மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் கேட்டகிரி ஆவரேஜ் என்பது ஒரு குறிப்பிட்ட வகையிலான பங்கு

சார்ந்த அல்லது பங்கு சாரா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் சராசரியாகும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் ஃபண்டின் வருமானம் கடந்த காலத்தில் கேட்டகிரி ஆவரேஜூக்கு மேல் இருந்தால் அந்த ஃபண்டைத் தேர்வு செய்யலாம். ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்முன் அந்த ஃபண்ட் கடந்த 6 மாதம், 1 வருடம், 3 வருடங்கள், 5 வருடங்கள் எனப் பல்வேறு கால கட்டத்தில் தந்துள்ள வருமானம் கேட்டகிரி ஆவரேஜைவிட அதிகமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதிகமாக இருந்தால், அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

உதாரணத்துக்கு, அதிக அளவில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உள்ள லார்ஜ்கேப் ஃபண்ட் திட்டங் களின் கீழ் ஒரு வருடத்துக்கு மேல் செயல்படும் ஃபண்டுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 140 ஆகும். இந்த ஃபண்டுகளின் கேட்டகிரி ஆவரேஜ் வருவாய் (ஆகஸ்ட் 17, 2015 நிலவரப்படி) 12.95% ஆகும். எனவே, இதைவிட அதிகமாக வருமானம் தந்துள்ள லார்ஜ் கேப் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. இதேபோல, ஒவ்வொரு ஃபண்ட் திட்டத்தின் கீழும் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் லார்ஜ் கேப், லார்ஜ் அண்ட் மிட் கேப், மிட் & ஸ்மால் கேப், மல்டி கேப், இஎல்எஸ்எஸ் போன்ற பல தரப்பட்ட துறை சார்ந்த பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் திட்ட வகைகளும், ஃபார்மா, ஐடி, எஃப்எம்சிஜி, இன்ஃப்ரா, பேங்கிங், மீடியா என்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் செக்டார் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. பங்குச் சந்தை சாராத லிக்விட், குறுகிய கால, இன்கம், கில்ட் ஃபண்ட் போன்ற திட்ட வகைகளும் உள்ளன.

இதுமட்டும் இல்லாமல் பங்குகளிலும், பங்குச் சந்தை சாராத கடன், பங்குச் சந்தை என இரண்டிலும் கலந்து முதலீடு செய்யும் பேலன்ஸ்டு ஃபண்ட், எம்ஐபி போன்ற ஹைபிரீட் திட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு வரும் அவரவருக்கேற்ற இந்தத் திட்ட வகைகளில் சிறந்த, கேட்டகிரி ஆவரேஜுக்கு மேல் வருவாய் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இவை தவிர, ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கும் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் என்று இருக்கும். அதாவது, ஒரு ஃபண்ட் எந்த வகையான பங்கு அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதோ, அதற்கு நிகரான கலவைகொண்ட இண்டெக்ஸுடன் அந்தத் திட்டம் ஒப்பிடப்படும். குறிப் பிட்ட கால இடைவெளியில் அந்த இண்டெக்ஸ் அடைந்திருக்கும் ஏற்றத்தைவிட இந்த ஃபண்ட் அதிக வருமானம் தந்திருக்க வேண்டும்.

உதாரணமாக, லார்ஜ் கேப் வகையைச் சார்ந்த ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் சென்செக்ஸ் ஆகும். ஆகஸ்டு 17, 2015 நிலவரப்படி, இந்த ஃபண்ட் கடந்த ஒரு வருடத்தில் 20.81% வருமானம் தந்துள்ளது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 12.95 சதவிகித வருமானம் தந்துள்ளது. ஆக, இந்த ஃபண்ட் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் தந்துள்ளது.

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, சென்செக்ஸ், நிஃப்டி, பிஎஸ்இ100, பிஎஸ்இ 200, பிஎஸ்இ மிட் கேப் போன்றவை பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ்-ஆக ஒப்பிடப்படுகிறது.

கடன் சார்ந்த ஃபண்டுகளைப் பொறுத்தவரை கிரிஸில் லிக்விட், கிரிஸில் ஷார்ட் டேர்ம் பாண்ட், கிரிஸில் கம்போசிட் பாண்ட், கிரிஸில் 10 வருட கில்ட் போன்றவை பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ்-ஆக ஒப்பிடப் படுகிறது.

இப்படி ஒவ்வொரு ஃபண்டிலும் முதலீடு செய்யும்போதும் அதன் சராசரி வருமானத்தை அறிந்து முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல வருமானம் நமக்குக் கிடைக்க வாய்ப்புண்டு!