இன்று பங்குச் சந்தை திடீரென அதிகரித்ததாலோ என்னவோ, துள்ளல் நடையுடன் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘சந்தையின் போக்கு ஒரேமாதிரியாக இல்லையே! இரண்டு நாள் இறங்கிய சந்தை, இன்றைக்கு மட்டும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறதே!’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த வாரத்தில் இரண்டு வர்த்தக நாட்களில் சீனா தனது நாட்டின் பணமான யுவானின் மதிப்பைக் குறைத்தது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (65.01) உட்பட ஆசியாவின் பல நாடுகளின் செலாவணி மதிப்பு சரிவைச் சந்தித்தது. இந்திய கரன்சியின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறங்கி இருக்கிறது. வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 66.05-க்கு இறங்கும் என பெரும்பாலான அனலிஸ்ட்கள் கணித்தனர்.

இதனால் இந்தியப் பங்குச் சந்தையும் கரெக்ஷனை சந்தித்தது. ஆனால், சீனா தனது யுவானின் மதிப்பை 0.05% அதிகரித்தது. அதே சமயம், பணவீக்கம் குறைந்ததும் வெளியானதால் ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்து சென்செக்ஸ் 517 புள்ளிகள் அதிகரித்தது.

கடந்த ஓராண்டு காலத்தில் எமெர்ஜிங் மார்க்கெட்கள் சராசரியாக 17% இழப்பைச் சந்தித்து உள்ளது. பிரேசில் (-42.69%), சீனா (-0.30), ரஷ்யா (-27%) உள்ளிட்ட சந்தைகள் இழப்பைச் சந்துள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை 7.40% வருமானம் தந்துள்ளது. இது தொடரும் என்பதே என் கருத்து. நீண்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் இருப்பவர்கள் நிச்சயம் வீண்போக மாட்டார்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘உமக்கும் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்’’ என்றார் கம்பீரமாக. வாசகர்கள் சார்பில் நாமும் சுதந்திர தின வாழ்த்துக்களைச் சொன்னோம்.

‘‘மொத்த பணவீக்க விகிதம் மேலும் குறைந்திருக்கிறதே! இனியாவது ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?’’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘நுகர்வோர் பணவீக்க விகிதம் 2014 ஜூலையில் 7.96 சதவிகிதமாக இருந்தது. அது 2015 ஜூலையில் 3.78 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதற்கு உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே காரணம். தொழில் உற்பத்தி குறியீடும்(ஐஐபி), கடந்த இரு மாதங்களில் அதிகமாக ஜூன் மாதத்தில் 3.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை 49.22 டாலருக்கு இறங்கி இருக்கிறது. அந்த வகையில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், பருவ மழை ஆகஸ்ட் 13-ம் தேதி வரையில் வழக்கத்தைவிட 9% குறைவாக பெய்து உள்ளது. இதனால் விளைச்சல் குறைந்து விலைவாசி ஏறினால் வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் இல்லை என்று சொல்லிவிட்டதே!’’ என்று கேட்டோம்.

‘‘டாடா குழுமத்தின் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி, “இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் தொகை வழங்க இயலவில்லை என்று சொல்லி இருக்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிவிடெண்ட் தராமல் இருப்பது இதுவே முதல்முறை. இந்த நடவடிக்கைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருக் கிறார்கள். டிவிடெண்ட் தராததற்கு காரணம், 2013-14-ம் நிதி ஆண்டில் 334 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த டாடா மோட்டார்ஸ், கடந்த நிதி ஆண்டில் 4,739 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதே'' என்றவருக்கு சூடான டீ தந்தோம்.

‘‘ஸ்டீல் துறைக்கு என்ன ஆனது? அதன் விலை குறைந்துகொண்டே போகிறதே!’’ என்றோம்.

‘‘இந்தியாவில் ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா துறைகள் மந்த நிலையில் இருப்பதால் ஸ்டீலுக்கான தேவை கணிசமாக குறைந்திருக்கிறது. சீனாவின் யுவான் கரன்சி மதிப்பு குறைக்கப்பட்டிருப்பதால், சீனாவில் இருந்து உருக்கு இறக்குமதி செய்வது மலிவாக இருக்கும். அப்போது இந்திய உருக்கு நிறுவனங்கள் பாதிக்கப்படும். இந்திய நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு, உருக்கு பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த புதன்கிழமை அன்று 2.5% அதிகரித்துள்ளது. ஜூன் 17-க்குபிறகு இரண்டாவது முறையாக இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இரும்புக்கான தேவை குறைந்திருப்பதால், முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்டீல் நிறுவனப் பங்குகளில் சிறு முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது’’ என்று எச்சரித்தார்.

''காலாண்டு முடிவுகள் எப்படி வரு்கின்றன?'' என்று கேட்டோம்.

''கட்டணம் மற்றும் கருவூல வருமானம் அதிகரித்தால் நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-ன் நிகர லாபம் 10% அதிகரித்துள்ளது. விற்பனை அதிகரித்ததால் மருந்து தயாரிப்பு நிறுவனமான வோக்கர்ட் நிகர லாபம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

செலவு அதிகரித்ததால் நாட்டின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப்-ன் நிகர லாபம் முதல் காலாண்டில் 5% குறைந்துள்ளது. மானியச் சுமை குறைந்ததால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபம் 14% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு உயர்ந்ததால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது’’ என்றார்.

‘‘சர்க்கரை நிறுவனப் பங்குகளின் விலை ஏற என்ன காரணம்?’’ என்றோம்.

‘‘கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.14,000 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் பொருளாதார விவகாரத் துறைக் கான கேபினெட் கமிட்டி, சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.6,000 கோடி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தக் கடனுக்கு ஓராண்டுக்கு வட்டி எதுவும் கிடையாது என்பதால், பஜாஜ் ஹிந்துஸ்தான் (13.4%), துவார்கேஷ் சுகர் (12.6%), தாம்பூர் சுகர் மில்ஸ் (10.4%) உள்ளிட்ட சர்க்கரை ஆலை நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்தது. இந்த விலை ஏற்றத்தை வைத்து மட்டுமே சர்க்கரை நிறுவனப் பங்குகள் மீதான முதலீட்டு முடிவை எடுத்துவிடக் கூடாது. முடிந்த ஜூன் காலாண்டில் பல முன்னணி சர்க்கரை ஆலை நிறுவனங்கள் நிகர இழப்பைச் சந்தித்துள்ளன'' என்று எச்சரித்தவர், புறப்படும் முன் ‘‘இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் உமக்கு தகவல்களை அனுப்பி விடுகிறேன். அதை அன்றைய தினமே nanayam.vikatan.com-ல் வாசகர்களிடம் எடுத்துச் சொல்லிவிடுங்கள்’’ என்று நம்மிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.