இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ளது நவ்நீத் எஜுகேஷன் லிமிடெட் எனும் கம்பெனியை. 1959-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவரும் நவ்நீத் நிறுவனம் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ், உருது உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், மேலும் பல அந்நிய மொழிகளிலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் வெளியிடும் பள்ளிப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்று விளங்குகின்றது.

நவ்நீத், விகாஸ், காலா, ஃபன், பாஸ் என்ற பிராண்டுகளில் பாடப் புத்தகங்களையும், வொர்க் புக்குகளையும், டைஜஸ்ட்களையும் (கையேடுகள் வகை) வெளியிடுகின்றது இந்த நிறுவனம். மேற்கு இந்தியாவில் ஏறக்குறைய 65 சதவிகித சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மேலும், சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி போர்டு தேர்வு எழுதும் மாணவர் களுக்கான புத்தகங்களை வெளியிட்டு வருவதால், அகில இந்திய ரீதியாகவும் விற்பனை பங்களிப்பு கணிசமான அளவில் உயர்ந்துகொண்டு வருகின்றது. இதுவும் தவிர, பாடத் திட்டங்கள் அல்லாத சிறுவர், சிறுமியருக்கான புத்தகங்களான கலரிங் புத்தகங்கள், ஆக்டிவிட்டி புத்தகங்கள், ஹெல்த் மற்றும் ஹைஜீன் புத்தகங்கள், சமையல் கலை, மெஹந்தி, எம்பிராய்டரி புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிட்டு வருகின்றது.

தொழில் எப்படி?

பாடப் புத்தகம் மற்றும் ஏனைய புத்தகங்களின் வெளியீடே இந்த நிறுவனத்தின் முக்கியத் தொழிலாகும். பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவில், ஸ்டேஷனரி வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கும் என்பதை உணர்ந்த இந்த நிறுவனம், 1993-ம் ஆண்டு நவ்நீத் ஸ்டேஷனரி என்கிற பெயரில் எழுது பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. முதலில் பென்சில்களைத் தயாரிக்க ஆரம்பித்து, பின்னர் எரேசர்கள், ஷார்ப்பனர்கள், ரூலர்கள், காம்பஸ் உபகரணங்கள், ஆர்ட் மெட்டீரியல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்க ஆரம்பித்தது.

அதேபோல், வேகமாக வளரும் டிஜிட்டல் உலகில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மாணவர் களும் மற்றவர்களும் டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்ள ஆவல்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்ட இந்த நிறுவனம் இ-சென்ஸ் என்ற டிஜிட்டல் லேர்னிங் சொல்யூஷன் டிவிஷனை ஆரம்பித்து பாடத் திட்டத்துக்கு ஏற்ற 2டி மற்றும் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் லேர்னிங் வசதிகளை மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் வழங்கி வருகின்றது. இ-சென்ஸ் வசதி தற்சமயம் 2,200 பள்ளிகளில் கிட்டத்தட்ட 12,000 வகுப்புகளில் செய்யப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

பாடப் புத்தகங்கள், ஸ்டேஷனரி மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் என்பதோடு நின்றுவிடாமல், ப்ரீ-ஸ்கூல்களையும் நடத்துகின்றது. லீப்-ப்ரிட்ஜ் எஜுகேஷன் என்ற பெயரில் ஆரம்பித்து நடத்தப் படும் இந்த நிறுவனம் பூனே மற்றும் மும்பையில் எட்டு இடங்களில் பள்ளிகளை நடத்தி வருகின்றது. கம்பெனிக்குச் சொந்தமான, கம்பெனியால் நடத்தப்படும் பள்ளிகள் என்ற மாடலில் 2009 ஆண்டிலிருந்து நடத்தப்படுகின்றன இந்த லீப்-ப்ரிட்ஜ் பள்ளிகள். அதேபோல், 2011-ம் ஆண்டில் இந்த நிறுவனம் ஆந்திராவில் இருக்கும் ஒரு ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மைனாரிட்டி பங்குகளை வாங்கியதன் மூலம் நேரடியாக பள்ளி நடத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. தற்சமயம் ‘கெளதம் மாடல் ஸ்கூல்’ என்ற பெயரில் 52 பள்ளிகள் ஆந்திராவில் இயங்கி வருகின்றன. இதே மாடலில் ஆந்திராவைப்போல் ஆறு பள்ளிகள் கர்நாடகாவிலும் (பெங்களூரு), மூன்று பள்ளிகள் மஹாராஷ்ட்ராவிலும் (மும்பை)‘ஆர்ச்சர்ட்ஸ்-தி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற பெயரில் நடைபெற்று வருகின்றது.

