளவுக்கே இருக்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனையளவு கணிசமான உயர்வை சந்திக்காவிட்டால், இந்தியா நிப்பானின் விற்பனையையும் அது பாதிக்கும். 

மூலப்பொருட்களின் விலை, விற்பனை விலை குறித்த கொள்கை போன்றவையும் இந்தியா நிப்பானின் லாபத்தைப் பதம்பார்த்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. போட்டியாளர்களின் ஏற்றமிகு ஸ்ட்ராட்டஜிகளும் இந்தியா நிப்பானின் லாபத்தைக் கொஞ்சம் பதம்பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பொருளாதாரச் சுணக்க நிலை மாறுவதற்கு நீண்ட நாள் ஆனாலும் லாபத்தின் அளவு அதிகரிக்க அதிக காலம் தேவைப்படும்.

கம்பெனி ஸ்கேன்:இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ்!

இருப்பினும் நீண்ட தொழில் அனுபவமும், வாடிக்கையாளர்களிடம் சீரிய உறவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்காக முதலீட்டாளர்கள் ட்ராக் செய்து, அதிக எண்ணிக்கையில் ட்ரேட் ஆகாத பங்கு ஆகையால் (ஏனைய பங்குகளோடு ஒப்பிடும்போது லிக்விட்டி குறைவு) நல்லதொரு விலை வீழ்ச்சி வரும்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாங்குவதற்குப் பரிசீலனை செய்யலாம்.

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே  வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)