Published:Updated:

ஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்!

ஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்!

நாணயம் விகடன் ‘மிட் கேப் ஸ்பெஷல்’ அட்டைப் படம் அச்சாகி நம் டேபிள் மீது இருந்ததைப் பார்த்தவுடன், ‘அட, சரியான நேரத்தில் சரியான டாப்பிக்கைப் பிடித்திருக்கிறீரே’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘மிட் கேப் பங்குகள் பற்றி உம் கருத்து என்ன?’’ என்று ஆரம்பித்தோம்.

‘‘மிட் கேப் பங்குகள் நல்ல வருமானம் தரத்தக்கவை என்றாலும், இப்போது அதன் விலை உச்சத்தில் இருக்கிறது. பல முதலீட்டாளர்கள் இந்தவகைப் பங்குகளில் கடந்த சில மாதங் களாகத் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், விலை அதிக மாகவே இருக்கிறது. சனோபி இந்தியா, வெல்ஸ்பூன் இந்தியா, பிசி ஜுவல்லர்ஸ், ஃபேக் பியரிங் இந்தியா, எஸ்ஸார் ஆயில் போன்ற பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் மிகவும் ஜாக்கிரதையாகவே இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்’’ என்றவரிடம், ‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

ஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அண்மைக் காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் சிறு முதலீட் டாளர்களின் பங்களிப்புக் கணிசமாக அதிகரித்து வருகிறது. அவர்கள் இப்போது நேரடிப் பங்கு முதலீட்டுக்குப் பதில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஈக்விட்டி ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு மாதத்துக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.2,100 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஜூலை மாதத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகை ரூ.13 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று கடந்த 64 வருடத்தில் முதல்முறையாக பிஎஃப் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இடிஎஃப்-ல் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப் படுகிறது. இதில் நிஃப்டி இடிஎஃப்-ல் 75%, சென்செக்ஸ் இடிஎஃப்-ல் 25% முதலீடு செய்யப் படுகிறது. இதன் மூலம் பி.எஃப் வருமானம் தற்போதைய 8.5 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்கும் என மத்திய தொழி லாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தை கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 15% தந்்திருக்கிறது என்பதால், பிஎஃப் உறுப்பினர் களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் வைத்துப் பார்த்தால், நம் சந்தை பாசிட்டிவ் பாதை யிலேயே பயணிக்கிறது என்று அர்த்தம்’’ என்றவருக்கு, சூடான லெமன் டீ தந்தோம்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி வந்து கொண்டிருக்கின்றன?’’ என்பது நம் அடுத்தக் கேள்வி.

‘‘வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்தால் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 21% குறைந்துபோய் உள்ளது. விற்பனை செலவு அதிகரித்ததால், சாஃப்ட்வேர் சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்-ன் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 3% குறைந்துள்ளது. வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், கனரா வங்கியின் நிகர லாபம் 40% வீழ்ச்சி கண்டுள்ளது. ஜூன் காலாண்டில் பிஹெச்இஎல்-ன் நிகர லாபம் 83% சரிந்துள்ளது. இதனால் பங்கின் விலை ஒரே நாளில் 8%  குறைந்து போனது.

ஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்!

இதுவரை வந்துள்ள நிறுவனங் களின் ரிசல்ட்படி, கடந்த ஆண்டில் நிகர விற்பனையானது ரூ.8.04 லட்சம் கோடியாக இருந்தது, இந்த ஆண்டில் 8.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக் கிறது. நிகர லாபம் கடந்த ஆண்டில் ரூ.75,878 கோடியாக  இருந்தது. தற்போது அது ரூ.76,099 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் மிகச் சிறிய அளவி லேயே முன்னேற்றம் அடைந் திருக்கிறோம். நம் பொருளாதார நிலை பெரிய அளவில் மாறிவிட வில்லை என்பதை இது காட்டுகிறது.  அடுத்தடுத்து வரும் காலாண்டுகளில் இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்புண்டு என்றாலும் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் ஈடுபட வேண்டும். இப்படியே போனால், மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கிவிடும்’’ என்று எச்சரித் தவரிடம், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வட்டி எதையும் குறைக்காமல் விட்டுவிட்டதே ஆர்பிஐ?’’ என்று கேட்டோம்.

‘‘பணவீக்க விகிதம் அதிகரித்த தால், ஆகஸ்ட் 4-ம் தேதி கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள வில்லை. அதே நேரத்தில், பணவீக்க விகிதம் 6 சதவிகிதத் துக்குக் கீழே செல்லும்போது மட்டும்தான் வட்டி விகிதம் குறைக்கப்படும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பல கமாடிட்டிகளின் விலை குறைந்து வருவதால், வரும் மாதங்களில் பணவீக்க விகிதம் குறையும் என எதிர்பார் க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதத்தில் வட்டி குறைக்கப் படலாம் என்கிறார்கள் சிலர். ஆனால், போதிய அளவு மழை பெய்ய வில்லை என்றால், விளை பொருட்களின் உற்பத்தி குறையும். அப்போது மீண்டும் பொருட்களின் விலை உயரும். இதனால் வட்டி விகிதம் குறைக்கப்படாமலே போகவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் வேறு சிலர்’’ என்றார்.

‘‘நிஃப்டி பங்குகளில் எஃப்ஐஐக்கள் முதலீட்டைக் குறைத்திருக்கிறார்களே?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் எஃப்ஐஐக்கள், நிஃப்டி 50 நிறுவனங்களில் 41 நிறுவனங்களில் அவர்களின் முதலீட்டைக் குறைத்திருக் கிறார்கள். இதற்கு கிரீஸ் பிரச்னையை முக்கியக் காரண மாக அனலிஸ்ட்டுகள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐகளின் பங்களிப்பு 2015 மார்ச் இறுதியில் 29.2 சதவிகிதமாக இருந்தது. அது, ஜூன் மாதத்தில் 28.6 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது’’ என்றார்.

‘‘ஜூன் காலாண்டில் நிறுவ னங்களின் புரமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைத் துள்ளது அதிகரித்துள்ளதே?’’ என்றோம்.

‘‘2015 மார்ச் கடைசியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி. இது ஜூன் கடைசியில் 11.5% அதிகரித்து, ரூ.1.94 லட்சம் கோடியாக உயர்ந்்துள்ளது. மொத்தம் 3,480 நிறுவனங்களின் நிறுவனர்கள் பங்குகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். அதிகப் பங்குகள் அடமானம் வைத்தி ருக்கும் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. ஐஎல் அண்ட் எஃப்எஸ் டிரான்ஸ் போர்டேஷன், அதானி என்டர்பிரைசஸ் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற முன்னணி நிறுவனங்கள்கூட அதிக எண்ணிக்கையில் நிறுவனர்களின் பங்குகளை அடமானம் வைத்துள்ளன’’ என்றவர், ‘‘நீரே ஃபாலோ பண்ணவேண்டிய மிட் கேப் பங்குகளைத் தந்துவிட்டதால், இப்போதைக்கு நான் எதுவும் தரவில்லை’’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.