பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது பலரது ஆசை. ஆனால்,

எந்த வகையான பங்குகளில் முதலீடு செய்வது என்பதில்தான் எப்போதும் குழப்பம். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நீண்ட கால முதலீடுதான் சிறந்தது. அந்த அடிப்படையில் நிறுவனப் பங்குகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, ஸ்மால் கேப், மிட் கேப், லார்ஜ் கேப்.

இப்போது உள்ள லார்ஜ் கேப் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் ஸ்மால் கேப்பாக இருந்து, மிட் கேப்பாக மாறி, பின்பு லார்ஜ் கேப் ஆகி உள்ளன. ஒரு பங்கு மிட் கேப் நிறுவனமாக இருக்கும்போதே முதலீடு செய்தால்தான், பிற்பாடு நிறைய லாபம் பார்க்க முடியும். எனவே, மிட் கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. முதலீட்டுக்கேற்ற மிட் கேப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இனி பார்ப்போம்.

தரமான நிறுவனம்!

மிட் கேப் பங்கு என்ற வுடன் இருக்கும் அத்தனை பங்குகளிலும் கண்ணை முடிக்கொண்டு முதலீடு செய்ய முடியாது. முதலீடு செய்வதற்குமுன் அந்த நிறுவனத்தைக் குறித்த அடிப்படையான ஆய்வை மேற்கொள்வது அவசியம். அதாவது, முதலீடு செய்யும் பங்கின் நிர்வாகத்துக்கு 90 சதவிகிதமும், துறை சார்ந்த விஷயங்களுக்கு 9 சதவிகித மும், பிற விஷயங்களுக்கு 1 சதவிகிதமும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முன்னணி முதலீட்டாளர் ஃபில் ஃபிஷர் கூறுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம், இன்ஃபோசிஸ்தான். இந்த நிறுவனப் பங்குகளை வாங்கிய பல முதலீட்டாளர் களை இந்த நிறுவனம் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், நிறுவனத்தின் நிர்வாகம்தான். ஆனால், பல மிட் கேப் பங்கு நிறுவனத்தின் நிர்வாகங்கள் சரியாக தொழில் நடத்தாததால், சந்தையைவிட்டு வெளியே போகவும் செய்திருக்கின்றன.

எளிமையான பிசினஸ்!

ஒரு நிறுவனம் செய்யும் தொழிலின் அடிப்படையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு துறையைச் சார்ந்த அனைத்து நிறுவனங் களின் போக்கும் ஒரேமாதிரியாகவே இருக்கும் என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு நிறுவனத்துக்குமான தொழில் வித்தியாசப்படும். சில நிறுவ னங்கள் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும். சில நிறுவனங்கள் மருந்துப் பொருட் களை உற்பத்தி செய்யாமல் மற்றவர்களிடமிருந்து வாங்கி விற்கும். ஒரு நிறுவனத்தின் தொழில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும்போது நாம் மனம் தளராமல் இருக்க முடியும்.

வரலாறு முக்கியம்!

கடந்த காலங்களில் அந்த நிறுவனங்களின் வியாபாரம் எப்படி இருந்தது என்பதைக் கவனிப்பது

முக்கியம். ஏனெ னில், மிட் கேப் நிலையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை அதனுடைய விற்பனை மூலமாகத்தான் அறிய முடியும். கடந்த காலங்களில் எவ்வளவு விற்பனை நடந்துள் ளது, அதன் மூலமாக லாபம் எவ்வளவு கிடைத்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந் திருக்க வேண்டும். சில வருடங் களில் மட்டும் விற்பனை அல்லது லாபம் குறைந்திருந்தால் அதற் கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி!

ஒரு நிறுவனத்தின் கடந்த கால வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி. மிட் கேப் நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருவதால், எதிர்கால வியாபார வளர்ச்சி, லாபம் போன்றவை பங்குகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எதிர்கால வளர்ச்சியைக் கண்டறிய பல வழிகள் உள்ளன. அதில், மிக முக்கியமானது அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், அவர்களின் நிர்வாகத் திறமை, ஆராய்ச்சி நிறுவனங்களின் கணிப்பு ஆகியவற்றின் மூலமாக அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

பேலன்ஸ் ஷீட்:

மிட் கேப் நிறுவனங்களைப் பொறுத்தவரை, பேலன்ஸ் ஷீட்டை ஆராய்வது மிக அவசியம். ஒரு நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலை, எதிர்கால வளர்ச்சி, அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் உள்ளது, கையிருப்பில் எவ்வளவு பணமாக உள்ளது, வட்டி எவ்வளவு செலுத்த வேண்டியுள்ளது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். கடன் உள்ள நிறுவனம் எனில், எதற்காக அந்த நிறுவனம் கடன் வாங்கி உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் கடன் இருக்கும்போது அந்த நிறுவனத்தைத் தவிர்ப்பது நல்லது. எனவே, முடிந்தவரை கடன் இல்லாத நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும்.

