Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

Published:Updated:

வ்வொரு ஆண்டும் மார்ச் 31 நெருங்கும் போதுதான் வருமான வரி விலக்குக்காக பெரும்பாலானவர்கள் முதலீடு பற்றியே சிந்திக்கிறார்கள். அவசரப்பட்டு ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது பிபிஎஃப், அஞ்சலகச் சேமிப்பு என யோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு அதன்பிறகு,  இதில் ஏன்தான் முதலீடு செய்தோமோ என கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள். சரியான முதலீட்டுத் திட்டத்தை சரியான நேரத்தில் தேர்வு செய்பவர்கள் சிலர் மட்டுமே.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

சமீபத்தில் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் விஷயங்கள் இனி:

நகரங்களில் வசித்து வரும் இந்தியக் குடும்பங்களில் 9 சதவிகிதத்தினர் மட்டும்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், `பாதுகாப்பு’க்கு மட்டுமே (குடும்பத்தில் சம்பாதிப்பவருக்குத் திடீரென்று ஏதாவது நேர்ந்தால் அவரை நம்பியிருந்த குடும்பத்தி னருக்கு உதவும் பொருட்டு), என்றிருக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்திருப்ப வர்களின் எண்ணிக்கை 66 சதவிகிதம்!

இந்த பாலிசிகள் முதிர்ச்சி அடையும்போது கிடைக்கும் ஆதாயம் மிக சொற்பமே.  கடைசி நேரத்தில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலோர் எதையும் யோசிக்காமல் பணத்தை அதில் முடக்கிவிடுகிறவர்களாக இருக்கிறார்கள். 

நம்பிக்கையான, அதிக ஆதாயம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் பலரும் முதலீடு செய்யாததற்கான காரணங்களாக மக்கள் கூறுவது,  “மியூச்சுவல் ஃபண்ட் அதிக ஆதாயம் தரக்கூடியதல்ல; ரிஸ்க் அதிகம்'' என்பதுதான். இந்த முதலீடு பற்றி மக்களிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லாததே இதற்கு காரணம். இதை அறிந்துகொண்ட நிதி நிறுவனங்கள், 2012-ம் ஆண்டிலிருந்து பரவலாக விளம்பரங் களையும், பிரச்சாரங்களையும் செய்து வருகின்றன.

ஆயுள் காப்பீட்டைத் தொடர்ந்து 42 சதவிகித மக்கள் தங்கள் பணத்தை வைப்பு நிதியிலும், 25 சதவிகிதத்தினர் தங்கத்திலும், 24 சதவிகிதத்தினர் அஞ்சலக வைப்பிலும், 15 சதவிகிதத்தினர் ஹெல்த் இன்ஷூரன்ஸிலும் 6 சதவிகிதத்தினர் சொத்துகளிலும் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர் களில் பெரும்பாலானோர் பெருநகரங்களில் வசிக்கும் மத்திய தர வகுப்பினரும், அதிக வருமானம் கொண்ட மேல் தட்டு மக்களும்தான். அதிலும் குறிப்பாக, முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரில் 50 சதவிகிதத் துக்கும் மேலானவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் இதுவரை முதலீடு செய்யவில்லை என்றும், இனிமேலும் செய்யப் போவ தில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இவர்களைக் கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டுமென்பதை மியூச்சுவல் ஃபண்டை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் உடனடியாக யோசிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்யவில்லையென்று கேட்டபோது, “இதில் ரிஸ்க் அதிகம், இதில் முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு அதிகப் பணமில்லை, இந்த முதலீட்டினால் என்ன ஆதாயம் எனச் சரிவரத் தெரிய வில்லை” என பலரும் பல காரணங்களைக் கூறியிருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களில் பலரும் அதை நிர்வகிக்கும் நிதி நிறுவனங் களைவிட, அந்த ஃபண்டின் மூலம் வருமானம் எவ்வளவு கிடைக்கிறது என்கிற அடிப்படை யில்தான் முதலீடு செய்திருக் கிறார்கள். எந்த ஃபண்டில் முதலீடு செய்வது என்பதற்கு அவர்கள் வங்கிகளையும், இணையத்தளங்கள் தரும் யோசனைகளையும் நம்பியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாமல் போவதால் ஏற்படும் நெகட்டிவ் விளைவுகளையும், அதில் முதலீடு செய்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், ஆதாயங்கள் குறித்தும் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் தீவிரமாக மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை நழுவவிட வேண்டியிருக்கும். (மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 13 முக்கிய காரணங்களை http://nanayam.vikatan.com/index.php?aid=9273 என்ற இணையதள முகவரிக்குச் சென்று வாசகர்கள் படித்து அறியலாம்).

அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முக்கிய மானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்  முயற்சிகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தீவிரப்படுத்துவது மிக அவசியம்!

தங்கத்தின் இறக்குமதி 20% அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் விலை சரிந்தது, தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது போன்ற காரணங்களால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 2014-15-ம் நிதி ஆண்டில் 20% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் தங்கம் இறக்குமதி 3,430 கோடி டாலர் (5.5.15-ம் தேதி நிலவரப்படி, ரூ.2,18,045 கோடி). இதற்கு முந்தைய நிதியாண்டில் 2,870 கோடி டாலர் மட்டுமே.

சித்தார்த்தன் சுந்தரம்