மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்பதுதான் பங்கு விலக்கல் (Disinvestment) எனப்படுகிறது. அப்படி விலக்கிக்கொள்ளும் சமயத்தில் விற்கப்படும் பங்குகளை வாங்கும்போது முதலீட்டாளர்கள் எதை கவனிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.

குருட்டு நம்பிக்கை வேண்டாம்!

பொதுவாக, பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்கிற கருத்தை மனதில் வைத்துக் கொண்டு பங்கு விலக்கல் மூலம் வெளியிடப்படும் பங்குகளை வாங்காதீர்கள். ஒரு நிறுவனம் அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படு கிறது என்கிற ஒரே காரணத்தால் அதில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நம்பி முதலீடு செய்வது சரியல்ல. உதாரணமாக, செயில் போன்ற நிறுவனங்களின் பங்குகளில், பங்கு விலக்கலின் போது வாங்கி இருந்தால், இன்று நஷ்டத்தில் வர்த்தகமாவதை வருத்தத்தோடு பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

தள்ளுபடிகளை மட்டுமே பார்க்க வேண்டாம்!

ஒரு நிறுவனம் பங்கு விலக்கலின்போது பங்கின் விலையில் சிறு முதலீட்டாளர் களுக்கு என 5% தள்ளுபடி வழங்குகிறது. இந்தத் தள்ளுபடிக் காகவே பங்குகளில் முதலீடு செய்வது நல்ல முடிவல்ல.

இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த டிசம்பர் 5, 2014 அன்று செயில் நிறுவனம் பங்கு விலக்கல் அறிவித்து, 83 ரூபாய்க்கு வர்த்தக மாகி வந்த பங்குகளை 5% தள்ளுபடி விலைக்கு விற்றது. ஆஃபர் ஃபார் சேல் மூலம் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் அறிவிக்கப்பட்டு செயில் நிறுவன பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கி, ஒரு மணி நேரத்தில் 1.5 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் ஆனது. அந்தப் பங்கின் விலை தற்போது தோராயமாக 56 ரூபாய்க்கு (13 ஆகஸ்ட், 2015 நிலவரப்படி) வர்த்தகமாகி வருகிறது. 5% தள்ளுபடிக்காக முதலீடு செய்தவர்கள் இன்று ஏறத்தாழ 30% முதலீட்டு தொகையை இழந்து நிற்கிறார்கள்.

செக்டார் எப்படி?

பங்கு விலக்கல் செய்ய இருக்கும் நிறுவனத்துக்கு மட்டு மில்லாமல், அந்தத் துறைக்கும் எதிர்காலம் எப்படி இருக்கிறது, பிரச்னைகள் இருக்கிறது என்றா லும் குறைந்த காலத்திலேயே சரி செய்யப்பட்டு ஏற்றத்தில் வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறதா, நாம் முதலீடு செய்ய இருக்கும் துறை சம்பந்தமாக அரசின் கொள்கை எப்படி இருக்கிறது, தேர்தல் சமயம் என்றால் தற்போது இருக்கும் அரசாங்கம் மாறினாலும் நாம் முதலீடு செய்ய இருக்கும் துறைக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பார்ப்பது நல்லது.

இதே துறையில் ஈடுபடக்கூடிய இதர நிறுவனப் பங்குகளின் விலை மற்றும் மதிப்பு போன்ற வற்றை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். உலக அளவில் ஸ்டீலின் விற்பனை அதிகரித்து வரும் நிலையிலும் செயில் நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை. எனவே மேற்கூறியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிவிடெண்ட்டா, பிராஃபிட் புக்கா?

பங்கு விலக்கலின்போது பங்குகளை எதற்காக வாங்குகிறோம் என்பதில் முதலீடு செய்யப்போகும் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். பங்கின் டிவிடெண்டுக்காகவா அல்லது பங்கை விற்று லாபம் (பிராஃபிட் புக்) பார்க்கவா என்பதைத் தீர்மானித்துவிட்டுப் பங்கை வாங்குவது நல்லது.

பொது வாகவே, பொதுத்துறை நிறுவனங்கள் வருடாவருடம் நல்ல தொகையை டிவிடெண்ட் ஆக வழங்குகிறது. அப்படிக் கிடைக்கும் டிவிடெண்டுக்காகத் தான் முதலீடு செய்கிறீர்கள் என்றால் நிறுவனத்தின் செயல் பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடு செய்தால் போதும்.