2014-ம் நிதியாண்டில் இ-சென்ஸ் மூலம் யூடாப் என்ற டிஜிட்டல் லேர்னிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். யூடாப் முறையில் மாணவர்களுக்கான எஜுகேஷனல் சொல்யூஷன் ஒரு ஆண்ட்ராய்டு டேப்லெட் மூலம் வழங்கப்படுகின்றது. 2014-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் யூடாப் டிஜிட்டல் லேர்னிங்கில் சிபிஎஸ்சிக்கான 1 - 10-ம் வகுப்பு வரை யிலான கணக்கு மற்றும் அறிவியலுக்கான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

கல்வி, பதிப்பகம் மற்றும் எழுதுபொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னணியில் இருக்கின்றது இந்த நிறுவனம். இந்த இரண்டு துறையுமே பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் பெருமளவில் பாதிப்படையாத துறைகளாகும். இதுபோன்ற பொருளாதார ஏற்ற, இறக்கங்களில் பாதிப்படையாத துறையில் முன்னணி நிறுவனமாகவும் இருப்பது இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும்.

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் நவ்நீத்தின் பாடத் திட்டம் சார் புத்தகங்கள், பாடத் திட்டம் சார்ந்த வொர்க் புக்குகள், கடைசி நேரத்தில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கான புத்தகங்கள் போன்றவை பெரியதொரு சந்தைப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நன்மதிப்பை இந்த நிறுவனத்தின் புத்தகங்கள் பெற்றிருப்பதால், தன்னுடைய புத்தகங்களுக்கு நல்ல லாபம் தரும் வகையில் விலை நிர்ணயம் செய்வதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் இருக்கும் தொழிலில் ஒரு முக்கிய தடை, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் (செகண்ட் ஹேண்ட்) மறுவிற்பனை செய்யப்படுவதுதான். ஆனால், தற்சமயம் பாடத் திட்டங்கள் அடிக்கடி மேம்படுத்தப்படுவ தாலும், பாடத் திட்டங்கள் மாறாதபோதிலும் இந்த நிறுவனம் தனது புத்தகங்களை ஆண்டுதோறும் மேம்படுத்தி வெளியிட்டு வருவதாலும் செகண்ட் ஹேண்ட் புத்தகத்தினால் ஏற்படும் விற்பனை பாதிப்பைச் சமாளிக்க முடிகின்றது.

எதிர்காலம் எப்படி?

சமீப காலமாக தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை ஏற்பட்டுவரும் குறிப்பிடத்தக்க மாற்றமாகிய புதிய மற்றும் பழைய பள்ளிகள், மாநிலக் கல்வித் துறையில் (ஸ்டேட் எஜுகேஷன் போர்டு) இருந்து விலகி சிபிஎஸ்சி-யுடன் இணைவது இந்த நிறுவனத்துக்கு வியாபாரம் அதிகமாவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதலாம். 2014-ம் நிதியாண்டில் அகில இந்திய ரீதியாக சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 14,440-ஆக இருந்தது. 2015-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 15,800 உயர்ந்துள்ளதே இதற்குச் சான்றாகும். இதில் சுமார் 90 சத விகிதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தனியார் புத்தகங் களையே மாணவர்களுக்குப் பரிந்துரை செய்கின்றது.

தவிர, புதுவகை பள்ளிகளான சிபிஎஸ்சி பேட்டர்ன் ஸ்கூல் என்றவகை பள்ளிகள் ஸ்டேட் போர்டுடன் இணைந்திருந் தாலும், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தையும் புத்தகங்களையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

இவ்வாறு வேறுபடுத்திக் கொள்வதன் மூலம் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள முடிவதால், இந்தவகைப் பள்ளிகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அனுமதிக்கேற்ப உயரும் என எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, ஸ்டேஷனரி பிரிவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்த நிறுவனம் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிலில் விரிவாக்கம் செய்வதற்கு மிக அதிக அளவிலான முதலீடுகள் தேவையில்லை. எனவே, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் விரிவாக்கம் செய்ய பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படாது. தவிர, வியாபார விரிவாக்கங்கள் நிகழும்போது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கவே செய்கின்றது. இந்த நிறுவனத்தின் கடந்த பத்து ஆண்டுகளை ஆராய்ந் தால், சுமார் 40 சதவிகிதத்துக்கும் மேலான லாப ஈவுத்தொகையைச் சராசரியாகக் தந்துள்ளது.

ரிஸ்க் ஏதும் உண்டா?

இந்த நிறுவனத்தின் பிசினஸ் முழுக்க முழுக்க சீஸன் சார்ந்த பிசினஸாகும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி உபயோகித்த புத்தகங்கள் இதன் விற்பனையை ஓரளவுக்கு பாதிக்கவே செய்யும் எனலாம்.

பாடத் திட்டங்கள் சார்ந்த புத்தகங்கள் என்பதால் புத்தகங்களும் பாடத் திட்டங்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையானவையாக இருக்கும். இதனாலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு போட்டி நிறுவனங்களின் போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தொழில் ரீதியான ரிஸ்க்குகள் இருந்தபோதிலும் பொருளாதார ஏற்ற, இறக்கம் இந்த நிறுவனத்தின் தொழிலை பெரிய அளவில் பாதிக்காது என்பது தனிச் சிறப்பாகும்.

இதனாலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் ட்ராக் செய்து அசாதாரணச் சூழலில் சரியானதொரு விலை இறக்கம் வரும்போது நீண்டகால முதலீட்டுக்காக பரிசீலனை செய்யலாம்.

- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)