ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த கடன் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும்பட்சத்தில் லாங் டேர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் (LTCG) வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், சமீபத்திய மாறுதல்களினால், மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால்தான் லாங் டேர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் வரி பொருந்தும்.

இந்த மாற்றத்தினால் எம்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யும் பல முதலீட்டாளர்கள், மாற்றுத் திட்டத்தை தேடினார்கள். இந்த தேடுதலில் உருவானதுதான் ஈக்விட்டி சேவர் அல்லது ஈக்விட்டி சேவிங்ஸ் அல்லது ஈக்விட்டி இன்கம் ஃபண்டுகள் என்று அழைக்கப்படும் கேட்டகிரி. இந்த கேட்டகிரி யிலிருந்து சமீப காலத்தில் நிறைய என்எஃப்ஓ-க்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த கேட்டகிரி ஃபண்டுகளில் எம்ஐபி போன்ற அல்லது அதைவிட சற்றுக் கூடுதலான வருமானம் கிடைக்கும்; அதே சமயத்தில், ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், வரும் லாபத்துக்கு எந்தவிதமான வரியும் கட்ட வேண்டாம். ஏனென்றால் இந்த ஃபண்டுக்கு ஈக்விட்டி டிடெக்ஷன் பொருந் தும். அப்படியென்றால், இந்த வகை ஃபண்டுகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா?

இந்த வகை ஃபண்டுகள் பொதுவாக மூன்று வகையாக தங்களின் முதலீட்டைப் பிரித்துக் கொள்கின்றன. ஒரு பகுதியை கடன் சார்ந்த உபகரணங்களிலும், மற்றொரு பகுதியை பங்கு சார்ந்த முதலீட்டிலும், மூன்றாவது பகுதியை ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும் முதலீடு செய்கின்றன. இந்த ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகள் முழுவதும் பங்கு சார்ந்த உபகரணங்களிலேயே எடுக்கப்படுகின்றன. அதாவது, பங்குகளை ஒரு தொகைக்கு வாங்கிவிட்டு, அதே அளவு தொகைக்கு ஈடாக ஃப்யூச்சர்ஸ் சந்தையில் விற்றுவிடுவார்கள். மேற்கூறியதற்கு உல்டாவாகவும் நடக்கலாம். இவ்வாறு வாங்குவதற்கும் விற்பதற்கும் உண்டான வித்தியாசம்தான் லாபம்.

இந்த வித்தியாசம் பொதுவாக, ஒரு ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு சமமாக இருக்கும். ஆக, இந்தவிதமான ஃபண்டுகளின் வருமானம் ஏறக்குறைய 60% கடன் சார்ந்த முதலீடுகளில் வரும்

வருமானத்தைப் போலவும், எஞ்சியது பங்கு சார்ந்த முதலீட்டி லிருந்து வரும் வருமானத்தைப் போலவும் இருக்கும்.

ஐசிஐசிஐ புரூ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மேற்கூறிய கேட்டகிரியில் வராவிட்டாலும், ஏறக்குறைய நாம் மேலே கூறிய கருத்தில்தான் செயல்பட்டு வருகிறது.

இந்த ஃபண்ட் 35% வரை கடன் சார்ந்த உபகரணங்களில் முதலீடு செய்கிறது. எஞ்சியது ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்யப்படுகிறது.

அதே சமயத்தில், சந்தைகள் மிகவும் கீழிறங்கி இருந்தால், 80% வரை நேரடி பங்குகளில் முதலீடு செய்யவும் ஆப்ஷன் ஏற்படுத்திக் கொண்டு உள்ளது. தற்போது ஏறக்குறைய 33% கடன் சார்ந்த முதலீடுகளிலும், 51% பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சிய பணம் ரொக்கமாகவும் உள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப் பட்டது டிசம்பர் 2006 -ம் ஆண்டு. இந்த ஃபண்டின் முக்கிய நோக்கம், குறைந்த ஏற்ற இறக்கத்தில், சீரான வருமானத்தைத் தருவதாகும்.

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, இந்த ஃபண்ட் தனது பங்கு சார்ந்த விகிதத்தை குறைத்துக் கொள்ளும். அதேபோல், சந்தை கீழே இருக்கும்போது பங்கு சார்ந்த முதலீட்டை (அதிகபட்சம் 80% வரை) அதிகப்படுத்திக் கொள்ளும்.

இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு, பி/பிவி (Price/ Book Value) விகிதத்தை உபயோகித்துக் கொள்கிறது. தினசரி அடிப்்படை யில் இந்த மாற்றம் நிகழ்கிறது. இந்தப் பண்பாட்டினால், சந்தை ஏறும்போது பிற பேலன்ஸ்டு ஃபண்டுகளைப் போல் ஏறாது. அதேபோல், சந்தை இறங்கும் போது பிற பேலன்ஸ்டு ஃபண்டுகளைப் போல் விழவும் செய்யாது.

தற்போது ரூ.8,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் மனீஷ் குன்வானி மற்றும் அஷ்வின் ஜெயின் ஆவார்கள்.

இந்த ஃபண்ட் மாதாந்திர டிவிடெண்ட் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. செப்டம்பர் 2013-லிருந்து ஒவ்வொரு மாதமும் டிவிடெண்ட்டை தொடர்ந்து வழங்கியுள்ளது.

காலாண்டு மற்றும் வருடாந்திர டிவிடெண்ட் ஆப்ஷன்களும் உள்ளது. வழங்கப்படும் டிவிடெண்ட் டாக்ஸ் ஃப்ரீ ஆகும்.

குறைவான ஏற்ற இறக்கத்தில் பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், நீண்ட கால டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானத்தை விரும்புபவர்கள், தொடர்ச்சி யான பணவரத்தை விரும்புபவர் கள், சற்று கூடுதல் ரிஸ்க்கில் டாக்ஸ் ஃப்ரீ வருமானத்தை விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை முதலீடு செய்ய விரும்புபவர்கள், பேலன்ஸ்டு ஃபண்டுகளைவிட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பு பவர்கள், குறைவான ஏற்ற இறக்கத்தை நாடுபவர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், மீடியம் டேர்மில் பணம் தேவைப் படுபவர்கள், நீண்ட கால டெபாசிட்டை நாடுபவர்கள், கேஷ் ஃப்ளோ தேவைப் படுபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்!

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், அதிக காலம் காத்திருக்க முடிந்த வர்கள், செல்வத்தை உண்டு பண்ண விரும்புபவர்கள் இதில் முதலீடு செய்யக் கூடாது!

சொக்கலிங்கம் பழனியப்பன்