Published:Updated:

ஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை!

ஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை!

‘‘எட்டு முக்கியச் செக்டார்களின் வளர்ச்சி குறைந்துள் ளது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் செய்திதான்’’ என்றபடி, நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘வரும்போதே செய்தியை சொன்னபடி வருகிறீர்களே, அப்படி எங்கே இருந்துதான் பிடிக்கிறீர்?’’ என்று நாம் கேட்க, சிரித்துக்கொண்டே தன் செல்போனை கோட் பாக்கெட்டுக் குள் வைத்துக் கொண்டார் ஷேர்லக். அவரிடம் மேற்கொண்டு கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘பங்குச் சந்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உயர்ந்து வருகிறதே?’’ என்றோம் மகிழ்ச்சியுடன்.

ஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பங்குச் சந்தையின் பாசிட்டிவ் சிக்னலுக்கு மூன்று முக்கியக் காரணங்கள். முதலாவது காரணம், சீனச் சந்தையில் இன்னும் தத்தளிப்பு குறைய வில்லை. திடீரென ஆறு, ஏழு சதவிகிதம் இறங்குவதும்; பின்பு உயர்வதுமாகவும் இருக்கிறது. இதனால் எஃப்ஐஐகள் அந்தச் சந்தைக்குள் நுழைய தயக்கம் காட்டி வருகிறார்கள். எனவே, அவர்களின் கவனம் நம் சந்தையின் பக்கம் திரும்பி இருக்கிறது. இரண்டாவது, காரணம், அமெரிக்க ஃபெட் ரிசர்வ் கூட்டம் நடந்ததில், வட்டி உயர்வு தற்போதைக்கு இல்லை என்று தெரிந்துவிட்டது. வருகிற செப்டம்பர் மாதம் கடைசியில் அல்லது டிசம்பர் மாத தொடக் கத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்றே தெரிகிறது. எனவே, மீண்டும் நம் சந்தை நோக்கி வர ஆரம்பித்தி ருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்ஐஐகள். மூன்றாவது காரணம், ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் 0.25% வட்டி குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது.

தற்போது 28,000-தைத் தாண்டி  வர்த்தகமாகிறது சென்செக்ஸ். பெரிய அளவில் நெகட்டிவ் செய்திகள் வராமல் போனால், வருகிற தீபாவளிக்குள் சென்செக்ஸ் 30,000-தைத் தொடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீண்ட காலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நல்ல பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வரலாம்’’ என்றவருக்கு, சுடான டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தவரிடம், ‘‘ஜூன் 30-ம் தேதி எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி எப்படி முடிந்திருக்கிறது?’’ என அடுத்தக் கேள்வி கேட்டோம்.

‘‘டிரேடர்கள், எஃப்ஐஐக்கள், ஹெச்என்ஐக்கள் ஆகியோர் புதிதாக ஆகஸ்ட் சீரிஸில் லாங் பொசிஷன்களை ஏற்படுத்திருக் கிறார்கள். மேலும், தற்போதுள்ள புல்லிஷ் பொசிஷன்களை அடுத்த சீரிஸுக்கு நகர்த்தி இருக் கிறார்கள். ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ வட்டியைக் குறைக்கும் என்பதே இவர்களின் எதிர் பார்ப்பு.  வட்டி குறைக்கப்பட்டால் வங்கிகள், வாகனத் துறை நிறுவனங்கள், கேப்பிட்டல் கூட்ஸ் துறைகள் லாபம் அடை யும் என்கிற கணிப்பில் இந்தத் துறை நிறுவனப் பங்குகளுக்கான எஃப் அண்ட் ஓ கேரிஃபார்வேர்டு அதிகரித்திருக்கிறது. நிஃப்டி ரோலோவர் அல்லது கேரிஃபார்வேர்டு டிரேடிங் பொசிஷன்கள் ஜூலை மாதத்தி லிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு 66 சதவிகிதமாக உள்ளது.

 இது கடந்த 3 மாத சராசரி ரோலோவராக இருக்கிறது. அதே நேரத்தில், நிஃப்டி ஓப்பன் இன்ட்ரஸ்ட் (அவுட்ஸ்டேன்டிங் பொசிஷன்கள்) ஜூலை மாத ஆரம்பித்தில் ரூ.12,300 கோடியாக இருந்தது. இது, ஆகஸ்டில் ரூ.14,400 கோடியாக அதிகரித்துள்ளது. ஓப்பன் இன்ட்ரஸ்ட் அதிகரிப்பது என்பது ஆகஸ்ட் சீரிஸில் லாங் பொசிஷன்கள் அதிகரித்திருப் பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மொத்த ரோலோவர் ஜூலை யிலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு 77 சதவிகிதமாக உள்ளது. மொத்த ஓப்பன் இன்ட்ரஸ்ட் ஜூலையில் ரூ.68,500 கோடியாக இருந்தது. இது ஆகஸ்டில் ரூ.80,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகம் ரோலோவர் ஆனது மிட் கேப் பங்குகளாக இருக்கின்றன. இது சந்தைக்கு பாசிடிவ்வான விஷயம். ஆகஸ்ட் சீரிஸில் நிஃப்டி 8650-ஐ தொடும் என எதிர்பார்க் கப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் நிகர விற்பனை யாளராக இருந்த எஃப்ஐஐக்கள் ஜூலை யில் ஏறக்குறைய ரூ.5,100 கோடி மதிப்புள்ள பங்குகளில் நிகர முதலீட்டை மேற் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

‘‘ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா?’’ என்று சந்தேகத்துடன் கேட்டோம்.

