Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி எதிர்பார்ப்புகள் : ஏற்ற, இறக்கம் மிகுந்த வாரத்தை எதிர்பார்க்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி எதிர்பார்ப்புகள் : ஏற்ற, இறக்கம் மிகுந்த வாரத்தை எதிர்பார்க்கலாம்!

Published:Updated:

எக்ஸ்பைரி எதிர்பார்ப்புகளை வைத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்றும், ஆண்டின் இறுதிவாரம் என்பதால் பெரிய அளவிலான மூவ்மென்ட்களை எதிர்பார்க்க முடியாது என்றும், அதனால் மிகவும் லைட்டான டிரேடிங்கே செய்யவேண்டியிருக்கும் என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். இரண்டு நாள் ஏற்றத்தையும் இரண்டு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 24 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்திலும் டெக்னிக்கலாக வீக்னஸ் தொடரும் சூழ்நிலையே இருக்கின்றது. செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை முடிவு செய்வதாய் இருக்கும். வால்யூமை கவனத்தில் கொண்டு வியாபாரம் செய்வது நல்லது. கேப் ஓப்பனிங் அடிக்கடி வரக்கூடிய காலகட்டத்தில் இருக்கின்றோம். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானியுங்கள்.
 
வியாழன் வரை ஸ்டாக் ஸ்பெஷிபிக் டிரேடிங் செய்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். வீக்னஸ் பெரிய அளவில் இருந்தாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. வாலட்டைலிட்டி அதிகரிக்கவும், திடீர் ஏற்றம் வந்துவிடவும் வாய்ப்புகள் இருப்பதாலும் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்யக்கூடிய வாரமாக இருந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதால், மிக மிக கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும். திடீர் வாலட்டைலிட்டி அதிகரிக்கக்கூடும் என்பதால், புதிய டிரேடர்களும் மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் முற்றிலுமாக வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் மேலே அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 26-12-14 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்: எஃப்சிஇஎல்-11.65, சென்ட்ரல் பேங்க்-89.50, ஆப்டோ சர்க்யூட்-25.75, யூனியன் பேங்க்-240.90, ஜேஎஸ்எல்-36.75 கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்- டிரேடிங்குக்கு கவனிக்கலாம்; சுபெக்ஸ்-10.20, தேனா பேங்க்-58.95, ஸ்டார் பேப்பர்-24.55

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்- நவ்நீத் எஜுகேஷன் -108.70, சவுத் பேங்க்-28.05, ட்ரைடண்ட்-25.35, மேன் இன்ஃப்ரா-30.80, ஆன்மொபைல்-71.35

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்: திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம் –ட்ரைடண்ட்-25.35, எஃப்சிஇஎல்-11.65, ஆர்ச்சீஸ்—28.05, டிபி ரியாலிட்டி-58.95, கோல்டன் டுபாக்கோ-50.60, ஜேகே பேப்பர்-32.05, யூனியன்பேங்க்-240.90. டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; சிட்டிகேபிள்-32.95, எக்ஸைடு இண்ட்-176.50, பேங்க் இந்தியா-301.50, ஆர்இசி லிட்-335.15
பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; ஜேகே டயர்-136.35.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் –டிரேடிங்குக்கு கவனிக்க உகந்தது –பேங்க் ஆஃப் இந்தியா-301.50, ஆந்திரா பேங்க்-90.25, ஏஎல்பிகே-130.30, டிவிஎஸ் மோட்டார்ஸ்-261.90, கனரா பேங்க்-448.25

கடந்த மூன்று நாட்களில் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்முக்கு ஏறும் டிரெண்டில் மாறிய ஸ்டாக்குகள்: இந்த் ஹோட்டல்-120, நவ்நீத் எஜுகேஷன் -108.70

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்; பேங்க் ஆஃப் இந்தியா-301.50, டிவிஎஸ் மோட்டார்-261.90, ஆந்திரா பேங்க்-90.25

டிரேடர்ஸ் பக்கங்கள்

எச்சரிக்கை: டிரேடர்கள் மத்தியில் பாப்புலரல்லாத ஸ்டாக்குகள் பலவும் டெக்னிக்கல் இண்டிகேட்டர்களில் தென்படுகின்றன. மிகவும் வீக்கான சூழ்நிலையையே ஸ்டாக்குகள், வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூம்கள் காட்டுகின்றன. இது சந்தை ஹைரிஸ்க் டிரேடர்களுக்கு மட்டுமே உகந்ததாக இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டிய நேரமிது. கவனம் தேவை. வாசகர்கள் கவனத்திற்கு: உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி மேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.