நாணயம் விகடனும் - ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ என்கிற தலைப்பில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை வேலூரில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்தின் விற்பனைப் பிரிவின் தலைவர் எஸ்.ஹரீஷ் முதலில் பேசினார்.

‘‘இன்று நமது சராசரி ஆயுட்காலம் 75 ஆண்டுகள். 58 வயதில் ஓய்வு பெறும் ஒருவர் அடுத்த 20 - 25 ஆண்டுகளுக்கு யார் உதவியையும் நாடாமல் சமாளிக்க இளமையிலே முதலீடு செய்ய வேண்டும்.

இன்றைக்கு முதலீடு செய்யப் படாத ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் 29,011 ரூபாயாக இருக்கும் என்றால் நாம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நம் முதலீடனாது பணவீக்கத்தைத் தாண்டி வளர வேண்டும். அதனை மியூச்சுவல் ஃபண்ட்கள் மிகச் சிறப்பாக பூர்த்தி செய்கிறது” என்றார்.

அடுத்து பேசினார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன். “இந்தியர்களில் 50% பேர் நிலத்திலும் 20% பேர் தங்கத்திலும் முதலீடு செய்திருக் கிறார்கள். 30% பேர் மட்டுமே நிதி சார்ந்த முதலீடுகளில் (Financial Assets) முதலீடு செய்கிறார்கள். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளில் 70% பேர் நிதி சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்கிறார்கள்.

இந்தியர்களுக்கு முதலீட்டை பொறுத்தவரை, இது பொற்காலம். இந்த காலம் நம் குழந்தைகளுக்கு கிடைக்குமா என்பது தெரியாது. 2030-ல் உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கப்போகிறது.

சந்தை என்றால் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். முதலீடு செய்துவிட்டு தினமும் ஆராய்ந்து கொண்டு இருந்தால், முதலீட்டை சரிவர தொடர முடியாது. நமது தேவை என்ன என்று பார்த்து, அதற்கு தகுந்த முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்றார். ஆக, ஃபண்ட் முதலீடு பற்றிய தெளிவை ஏற்படுத்துவதாக இருந்தது இந்தக் கூட்டம்.

அ.அச்சணந்தி, ஜெ.பாரதி.

படங்கள்: ச.வெங்கடேசன்