எதிர்பார்த்ததைவிட வேகமாக இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. அந்த வகையில் வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று ஐஎம்எஃப் தெரிவித்து உள்ளது!

‘‘டிரேடர்கள் உஷாராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம்தான்’ என்று நீங்கள் சொன்னாலும் சொன்னீர்கள், இந்த வாரம் முழுக்கவே சந்தை வீழ்ச்சி கண்டு விட்டதே!’’ என்றோம் ஷேர்லக்கை வரவேற்றபடி. லேசாக புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார்.

‘‘கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிகண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஃபெடரல் மீட்டிங் வருகிற செப்டம்பர் 16, 17-ல் நடக்கிறது. அதில் வட்டி விகிதம் அதிகரிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், டாலரின் மதிப்பு இன்னும் கூடும். தங்கத்தின் விலை இறக்கம் காணும். அதே நேரத்தில், இந்திய பங்குச் சந்தையிலிருந்து இன்னும் அதிக அளவில் எஃப்ஐஐகள் பணத்தை வெளியே எடுக்கக் கூடும். அப்போது நம் சந்தை மேலும் இறங்கலாம். தவிர, கடந்த காலங்களில் எல்லா அக்டோபர் மாதங்களிலும் சந்தை இறங்கவே செய்திருக்கிறது என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள் சிலர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எஃப்ஐஐகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து ஏறக்குறைய ரூ.17,000 கோடியை வெளியே எடுத்திருக்கிறார்கள். இது செப்டம்பர் மாதத்திலும் தொடர லாம். சிஎல்எஸ்ஏ நிறுவனம், 2015 டிசம்பர் இறுதிக்குள் சென்செக்ஸ் 31800-க்கு உயரும் என இதற்கு முன் கணித்திருந்தது. அது இப்போது நிலைமை சரியில்லாத தால், இலக்கை 30000-ஆக குறைத்துள்ளது. மெட்டல்ஸ், ஆயில், சிமென்ட், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் கூட்ஸ் நிறுவனப் பங்குகளின் வருமானம் குறையும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், பார்மா, ஐடி நிறுவனப் பங்கு களின் விலை உயரும் எனவும் அது தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் இழப்பீடு கோருவது குறைந்துள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகி இருக்கிறது. தவிர, மேட் (MAT) வரி பின்னோக்கி பயன்படுத்தப்பட மாட்டாது என்று வேறு நம் நிதி அமைச்சரும் சொல்லிவிட்டார். எனவே, கடந்த மாதத்தில் கொத்துக்கொத்தாக வெளி யேறிய வெளிநாட்டு முதலீட் டாளர்கள், இப்போது மீண்டும் நம் சந்தையை நோக்கி வரலாம். இதனால் நம் சந்தை உயரலாம் என்கிறார்கள் வேறு சிலர்.

எனவே, வரும் வாரத்தில் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். டிரேடர்கள் மீண்டும் உஷாராக இருப்பது நல்லது.

என்றாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தை சரிவைப் பற்றி கவலைப்படாமல், நல்ல பங்குகளில் முதலீடு செய்ய லாம்’’என்றவருக்கு சுடச்சுட டீ தந்தோம்.

‘‘நீண்ட காலத்தில் சந்தை ஏறத்தான் செய்யும் என்று எப்படி உறுதியாகச் சொல் கிறீர்கள்?’’ என்று கேட்டோம்.

‘‘சந்தை நீண்ட காலத்தில் ஏற்றம் காணும் என்பதற்கான பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. அதில் முக்கியமானது, சர்வீசஸ் பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த இண்டெக்ஸ் 50.8 சதவிகிதத்தி லிருந்து 51.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தக் குறியீடு 50 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், நிறுவனங்கள் விரிவாக்கத்தில் இருக்கின்றன என்று அர்த்தம்.

பி.எஃப் தொகையில் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் ரூ.500 - 900 கோடி பொதுத்துறை நிறுவனங்களின் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நிதி அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

என்பிஎஸ் திட்டத்தில் தனியார் நிறுவனப் பணியாளர் கள் செய்யும் முதலீட்டை எஃப் அண்ட் ஓ பிரிவில் முதலீடு செய்ய ஃபண்ட் மேனேஜர்களுக்கு பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப் மென்ட் அத்தாரிட்டி அனுமதி அளித்துள்ளது.

மேலும், இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக இருப்பதாக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பல கமாடிட்டிகளின் விலை குறைந்து வருகிறது. உலக அளவில் கமாடிட்டி இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. கமாடிட்டி விலை வீழ்ச்சியால் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கிறது.

மேலும், எதிர்பார்த்ததைவிட வேகமாக இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. அந்த வகையில் வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று ஐஎம்எஃப் தெரிவித்து உள்ளது. இதெல்லாம் போதாதா, நீண்ட காலத்தில் நம் சந்தை நிச்சயமாக உயரும் என்பதை எடுத்துச் சொல்ல!’’ என்றவர் நம்முடைய அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தயாரானார்.

‘‘ஆம்டெக் ஆட்டோ பங்கின் விலை ஒரே நாளில் 35% வீழ்ச்சி கண்டுள்ளதே?’’ என்றோம் அதிர்ச்சி அடைந்தபடி.

‘‘முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.156 கோடியை நிகர இழப்பாக சந்தித்ததை அடுத்து, இந்த நிறுவனத்துக்கான தரக்குறியீட்டை கேர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த நிறுவனப் பங்குகளை எஃப்ஐஐகள் அதிகமாக விற்பனை செய்து வருவதால், பங்கின் விலை கணிசமாக இறங்கியுள்ளது. ஒரு மாதத்தில் பங்கின் விலை 82% இறக்கம் கண்டுள்ளது’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘துலிப் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்துள்ளதே?’’என்றோம்.

‘‘பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது மக்களின் பங்கு மூலதனம் 25% இருக்க வேண்டும் என செபி நீண்ட காலமாக சொல்லி வருகிறது. இதை சரியான முறையில் நிறைவேற்றாததால், அதாவது, பொது மக்களுக்கு விற்பதற்கு பதில் மோசடியாக நிறுவனம் சார்ந்தவர்களே பங்குகளை விற்றதால், செபி ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது’’ என்றார்.

‘‘அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் எஃப்ஐஐ முதலீடு அதிகரிக்கும் போலிருக்கே?’’ என்று சந்தோஷமாக.

‘‘இந்த நிறுவனத்தில் எஃப்ஐஐகளின் தற்போதைய முதலீடு 20.21 சதவிகிதமாக உள்ளது. இதை 40 சதவிகிதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏற்கெனவே அனுமதி தந்து விட்டார்கள்’’ என்று கிளம்பத் தயாரானவர், அப்போது தயாராகி வந்த 17-ம் பக்கத்தைப் பார்த்தார்.

‘‘அட, மதுரையிலும் பங்குச் சந்தை (ஃபண்டமென்டல் அனாலிசிஸ்) பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்களா? சபாஷ், தென் மாவட்டங்களில் உள்ளவர் களுக்கு இது நல்ல வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வாசகர்களின் கடமை’’ என்றவர், ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தார். அதில் ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகளின் பெயர் இருந்தது.

மாருதி, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ். கிரைசில் (நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும்)