அதே நேரம் டிவிடெண்ட் யீல்டு கூடுதலாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வும். அதாவது, பங்கின் முகமதிப்பு மற்றும் பங்கின் விலைக்குமான வித்தியாசம் குறைவாக இருக்க வேண்டும்.

தரத்தில் சமரசம் கூடாது!

பங்கு விலக்கல் செய்ய வந்திருக்கும் நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடுகள், நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, நிகர லாபம் மற்றும் நிகர வருமானத்தில் சீரான அதிகரிப்பு, தேவையான நேரங்களில் கூடுதல் முதலீடு, சரியான தருணங்களில் விரிவாக்கம், அந்த நிறுவனம் செயல்படும் துறையில் அந்த நிறுவனத்துக்கான தனித்தன்மை மற்றும் ஆளுமை, நிறுவனத்துக்கு இருக்கும் கடன், நிகர மதிப்பு போன்ற விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடு செய்தால் பங்குகள் நன்றாக விலை அதிகரித்து வர்த்தகமாகும்போது விற்று லாபத்தைப் பதிவு செய்யலாம்.

ஃப்ளோட்டிங் ஸ்டாக்!

ஒரு பொதுத்துறை நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளில் எத்தனை சதவிகித பங்குகளைப் பொதுமக்களிடம் ஏற்கெனவே வர்த்தகத்துக்கு விற்றிருக்கிறதோ அதைத்தான் ‘ஃப்ளோட்டிங் ஸ்டாக்’ என்பார்கள். ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள 100 சதவிகித பங்குகளில் 1 சதவிகித பங்கை மட்டும் பொதுமக்களிடம் ஏற்கெனவே விற்றிருக்கிறது என்றால், அந்த நிறுவனத்தின் ஃப்ளோட்டிங் ஸ்டாக் 1%. இப்படிக் குறைந்த ஃப்ளோட்டிங் ஸ்டாக் உள்ள நிறுவனங்களின் பங்குகளை மிகக் குறைந்த ஆட்களே வைத்திருப்பார்கள். எனவே, செயற்கையாக அதன் விலை அதிகரிக்கவோ, இறங்கவோ வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, அதிக அளவு மக்களிடம் பங்கு களை விற்றிருக்கும் நிறுவனம் பங்கு விலக்கலுக்கு வரும்போது அதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

விலையைக் கவனியுங்கள்!

ஒரு நிறுவனத்தின் பங்கு அதன் மதிப்பைவிடக் குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனங்கள் பங்கு விலக்கலுக்கு வரும்போது தாராளமாக முதலீடு செய்யலாம். ஒருவேளை பங்கு விலக்கலுக்கு வரும்போது, அதன் விலை வேறு ஏதேனும் காரணி களால் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது சிறந்தது. பங்குகளின் விலையில் அதிக ஏற்றம் இருந்தால், அந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மு.சா.கெளதமன்

டாப் 20 பணக்காரர்களில் பிரேம்ஜி, ஷிவ் நாடார்!

ஐடி துறையில் உலக அளவில் டாப் 100 பணக்காரர்களாக இருக்கும் மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 20 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த அஸிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் இடம்பிடித்துள்ளனர். அஸிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் தலைவர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 1,740 கோடி டாலர்கள். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று இவரை ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவருடைய சொத்து மதிப்பு 1,440 கோடி டாலராக உள்ளது.

மேலும், 100 பேர் பட்டியலில் இந்திய வம்சாவளிகளான ரமேஷ் வாத்வானி (73) மற்றும் பாரத் தேசாய் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 84,290 கோடி டாலர்கள். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் அமெரிக்கர்கள் மட்டும் 51 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (7,960 கோடி டாலர்) முதலிடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

லாபம் பார்க்கும் சிறுமுதலீட்டாளர்கள்!

இப்போது பங்கு விலக்கலுக்கு வரும் நிறுவனத்தின் பங்குகளை ஏற்கனவே கையில் வைத்திருக் கும்பட்சத்தில், அந்தப் பங்கு களைச் சந்தை விலைக்கு விற்று விட்டு அதைவிட 5% குறைவாகச் சிறு முதலீட்டாளராகப் பங்குகளை வாங்குவதையும் சிலர் செய்கிறார்கள்.