Published:Updated:

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மிக அதிக அளவி லான ஏற்ற இறக்கங்கள் வரலாம் என்றும்; எக்ஸ்பைரி மற்றும் ஃபெடரல் வட்டி விகித முடிவுகள் என்ற இரண்டும் சேர்ந்தே சந்தையின் மூவ்மென்டை நிர்ணயிப்பதாக அமையும் என்றும்; இதனால் வாலட்டைலிட்டி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றும்; டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி உடைக்கப்படலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இறக்கத்தையும் மூன்று நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி முதல் இரண்டு நாட்களில் 184 புள்ளிகள் இறங்கியும், அடுத்த மூன்று நாட்களில் 195 புள்ளிகள் ஏறியும் முடிவடைந்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக 11 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந் திருக்கிறது.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரும் வாரத்தில் செவ்வாய்க் கிழமையன்று ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ரிவ்யூ இருக்கிறது. இதில் வெளிவரும் முடிவுகளே சந்தையின் அடுத்த கட்ட போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். 8623 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக் கும் மேற்பட்ட குளோஸிங்குகள் நடந்தால், அந்த லெவலுக்கு அப்பால் 180 புள்ளிகள் வரையிலான ஏற்றத்துக்கு டெக்னிக்கலாக வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

இருப்பினும், செவ்வாயன்று முடிவுகள் தெரிந்த பின்னரே டெக்னிக்கல் லெவல்கள் வொர்க் அவுட் ஆகுமா என்பதை நிர்ணயிக்க முடியும் என்பதால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை களில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும் எனலாம்.

ஒரு சில இண்டிகேட்டர்களில் நிஃப்டி புதிய வீக்னெஸ் காட்டு வதால், 8623-ஐ வால்யூமுடன் தாண்டும் வரை வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது. ஓவர் நைட் பொசிஷன்களையும், நல்லதொரு வீக்னெஸ் வந்தாலும்/கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்!

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே நிஃப்டியில் குறைந்த எண்ணிக்கையில் உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளும் வண்ணம் வியாபாரம் செய்யலாம். அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக் களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 31-07-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்: JVLAGRO-19.45, GPPL-235.70, JMTAUTOLTD-115.55, TECHM-530.70, RUSHIL-96.30, ASHOKLEY-84.45, MIC-28.45, FSL-34.35, GREAVESCOT-148.55, BRITTANIA-3153.65, TANLA-27.45, HIMATSEIDE-167.80, SONATSOFTW-154.95, NIITLTD-81.50, TAKE-147.20, RMCL-35.05, TIMETECHNO-66.10, MARSANS-103.95.

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள் - டிரேடிங்குக்கு கவனிக்கலாம்: JVLAGRO-19.45, HCLTECH-998.25, GABRIEL-85.40, CIPLA-709.05, RUSHIL-96.30, TWL-116.40, APOLLOTYRE-202.55, ANANTRAJ-41.40, BHEL-278.35, RAMCOIND-106.50, KOPRAN-61.25, SONATSOFTW-154.95, JMFINANCIAL-51.75, ENGINERSIN-241.70, RMCL-35.05, ADFFOODS-82.50, MAHABANK-38.55, PLETHICO-33.25.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்!

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:  GPPL-235.70, JMTAUTOLTD-115.55, ORIENTPPR-29.50, SNOWMAN-112.85, HDFC-1340.40, HCLTECH-998.25, HINDUNILVR-921.65, BALLARPUR-15.00, GABRIEL-85.40, TECHM-530.70, CIPLA-709.05, ASTRAMICRO-126.40, ASIANPAINT-882.80, GRANULES-114.20, PRICOL-39.95, ASHOKLEY-84.45, TWL-116.40, MIC-28.45, FSL-34.35, GOKEX-84.75, GREAVESCOT-148.55, APOLLOTYRE-202.55, ANANTRAJ-41.40, INDUSINDBK-977.70, ELECTCAST-21.20, VASCONEQ-25.55.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட்கிழமை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:  GABRIEL-85.40, RUSHIL-96.30, GREAVESCOT-148.55, VASCONEQ-25.55, UFLEX-159.05, FRL-121.80, RAMCOIND-106.50, BANKBARODA-177.50, NDL-147, TAKE-147.20, ADFFOODS-82.50, INTELLECT-140.10, SRIPIPES-310.95, NELCAST-50.60, PLETHICO-33.25, HCL-INSYS-45.65.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்!

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ITC-326, YESBANK-828.95, ALBK-91.95, HCLTECH -998.25, ADFFOODS-82.50, HATHWAY- 50.20, DAAWAT-196.40, RUCHIRA-36.50.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: TATACHEM-490, COLPAL-1989.85, NUCLEUS-283.70.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் : HCC-22.25, AMTEKAUTO-169.70, VAKRANGEE-166.50, UPL-535.70, PFS-42.70, KPIT-110.40, IL&FSTRANS-148.25, NITINSPIN-87.25, ESCORTS-141.45, DCBBANK-132.35, INDIANB-132.40, NBCC-1028.50, RAYMOND-468.40, LIBERTSHOE-248.05, SOBHA-350.60, ITI-26.20, GRAPHITE-79.30.

நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டி விகித முடிவுகளே திசையை முடிவு செய்யும்!

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: APOLLOTYRE-202.55, TITAN-323.65, ORIENTPPR-29.50, JBFIND-301., THOMASCOOK-224.65.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்:  UNIONBANK-176.50, INDIACEM-92.60, HCL-INSYS-45.65, ANDHRABANK-74.10, BAJAJHIND-14.70, GREAVESCOT-148.55, ORCHIDCHEM-66.50, HCLTECH-998.25, TAKE-147.20, GABRIEL-85.40, WOCKPHARMA- 1564, KOPRAN-61.25, SONATSOFTW-154.95, RMCL-35.05, NILKAMAL-896.55, ADFFOODS-82.50, IGARISHI-691.30, ANGIND-46.50

வாசகர்கள் கவனத்துக்கு: உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தை யும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி மேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு:

நீங்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பற்றிய  சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: navdesk@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். நீங்கள் பங்கு வாங்கிய விலையைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.