Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

ந்த வாரம் சோயாபீன் மற்றும் மஞ்சள் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் ஜேஆர்ஜி வெல்த்

அக்ரி கமாடிட்டி!

மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

சோயாபீன் (Soybean)

‘‘அதிக உற்பத்தி மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவை குறைவு போன்ற காரணங்களால் கடந்த இரு மாதங்களாகவே சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ஃப்யூச்சர் சந்தையில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட மே, ஜூன் மாதங்களில் 4,300 ரூபாயிலிருந்து குறைந்து 3,400 ரூபாய்க்கு வர்த்தக மானது.

நடப்பு காரீஃப் பருவத்தில் சோயாபீன் விளைச்சல் 10% அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக வர்த்தகர்கள் தெரிவித்திருக் கிறார்கள். விளைச்சல் அதிகரிப் பதற்கு மிக முக்கிய காரணம், சோயாபீன் அதிகம் விளையும் மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் தெலங்கான மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு மற்றும் பருவ நிலை சாதகமாக அமைந்து இருப்பதே.

அக்ரி கமாடிட்டி!

அதேசமயம், உலக அளவி லான சோயாபீன் உற்பத்தி குறை யும் என்று எதிர்பார்க்கப்படுவ தால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும். உள்நாட்டுச் சந்தையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நல்ல பருவச்சூழல் காணப்படும் என்பதால்,  உற்பத்தி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் (Turmeric)

தேவை குறைவின் காரணமா கவும், மஞ்சள் விளையும் ஏரியாக்கள் அதிகரித்து காணப் படுவதாலும் சென்ற வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தக மானது. இது கடந்த இரு மாதங்களில் 20% வரை விலை குறைந்துள்ளது.

ஃப்யூச்சர் சந்தையில் ஜூலை மாத கான்ட்ராக்ட் 8,500 ரூபாயி லிருந்து குறைந்து 6,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங் களில் மழைப்பொழிவு அதிகமாகவும், சாதகமான பருவநிலையும் காணப்படுவதால் விவசாயிகள் மஞ்சள் விளைச்சலை அதிகப் படுத்தி இருக்கிறார்கள். இதனால் வரும் பருவத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் விலை குறைவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

சந்தை நிலவரப்படி, 10-15% மஞ்சள் உற்பத்தி அதிகரித்து காணப்படும். சங்லி மாவட்டத் தில் 80-90% வரை விளைச்சல் முடிந்து காணப்படுவதாக தெரிகிறது.

கடந்த ஜூன் 17-ம் தேதி நிலவரப்படி, மஞ்சள் அதிகம் விளையும் தெலங்கானா மாநிலத்தில் மஞ்சள் 1,264 ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 991 ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டது.
உற்பத்தி ஏரியா அதிகரித்து காணப்பட்டாலும், உற்பத்தி குறைவாகத்தான் இருக்கும் என்றும், சந்தைக்கு வரத்து குறைந்து காணப்படலாம் என்றும் சந்தைவட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. இதனால் வரும் வாரத்தில் மஞ்சள் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும்.

ஏலக்காய் (Cardamom)

அக்ரி கமாடிட்டி!

வரத்து அதிகரிப்பின் காரணமாக சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி, சந்தைக்கு வந்த வரத்து தரம் குறைந்து காணப்பட்டதும் விலை குறைவுக்கு காரணமாக  அமைந்திருக்கிறது.

இருப்பினும் ஏலக்காய் விளையும் ஏரியாக்களில் மழைப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால் பயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதனாலும், ஏலக்காய் அதிகம் விளையும் கெளதமாலாவில் குறைவான உற்பத்தி கணக்கிடப்பட்டு உள்ளதாலும் ஏலக்காய் விலை மேலும் குறையாமல் தடுக்கப் படும்.

கடுகு விதை (Mustard seed)

தேவை அதிகரிப்பின் காரணமாக கடந்த வாரத்தில் கடுகுவிதை விலை அதிகரித்து காணப்பட்டது.

அரசின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டின் கடுகுவிதை உற்பத்தி குறைந்து காணப்படு கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், பருவநிலை மோசமாக காணப்படுவதுதான்.

அக்ரி கமாடிட்டி!

மோசமான பருவநிலை காரணமாக கடுகு அதிகம் விளையும் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்  பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 25% பயிர் சேதம் உண்டாகி இருக்கிறது. இதனாலும் கடுகு விதை விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. 

அதேபோல, தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டு உற்பத்தி 12% குறைந்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல கடுகு விதை விளைச்சல் ஏரியா வும் 3.2% குறைந்து 63.8 லட்சம் ஹெக்டேராகக் காணப்படுகிறது.

சமீபத்திய USDA அறிக்கையின் படி, உலக அளவிலான கடுகு விதை உற்பத்தி குறைந்து 3.5 மில்லியன் டன்னாக காணப்படுகிறது.

வரும் வாரங்களில் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால், விலையும் அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கொத்துமல்லி (Coriander)

முக்கிய கொத்துமல்லி சந்தைகளில் மந்தமான தேவை நிலவியதால், சென்ற வாரம் விலை குறைந்து வர்த்தகமானது. இதனால் வர்த்தகர்களும் விவசாயிகளும் நல்ல விலையை எதிர்பார்த்து தங்களின் சரக்கு களை கிடங்களில் இருப்பு வைத்து வருகிறார்கள்.
கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் 34,668 டன் கொத்துமல்லி இருப்பு காணப்படு கிறது. இது இதற்கு முந்தைய வார இருப்பைவிட அதிகமாகும். தற்போது பருவநிலை மற்றும் மழைப்பொழிவு சிறந்து காணப் படுவதால் வரும் பருவத்தில் விளைச்சலும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கடந்த 2014-15-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி இருக்கும் கொத்துமல்லி அளவு 46,000 டன். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 45,750 டன்னாகக் காணப்பட்டது.

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அடுத்த கட்டுரைக்கு