எஸ்பிஐ மேக்னம் பேலன்ஸ்டு ஃபண்ட்: கல்வித் தேவைக்கு முதலீடு செய்ய கரெக்ட் ஃபண்ட்!

பேலன்ஸ்டு ஃபண்டுகள் கலப்பின வகையைச் சார்ந்தவையாகும். இந்த வகை ஃபண்டுகளில் பொதுவாக 65 - 70 சதவிகிதம் பங்கு சார்ந்த முதலீடும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளிலும் செய்யப்படுகிறது. இதற்கு முந்தைய வாரங்களில் ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட், பி.எஸ்.எல் 95, டாடா பேலன்ஸ்டு, ஹெச்டிஎஃப்சி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் – இன்வெஸ்ட்மென்ட் பிளான், ஐசிஐசிஐ புரூ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் போன்ற பேலன்ஸ்டு ஃபண்டுகளைப் பற்றி அலசினோம். அந்த வரிசையில் இந்த வாரம் எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு ஃபண்ட் பற்றி அலசுவோம்.

இந்த ஃபண்ட் கடந்த காலகட்டங்களில் தொடர்ந்து தனது கேட்டகிரி ஆவரேஜைவிட நன்றாக செயல்பட்டுள்ளதே நாம் இந்த ஃபண்டில் முதலீடு செய்யச் சொல்லி பரிந்துரைப்பதற்கு முக்கியக் காரணமாகும். இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,293 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது டிசம்பர் 1995-ல் துவங்கப்பட்ட ஃபண்ட் ஆகும். இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆர்.சீனிவாசன் மற்றும் தினேஷ் அஹுஜா ஆவார்கள்.

இந்த ஃபண்ட் தற்போது 68 சதவிகிதத்தை பங்கு சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதை கடன் சார்ந்த முதலீடுகளிலும் கொண்டுள்ளது. பங்கு சார்ந்த முதலீடுகளில் ஏறக்குறைய பாதி அளவுக்கு லார்ஜ்கேப் பங்குகளிலும், மீதியை ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

கடன் சார்ந்த முதலீடுகளில் மிகுதியாக மத்திய அரசாங்க பாண்டுகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சார்ந்த முதலீடுகளில் ஹெச்டிஎஃப்சி பேங்க், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ் டிவிஆர் போன்றவை டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

இந்த ஃபண்டின் பீட்டா 0.81-ஆக உள்ளது. இது சந்தையைவிட குறைவான ஏற்ற இறக்கத்தை குறிக்கிறது. அதே சமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 10.53 என்ற அளவில் மிகவும் உன்னதமாக உள்ளது.

நீண்ட காலத்தில் இதுபோன்ற பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இதன் செயல்பாடு சற்று மெதுவாக இருந்தாலும், கடந்த 1, 2, மற்றும் 3 ஆண்டுகளில் இந்த ஃபண்டின் வருமானம் டாப்பில் உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், இதன் பங்கு சார்ந்த முதலீடுகளின் ஃபண்ட் மேனேஜரான ஆர்.சீனிவாசன் எனக் கூறலாம். அவர் இந்த ஃபண்டின் மேனேஜராக ஜனவரி 2012-ல் பொறுப்பேற்றார். அப்போதிருந்து இந்த ஃபண்டின் செயல்பாட்டில் வேகம் பிடித்துள்ளது. மேலும், மிட் அண்ட் ஸ்மால்கேப் எக்ஸ்போஸர் இந்த ஃபண்டுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது.

இதன் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்.ஏ.வி ரூ.27.35 ஆகும். கடந்த மார்ச் 2013-லிருந்து ஒவ்வொரு காலாண்டும் தொடர்ந்து டிவிடெண்ட்டை வழங்கி வந்துள்ளது. டிவிடெண்ட்டை விரும்புபவர்கள் இந்த ஆப்ஷனில் செல்லலாம்.

சந்தையைவிட சற்று குறைவான ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள், குழந்தைகளின் கல்லூரி படிப்புக்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை முதலீடு செய்பவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

யார் முதலீடு செய்யலாம்?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை முதலீடு செய்ய விரும்புபவர்கள், 100% ஈக்விட்டி ஃபண்டுகளைவிட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், சற்று குறைவான ஏற்ற இறக்கத்தை நாடுபவர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், நடுத்தர காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், குழந்தைகளின் கல்வித் தேவைக்கு முதலீடு செய்பவர்கள்.

யார் செய்யக் கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.

ஃபண்ட் Q & A!

என்னிடம் ரூ 1.50 லட்சம் பணம் உள்ளது. 15 வருடங்களுக்கு தேவைப்படாது. இதனை 3 திட்டங்களில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். மற்றும் எஸ்ஐபி-ல் மாதம் ரூ.10,000 எனது ஓய்வுக்காலத்துக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் முதலீடு செய்ய உள்ளேன். இது குறித்து தங்களின் ஆலோசனையை கூறவும்.

காளிராசு, மெயில் மூலமாக

‘‘ரூ 1.50 லட்சம் உங்களுக்கு 15 வருடங்களுக்கு தேவைப்படாது என்று கூறியுள்ளீர்கள். அப்பணத்தை நீங்கள் 3 திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமென்றும் தெரிவித்துள்ளீர்கள். ரூ 1.50 லட்சத்தை முதலீடு செய்ய 3 திட்டங்கள் தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு திட்டங்களே போதுமானது. கீழ்கண்ட திட்டங்களில் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்து கொள்ளுங்கள்: 1) ஐசிஐசிஐ புரூ வேல்யூ டிஸ்கவரி 2) பி.என்.பி பரிபாஸ் ஈக்விட்டி ஃபண்ட்.

மேலும், நீங்கள் ரூ.10,000-ஐ மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய விருப்பமுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் எவ்வளவு ஆகும் என்றும், உங்களின் ஓய்வுகாலத் தேவைகள் எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடவில்லை. ஆகவே, உங்களால் முதலீடு செய்ய முடிந்த ரூ.10,000-ஐ இருபாதியாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பாதி உங்களின் ஓய்வுகாலத் தேவைகளுக்கும், மற்றொரு பாதி உங்களின் குழந்தைகளின் நலனிற்கென்றும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் குழந்தைகளின் நலனிற்காக ஃபிராங்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்டிலும், உங்களின் ஓய்வுக்காலத்திற்காக மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்து கொள்ளுங்கள்.”