விலை மதிப்பீடு!

நீண்ட கால முதலீடு என்றா லும் பங்குகளைச் சரியான விலையில் வாங்கினால்தான் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பங்குகளின் சரியான விலையைக் கண்டுபிடிக்க உதவியாக இருப்பது பங்கின் பி/இ விகிதம். இந்த பி/இ விகிதம், பங்கின் விலை அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா என்பதைக் காண்பிக்கும்.

இந்த பி/இ விகிதத்தை, துறை சார்ந்த மற்ற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். அதாவது, பார்மா துறையின் பெரும்பாலான பங்குகளின் பி/இ விகிதம் ஒரேமாதிரியாக இருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு பங்கின் பி/இ மட்டும் அதிகமாக இருந்தால், அந்தப் பங்கை தவிர்ப்பது நல்லது. தேவைப் பட்டால் எதனால் அந்த ஒரு பங்கின் பி/இ மட்டும் வித்தியாசப் படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

பங்கு முதலீடு!

மிட் கேப் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அந்த மிட் கேப் நிறுவனத்தின் பங்கில் யார் முதலீடு செய்துள்ளார்கள், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களா, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களா என்பதை ஆராய வேண்டும். இந்த முதலீடுகள் அதிகமாக இருக்கும் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கான அறிகுறி.

அதிக ரிஸ்க்-அதிக லாபம்!

தற்போது மிட் கேப் பங்கு களின் இண்டெக்ஸ் ஆன சிஎன் எக்ஸ் இண்டெக்ஸ் உச்சத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான முதலீட்டாளர்களின் கவனம் மிட் கேப் பங்குகளில் உள்ளது. மேலும், சந்தை இறங்கும் சமயத்தில் மிட் கேப் பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

இதற்குக் காரணம், சந்தை ஏற்றம் அடையும்போது சந்தையைவிட அதிகமாக ஏற்றம் கண்டது. மிட் கேப் பங்குகளில் முதலீடு என்பது அதிக ரிஸ்க் - அதிக லாபம் என்ற அடிப்படை யில்தான் அமையும். மிட் கேப் பங்குகள் சந்தை ஏறும்போது சந்தையைக் காட்டிலும் அதிக மாக ஏறுவதும், சந்தை இறங்கும் போது சந்தையைக் காட்டிலும் கடுமையாக வீழ்ச்சி அடைவதும் வரலாறு!

மிட் கேப் பங்கு லாபம்!

2009-2014 காலகட்டத்தில் அதிக லாபம் கொடுத்த மிட் கேப் பங்குகள் எவை என்று பார்த்தால், ஐஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சுப்ரீம் இண்டஸ்ட் ரீஸ், அமரராஜா பேட்டரீஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், அரோபிந்தோ பார்மா ஆகிய பங்குகளைச் சொல்லலாம். கடந்த 2004-2014 காலகட்டத்தில் லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் இண்டெக்ஸை ஒப்பிடும்போது, 6 ஆண்டுகள் மிட் கேப் இண்டெக்ஸ் நல்ல வருமானம் கொடுத்துள்ளது. (பார்க்க, அட்டவணை) சந்தை ஏறும் சமயங்களில் மிட் கேப் பங்குகள், லார்ஜ் கேப் பங்கை விட அதிக வருமானம் கொடுத் துள்ளது. இந்த ஆண்டில் ஜூலை மாத இறுதி வரை லார்ஜ் கேப் இண்டெக்ஸ் உயர்வு 2.5 சதவிகித மாகவும், மிட் கேப் இண்டெக்ஸ் உயர்வு 8.5 சதவிகிதமாகவும் உள்ளது.

3 முதல் 5 ஆண்டுகளில்..!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி படிப்படியாக முன்னேற்றம் அடைவதற்கான சூழல் உள்ளது. வட்டி விகிதம் குறைந்து வருகிறது. நிறுவனங்களின் வருமானம் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை யென்றாலும், 2016-ல் முன்னேற் றம் அடைய வாய்ப்புள்ளது.

எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் ரிஸ்க் தன்மைக்கு ஏற்ப, தரமான மிட் கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால், அடுத்த 3-5 ஆண்டுகளில் நல்ல லாபம் ஈட்ட முடியும். லார்ஜ் கேப் பங்கு களைப்போல, இந்தப் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, அதை மறந்துவிட முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பங்கின் வளர்ச்சியை நேரடியாகக் கவனித்து அறிவது அவசியம்!