‘‘குறைந்துவரும் கச்சா எண்ணெய் விலை, பருவமழை மேம்பட்டு வருவது போன்ற வற்றால் பணவீக்க விகிதம் கட்டுக்குள் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக அதிகரித்துள்ளதால் இந்த முறை கடனுக்கான வட்டியைக் குறைப்பது சாத்தியமில்லை என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

‘‘ஈக்விட்டி மியூச்சுவல் முதலீடும் கணிசமாக உயர்ந்திருக் கிறதே?’’ என்றோம் ஆச்சர்யத்துடன்.

‘‘கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டுக் காலத்தில் சென்செக்ஸ் 9 சதவிகித வளர்ச்சி தான் கண்டிருக்கிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு  ரூ.3.72 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அதிகரிக்க சுமார் 9 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் காரணமாக இருக்கிறார்கள்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘சைன்ஜென் ஐபிஓக்கு அமோக ஆதரவு கிடைத்திருக் கிறதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘பயோகான் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு நிறுவனமான சைன்ஜென் (Syngene) ஐபிஓக்கு சுமார் 32 மடங்கு மேல் ஆதரவு கிடைத்திருக்கிறது. மொத்தம் 1.60 கோடி பங்குகள் விற்பனைக்கு உள்ள நிலையில் 51.12 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங் கள் வந்துள்ளன.  இந்த நிறுவனத் தின் பிசினஸ் மாடல் பிரத்தியேக மானது என்பதால் பங்கு வெளியீட்டுக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பதாக அனலிஸ்ட்டு கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் ஐபிஓ வர இதுவரைக்கும் மொத்தம் 23 கம்பெனிகள் செபி அமைப்பிடம் விண்ணப்பம் செய்துள்ளன. கடைசியாக விண்ணப்பித்த நிறுவனமாக பாரத் வயர் ரோப்ஸ் உள்ளது. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்குகள், ஓப்பன் ஆஃபர் முறையில் பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு 2.34 மடங்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. சந்தை ஏற்ற-இறக்கத்தில் இருந்தாலும் புதிய பங்கு விற்பனைகளுக்கு நல்ல ஆதரவு இருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக இருக்கின் றன’’ என்றார்.
‘‘காலாண்டு முடிவுகள் எப்படி..?’’ என்று கேட்டோம்.

‘‘பல நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் வந்திருக்கிறது. ஜூன் காலாண்டில் எம்ஆர்எஃப்-ன் விற்பனை அதிகரித்ததால் நிகர லாபம் 94% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 30% இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.
விற்பனை குறைவு மற்றும் லாப விகிதம் குறைந்துபோனதால் அம்புஜா சிமென்ட்ஸின் நிகர லாபம் 45% வீழ்ச்சி கண்டுள்ளது. ஃபாரக்ஸ் லாபம் மற்றும் வருமானம் உயர்ந்ததால் டெக் மஹிந்திராவின் நிகர லாபம் 7% உயர்ந்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு, செலவு குறைப்பு, சாதகமான கரன்சி பரிமாற்ற மதிப்பு போன்றவற்றால் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் 56% அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை குறைவு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், முதல் காலாண்டில் ரூ. 71.8 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது. தொடர்ந்து 7 காலாண்டுகளாக நிகர இழப்பைச் சந்தித்த இந்த நிறுவனம், தற்போது இரண்டு காலாண்டுகளாக நிகர லாபத்துக்கு வந்துள்ளது.

முதல் காலாண்டு வங்கித் துறைக்குப் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.காரணம் வாராக் கடன் அதிகரிப்பு, வரிக்கு அதிகத் தொகை சென்றதுதான்.

இந்தக் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியா (நிகர இழப்பு 84%), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (நிகர இழப்பு 22%), சிண்டிகேட் பேங்க் (நிகர இழப்பு 38%), பஞ்சாப் நேஷனல் பேங்க் (நிகர இழப்பு 49%) ஆகிய வங்கிகள் இழப்பு கண்டுள்ளன’’ என்றவர்,

‘‘டிஜிட்டல் இந்தியாவில் நீரே நல்ல, நல்ல பங்குகளை எல்லாம் சொல்லி இருக்கிறீரே’’ என்று நம்மைப் பாராட்டிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஷேர்லக்: பாசிட்டிவ் சிக்னலில் பங்குச் சந்தை!