இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துதான் வருகிறது. இதனைப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திலும் புதிதாக மூன்று டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த டீமேட் கணக்குகள் பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 16.5 லட்சத்துக் கும் மேற்பட்ட டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2015 மே நிலவரப்படி, மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 2.36 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தை மேலே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கு ஆதரவான பல புள்ளிவிவரங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஓப்பன் இன்ட்ரஸ்ட் அதிகரிப்பு!

இந்திய பங்குச் சந்தை, ஜூன் 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரைக்கும் தொடர்ந்து 8 வர்த்தகத் தினங்களாக ஏற்றத்தில் இருந்தது. ஆனால், புதன்கிழமை சென்செக்ஸ் 95 புள்ளிகள் இறக்கம் கண்டது. இதற்கு ஜூன் 25 வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ முதிர்வுத் தேதி என்பது ஒரு காரணம். ஆனால், சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என்று டிரேடர்கள் எதிர்பார்ப்பதால், கடந்த வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ முதிர்வு அன்று சென்செக்ஸ் 166 புள்ளிகள் அதிகரித்தது.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரஸ்ட், ஜூலை சீரிஸ் ரூ.12,300 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் ரூ.11,100 கோடியாக இருந்தது.

தொடரும் எஃப்ஐஐ-கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

எஃப்ஐஐ-கள் கடந்த ஒரு வார காலமாக நிகரப் பங்கு முதலீட்டாளர்களாக மாறியிருக்கிறார்கள். இது அவர்கள் இந்திய பங்குச் சந்தைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதோடு, அவர்களின் முதலீடு தொடரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பார்கிளேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 900 பேரிடம் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து முதலீடுகளிலும் அதிக லாபத்தைத் தருவதாகப் பங்கு முதலீடு அமையும் என முதலீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சர்வே முடிவின்படி, எமர்ஜிங் பங்குச் சந்தை மார்க்கெட்களில் இந்தியாதான் முதலீட்டாளர்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடங் களில்தான் சீனா, மெக்சிகோ, தென் கொரியா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகள் உள்ளன.

முந்தும் பங்குச் சந்தை முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரித்து வருவது சந்தைக்கு வலுவூட்டுவதாகவே இருக்கிறது.

இந்தியா முழுக்க பருவமழை சராசரிக்கும் மேலாக சுமார் 20 சதவிகிதம் பெய்திருப்பதால், மீண்டும் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்கிற பயம் முதலீட்டாளர்களிடம் விலகி இருக்கிறது. பணவீக்க விகிதம் அதிகரிக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி, வட்டியை இன்னும் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அது நடக்கும்பட்சத்தில் சந்தை வேகமாக மேலேறும் எனலாம்.

சந்தையின் போக்கு!

சென்செக்ஸ் தற்போது 27800 என்கிற நிலையில் இருக்கிறது. இது 2015 டிசம்பருக்குள் 33500க்கு

உயரும் என நோமுரா இந்தியாவின் ஈக்விட்டி ஹெட் பிரபாத் அவஸ்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர், தற்போதைய நிலையில் இந்திய பங்குச் சந்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. நடப்பு ஆண்டின் மீதி மாதங் களில் சந்தை சிறப்பாகச் செயல்படும் எனச் சொல்லி இருக்கிறார். 2016-17-ம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களின் வருமான அதிகரிப்பு சுமார் 15% அளவுக்கு இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்ப தில் உள்கட்டமைப்பு துறைக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனை வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியே முன்நின்று எடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் அண்மையில் நிலக்கரி மற்றும் மின்சாரம், சாலை போக்குவரத்துத் துறை சார்ந்த திட்டங்களை ஆய்வு செய்துள் ளார். சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் கிடப்பதைக் கண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு அண்ட் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஜார்கண்ட், ஒடிஸா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் முடங்கிக் கிடக்கும் இன்ஃப்ரா திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, பல நிறுவனங்கள் லாபம் ஈட்டும். இது பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிவை!

இந்திய பங்குச் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும், முதலீட்டாளர்கள் எதை யெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை ஆலோசனை, பயிற்சி நிறுவனமான குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES) நிர்வாக இயக்குநருமான டாக்டர் சி.கே.நாராயணுடன் பேட்டி கண்டோம்.

தற்போது நிஃப்டி 8400 என்கிற அளவில் இருக்கிறது. 2015-ம் ஆண்டுக்குள் அது 10000க்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

“சந்தை இப்போதைய நிலையில் இருந்து ஏறத் தொடங் கும். 2015-ம் ஆண்டுக்குள் நீங்கள் குறிப்பிடும் 10000 புள்ளிகள் வருவதற்கான சாத்தியம் கொஞ்சம் குறைவு. அதேநேரத்தில், 2015-ம் டிசம்பருக்குள் 9500 புள்ளிகளுக்குப் படிப்படியாக அதிகரிக்கும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும். 2017 இறுதிக்குள் நிஃப்டி புள்ளிகள் 12000 நோக்கி செல்லும்.”

