வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழையில் சிறிது நனைந்தபடி வந்தார் ஷேர்லக். ‘‘சபாஷ், எல்ஐசி பற்றி கவர் ஸ்டோரியா? அந்த நிறுவனத்தின் பாலிசி வைத்திருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. பாலிசி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை எல்ஐசி ஏஜென்ட்டுகள் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவசியம்’’ என்றபடி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

‘‘டிசிஎஸ் காலாண்டு முடிவு மோசமாக வந்துள்ளதே?'' என்று கேட்டோம் ஆச்சர்யத்துடன்.

“கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் டாலர் மதிப்பில் டிசிஎஸ்-ன் வருமானம் குறைந்துள்ளது. இந்தக் காலாண்டில் இதன் வருமானம் வெறும் 3.5% மட்டுமே அதிகரித்து உள்ளது. டிசிஎஸ் காலாண்டு முடிவு மோசமாக இருந்ததால், வியாழன் அன்று சென்செக்ஸ் 114 புள்ளிகள் குறைந்தது. டிசிஎஸ் பங்கு விலையும் 2.80% குறைந்தது” என்றவர், லேசாக தொண்டையை செரும, சூடச்சுட ஏலக்காய் டீ தந்தோம்.

‘‘கமாடிட்டி விலை வீழ்ச்சி வேதாந்தா- கெய்ர்ன் இணைப்பைப் பாதிக்கும் போலி ருக்கிறதே?’’ என்று இழுத்தோம்.

‘‘சர்வதேச அளவில் காப்பர் உள்ளிட்ட பல கமாடிட்டிகளின் விலை குறைந்து வருகிறது. இதனால் வேதாந்தா நிறுவனத் தின் மதிப்பு குறையும் சூழ்நிலை உள்ளது. எனவே, வேதாந்தா- கெய்ர்ன் இணைப்புக்கு சிறுபான்மை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 15-ம் தேதி இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வேதாந்தா பங்கின் விலை 25% வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கெய்ர்ன் பங்கு 10% மட்டும்தான் இறங்கி இருக்கிறது. இதன் காரணமாகவும் இணைப்புக்கு சிறு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது’’ என்று விளக்கம் தந்தார்.

''பிஎஸ்இ ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகளை டீ-லிஸ்ட் செய்யப்போகிறதாமே?'' என அதிர்ச்சிக் காட்டினோம்.

‘‘பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றாதது மற்றும் மீறல் காரணமாக சஸ்பென்ட் செய்யப் பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பங்கு வர்த்தகம் எதுவும் நடைபெறாமல் இருக்கும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பங்குகளை, பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்க பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை செபிக்கு தெரிவித்துள்ளது பிஎஸ்இ.

இதை பிஎஸ்இ நடைமுறைப் படுத்தும்போது பல பங்கு முதலீட்டாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்தப் பங்குகளை பிஎஸ்இ டீ-லிஸ்ட் செய்துவிட்டால், அந்தப் பங்குகளை அதன்பிறகு விற்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதனால் அதிகம் பாதிக்கப்படு வது சிறு முதலீட்டாளர்கள்தான். அந்த வகையில் சிறு முதலீட் டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகையாவது திரும்பக் கிடைக்க பிஎஸ்இ மற்றும் செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிஎஸ்இ-ல் மொத்தம் 5,700 நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 1,449 நிறுவனப் பங்குகளின் வர்த்தகம் சஸ்பென்ட் செய்யப் பட்டுள்ளது’’ என்று புள்ளிவிவரங் களுடன் பேசினார் ஷேர்லக்.

‘‘ஜூன் காலாண்டில் எஃப்ஐஐகள் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளதே?’’ என்றோம் வருத்தத்துடன்.

‘‘2015 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐக்களின் முதலீடு ரூ.79,000 கோடியாக இருந்தது. ஆனால், இது 2015 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதத்தில் ரூ.547 கோடி யாகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம், 20 சதவிகித குறைந்த பட்ச மாற்று வரி விதிப்பு (மேட்) பிரச்னை, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் முடிந்த காலத்தில் குறைந்து போனது போன்றவை. இந்தப் பிரச்னையில் ஒரு தெளிவான முடிவை மத்திய அரசு கூடிய சீக்கிரத்தில் எடுப்பதே நம் சந்தையின் வளர்ச்சிக்கு நல்லது’’ என்கிற வேண்டுகோளை வைத்தார்.

‘‘பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை எந்த அளவுக்கு இருக்கிறது?’’ என்று விசாரித்தோம்.

“நடப்பு 2015-16-ம் ஆண்டில் சுமார் ரூ.69,500 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.41,000 கோடி சிறிய நிறுவனங்களைச் சேர்ந்ததாக இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ஓஎன்ஜிசி, பவர் ஃபைனான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யத் திட்ட மிட்டுள்ளது. இதில், ஐஓசி-ன் 10% பங்குகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு ரூ.10,000 கோடி திரட்டப்பட உள்ளது முக்கியமான விஷயம்.’’ என்றவர், புறப்படத் தயாரானார்.
‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்குமாம்?’’ என்றபடி அவரை வழியனுப்ப நாமும் எழுந்தோம்.

‘’இந்திய பங்குச் சந்தை அண்மைக் காலத்தில் ஒரு ரேஞ்ச் பவுண்டுக்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்க இன்னும் 2 முதல் 3 காலாண்டுகள் எடுத்துக் கொள்ளும் என அனலிஸ்ட்கள் கணித்திருக்கிறார்கள். அந்த வகையில், இந்த ரேஞ்ச் பவுண்ட் சந்தையின் போக்கும் இன்னும் சில காலத்துக்குத் தொடரும் என்கிறார்கள். இதனை ஒரு முதலீட்டு வாய்ப்பாகப் பயன் படுத்தி, கரெக்ஷனில் வாங்கி ஏற்றத்தில் விற்று லாபம் பார்க்க லாம். ஆனால், அனைத்துப் பங்கும் இந்த வாய்ப்பை அளிக்காது.

குறிப்பாக, தனியார் வங்கிகள், பார்மா, ஐடி மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் இப்படி முதலீடு மற்றும் லாப வாய்ப்பைத் தரும் என்கிறார்கள் அனலிஸ்ட் கள். தேர்ந்தெடுக்கப்பட்ட லார்ஜ் கேப் பங்குகளில் எஸ்ஐபி முறை யில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் (ஆண்டுக்கு சுமார் 15%) பார்க்க லாம். அதற்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கவனிக்க தேவை இல்லை என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

இந்திய சந்தையின் அடுத்த கட்ட நகர்வு என்பது அமெரிக்கா வில் வட்டி விகித மாற்றம், இந்தியாவில் பருவமழை பெய்யும் அளவு, மழைக்கால நாடளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேறும் பொருளாதாரச் சீர்திருத்த மசோதாக்கள், முதல் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் மற்றும் வருமான அதிகரிப்பு போன்ற வற்றைப் பொறுத்துள்ளது” என்றவர், ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தார். ‘‘மீண்டும் மழை வருவதற்குள் நான் வீடு போய்ச் சேர்க்கிறேன்’’ என்று நமக்கு டாடா காட்டிவிட்டுப் பறந்தார்.