சென்ற வாரம் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஒன்றான சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அதே கேட்டகிரியில் முதலீட்டுக்கு உகந்த ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

நமக்குக் கிடைக்கும் மிட் கேப் ஃபண்ட் திட்டங்களில் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டை பெஸ்ட் என்று கூறிவிட முடியாது. என்றாலும், இந்தத் திட்டத்தின் நீண்ட காலச் செயல்பாடு இந்த ஃபண்டுக்கு ஒரு சாதகமான அம்சம்.

மேலும், கடந்த சில ஆண்டு களுக்கு முன் ஆர்.ஜானகிராமன் இந்த ஃபண்டின் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொண்டுள் ளார். அவருடன் ரோஷி ஜெயின் என்பவரும் கூடுதல் ஃபண்ட் மேனேஜராக உள்ளார்.

ஆர்.ஜானகிராமன் ஒரு கைதேர்ந்த ஃபண்ட் மேனேஜர் ஆவார். மேலும். ஃப்ராங்க்ளின் ஃபண்ட் நிறுவனம் ஒரு நல்ல செயல்முறையைக் கொண்டுள்ள நிறுவனமாகும். இவையே நாம் இந்த ஃபண்டை பரிந்துரைப்பதற்குக் காரணமாகும்.

கடந்த 1, 3 மற்றும் 5 வருடங்களில் 1.74% - 3.90% அளவு கேட்டகிரி ஆவரேஜைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் கடந்த 10 வருட காலத்தில் கேட்டகிரியை ஒட்டியே வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (டிசம்பர் 01, 1993) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (ஜூலை 31, 2015) ரூ.69.11 லட்சமாக உள்ளது. இது கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 21.58% ஆகும்.

இந்த மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் தற்போது ரூ.3,576 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் 69 சதவிகிதம் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும், எஞ்சியது லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

யெஸ் பேங்க், அமர ராஜா பேட்டரீஸ், டோரண்ட் பார்மா, ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

இதன் போர்ட்ஃபோலியோவில் கேஷ் ஏறக்குறைய 8 சதவிகிதம் உள்ளது. இந்த ஃபண்டின் பீட்டா சந்தையையொட்டி 0.95 என்ற அளவில் உள்ளது. ஆல்ஃபா 16.24 என்ற அளவில் மிகவும் உன்னத மாக உள்ளது.

கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங் மற்றும் சர்வீசஸ் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ், ஹெல்த்கேர் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் அண்டர் வெயிட்டா கவும் உள்ளது. எந்த ஒரு பங்கும் 5 சதவிகிதத்துக்கு மிகாமல் உள்ளது.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.58.49 ஆகும். கடந்த 17 ஆண்டுகளாக (1999-லிருந்து) தொடர்ந்து இந்த ஃபண்ட் டிவிடெண்டை வழங்கி வருகிறது.

கடந்த எட்டு வருடங்களாக ஜூன் மாதத்தில் டிவிடெண்டை வழங்கி வருகிறது. தொடர்ச்சி யான டிவிடெண்ட் டிராக் ரெக்கார்டு இருப்பதால், டிவிடெண்டை எதிர்பார்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல ஃபண்டாக அமையும்.

ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு கேட்டகிரியை நாடுபவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

யாருக்கு ஏற்றது?

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

யார் முதலீடு செய்யக் கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதி யான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

ஃபண்ட் Q&A

ஐசிஐசிஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்டில் மாதம் 10,000 ரூபாயை கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா? இந்தப் பணம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எனக்குத் தேவை இல்லை!

ஜெரோம், சென்னை.

“ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ஒரு மிட் கேப் ஃபண்டாக உருவெடுத்து, தற்போது ஒரு லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டாக மாறியுள்ளது. இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கியக் காரணம், அந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த காலங்களில் கணிசமாகப் பெருகி இருப்பதுதான்.

தற்போது, ரூ.10,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை இந்த ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஆண்டுக்கு 21.21 சதவிகிதம் கூட்டு வட்டி அடிப்படையில் வருமானத்தைக் கொடுத்துள்ளது.

ஆரம்பத்தில் (ஆகஸ்ட் 16, 2004) முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 25.32 சதவிகித வருமானத்தைக் கூட்டு வட்டி அடிப்படையில் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் நல்ல செயல்பாட் டுடன் இருப்பதால், இந்தத் திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வரலாம்.''

எனக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 3 முதல் 5 லட்சம் ரூபாய் தேவை. எந்த ஃபண்டுகளில், மாதம் எவ்வளவு முதலீடு செய்தால் அந்தத் தொகை கிடைக்கும்?

ஆனந்தபத்மநாபன்.

“நீங்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எஸ்ஐபி முறையில் கீழ்க்கண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

* ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட் – ரூ 2,500

* பி.என்.பி பரிபாஸ் ஈக்விட்டி ஃபண்ட் – ரூ 2,500.''