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள துறைகள் எவை?

“இ-காமர்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சி என்பது அடுத்து வரும் ஆண்டுகளில் அபரிமிதமாக இருக்கும். அதுவும் இந்தத் துறையில் உள்ள மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் அதிக வளர்ச்சியைப் பெறும். அடுத்து சரக்குப் போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்), பேக்கேஜிங் துறைகள் வேகமான வளர்ச்சியைப் பெறும். வழக்கம்போல் இந்தப் பட்டிய லில் பார்மா துறையையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த நல்ல நிறுவனங்களின் பங்கு களைச் சந்தை கரெக்ஷனைச் சந்திக்கும்போது தாராளமாக வாங்கலாம்.”

கடந்த 2014-ம் ஆண்டு மிட் கேப் பங்குகள் அதிக வருமானத்தைத் தந்தன. இது நடப்பு 2015-ம் ஆண்டிலும் தொடருமா?

“ஆமாம். தற்போதைய நிலை யில் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் லார்ஜ் கேப் பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டு விட்டன. எனவே, இனிவரும் காலத்தில் அவை மிட் கேப் பங்குகளில் தான் அதிக முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக் கின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டிலும் மிட் கேப் பங்குகள் மற்றும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக வருமானம் தரும் என எதிர்பார்க்கலாம்.”

குறுகிய காலம் மற்றும் நடுத்தரக் காலத்தில் அதிக வருமானம் தரும் பங்குகளை நாணயம் விகடன் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்ய முடியுமா?

‘‘தாராளமாக. ஓராண்டுக்கு உட்பட்ட முதலீட்டுக்கு வோல்டாஸ் (VOLTAS), அரவிந்த் மில்ஸ் (ARVIND), டிஷ் டிவி (DISHTV), ஜீ (ZEEL), இன்ஜினீயர்ஸ் இந்தியா (ENGINERSIN), பிஹெச்இஎல் (BHEL) போன்ற பங்குகளைக் கவனிக்கலாம். இவை சுமார் 50% வருமானம் தரக்கூடும். 12 முதல் 18 மாத முதலீட்டுக்கு ப்ளுஸ்டார் (BLUESTARCO), ஆன்மொபைல் (ONMOBILE) , வெல்கார்ப் (WELCORP), மாரிகோ (MARICO), எல்கான் (ELECON) பங்குகள் ஏற்றவை. இவற்றின் விலை 50% முதல் 100% வரை அதிகரிக்கக் கூடும்.”

தற்போதைய சந்தை சூழ்நிலையில், சிறு முதலீட்டாளர்களுக்குத் தங்களின் ஆலோசனை என்ன?

‘‘ரியல் எஸ்டேட், பாண்டுகள் மற்றும் எஃப்டி முதலீட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதிக முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை சிறப்பான ஏற்றத்தைக் காணும்” என்றார்.

சந்தை இறங்கும்போதெல்லாம் நல்ல பங்குகளில் முதலீட்டை அதிகரித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்!

டிஸ்க்ளெய்மர்: பரிந்துரை செய்யப்பட்டுள்ள பங்குகளில் சி.கே நாராயணுக்கு பொசிஷன் எதுவும் இல்லை. செபி ரிசர்ச் அனலிஸ்ட்க்கு அவர் விண்ணப்பம் செய்திருக்கிறார்.

சி.சரவணன்

சந்தைக்குப் பாதகமான இரு அம்சங்கள்!

இந்திய பங்குச் சந்தைக்குப் பாதகம் என்கிறபோது, கிரீஸ் கடன் பிரச்னை பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. கிரீஸ் அரசின் திட்டங்களைக் கடன் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், இந்திய பங்குச் சந்தை இறக்கத்தைக் கண்டிருக்கிறது. இந்த இறக்கத்துக்கு புக் பிராஃபிட்டும் ஒரு காரணமாக இருக்கிறது. குறுகிய கால முதலீட்டாளர்கள், அண்மை ஏற்றத்தின் லாபத்தை வெளியே எடுத்திருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். சந்தை ஏற்றத்தின் இடையே நடக்கும் இதுபோன்ற கரெக்ஷன்களை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டால் அதிக லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள் முன்னணி பங்குத் தரகர்கள்.

அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு, இந்திய பங்குச் சந்தையைப் பயமுறுத்தும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு நிறுத்தம் என்பது படிப்படியாகத்தான் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஃபெடரல் ஏற்கெனவே அறிவித்திருப்பதால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியச் சந்தையின் செயல்பாடுகளை அவ்வளவு விரைவாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.