சமீபத்தில் மிட் கேப் பங்குகள் நல்ல லாபத்தைத் தந்துள்ளன. இதனால், மிட் கேப் ஃபண்டுகளும்

நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இந்த நிலையில், மிட் கேப் ஃபண்டுகளின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரியும் தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பாலசுப்பிரமணியன், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இனி...

அண்மைக் காலத் தில் இந்திய பங்குச் சந்தை யில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ-க்கள்) முதலீட்டைக் குறைத்து வருகிறார்களே?

‘‘நீண்ட காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐக்கள் நிகர முதலீட்டாளர்களாக இருந்து வருகிறார்கள். அதே நேரத்தில், அண்மைக் காலத்தில் அவர்கள் இந்திய பங்குச் சந்தை யில் முதலீட்டைக் குறைக்கக் காரணம், சீனா மற்றும் கிரீஸ் பிரச்னையால் இந்திய சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் உருவாகி இருப்பதே. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சர்வதேச அளவில், குறிப்பாக வளர்ந்து வரும் பங்குச் சந்தைகளில் இந்தியாவில்தான் எஃப்ஐஐ-க் களின் முதலீடு அதிகமாக இருக்கிறது.”

எந்தத் துறைகளில் மிட் கேப் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிக மாக இருக்கிறது?

‘‘முதலீட்டுக்கு நிறுவனங் களைத் தேர்வு செய்யும்போது துறையைப் பார்க்கும் அதே நேரத்தில், நிறுவனங்களின் ஃபண்டமென்டல்களைப் பார்ப்பது மிக முக்கியம். வாகன உதிரிபாகங்கள், பார்மா, எஃப்எம்சிஜி, இன்ஜினீயரிங் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறைகளிலிருந்து மிட் கேப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கை யில் வந்துகொண்டிருக்கின்றன.”

வருமான அடிப்படையில் பார்க்கும்போது, லார்ஜ் கேப் ஃபண்டுகள், மிட் கேப் ஃபண்டு கள் - எது பெஸ்ட்?

‘‘மொத்தமாகப் பார்க்கும் போது, நீண்ட காலத்தில் லார்ஜ் கேப் நிறுவனங்களைவிட, இண்டெக்ஸ் நிறுவனங்களைவிட மிட் கேப் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின் றன. நீண்ட காலத்தில் மிட் கேப் நிறுவனங்கள், லார்ஜ் கேப் நிறுவனங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நீண்ட காலத்தில் லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட, மிட் கேப் ஃபண்டுகள் அதிக வருமானத்தைத் தரக்கூடும். உதாரணத்துக்கு, கடந்த ஐந்தாண்டுகளில் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளின் சராசரி வருமானம் 24 சதவிகிதமாக உள்ளது. அதேநேரத்தில், மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு களின் சராசரி வருமானம் 37 சதவிகிதமாக உள்ளது.”

மிட் கேப் ஃபண்டுகளின் வளர்ச்சி குறித்து உங்களின் கருத்து என்ன?

“பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வரும் சூழ்நிலையில், மிட் கேப் நிறுவனங்கள் பயன் அடையும். மிட் கேப் நிறுவனங் களின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்பைக் கொண்டது. எனவே, மிட் கேப் ஃபண்டுகள் நல்ல லாபத்தை நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் எனலாம்.”

மிட் கேப் ஃபண்டுகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வையா?

‘‘சந்தேகமே இல்லாமல், சிறு முதலீட்டாளர்கள் மிட் கேப் ஃபண்டுகளில் தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். ஃபண்ட் மேனேஜர்கள், மிட் கேப் நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் போது, பல வலுவான கொள்கை களின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில், மிட் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தந்து வருகின்றன.

பங்கு சார்ந்த ஃபண்டுகள் மற்றும் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அஸெட் அலோகேஷனை மனதில் கொள்வது மிக முக்கியம். ஈக்விட்டி ஃபண்டுகள் என்கிற போது, அதில் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் மல்டி கேப் ஃபண்டுகள் கலந்து இடம்பெறுவது அவசியம். அப்போதுதான் ரிஸ்க் பரவலாக்கப்படும். அதேநேரத் தில், நீண்ட கால முதலீடு என்கிறபட்சத்தில் மிட் கேப் ஃபண்டுகளுக்கு போர்ட் ஃபோலியோவில் அதிக ஒதுக்கீடு கொடுக்கலாம்.”

சி.சரவணன்