‘‘எல்லோர் கவனமும் 16, 17 தேதிகளில்தான் இருக்கிறது’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘அன்றைய தினம் அமெரிக்க ஃபெட் கூட்டம் நடக்கப் போகிறது அல்லவா?’’ என்றோம்.

‘‘ஆமாம். இந்த வாரம் சந்தை கொஞ்சம் உயர்ந்தாலும் மேற்கொண்டு உயர முடியாதபடிக்கு கீழே இழுக்கிறது அடுத்த வாரம் நடக்க இருக்கும் ஃபெட் மீட்டிங் கூட்டம். இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும் இங்கிருந்து எஃப்ஐஐகள் கணிசமாக வெளியேற வாய்ப்புண்டு. ஆனால், வட்டி விகிதம் 0.25 - 0.75 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உயர்த்தப்படலாம் என்பதால், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் நம் சந்தைக்கு ஏற்படாது என்றும் சிலர் சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அடுத்த வாரம் சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, டிரேடர்கள் உஷாராக இருப்பது நல்லது’’ என்றவருக்கு டிகிரி காபி தந்தோம். அதை ருசித்தபடி நம்முடன் பேசலானார்.

‘‘ஆம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு விலை இன்று மட்டும் 75% வரை உயர்ந்திருக்கிறதே, என்ன காரணம்?’’ என்றோம்.

‘‘ஆம்டெக் ஆட்டோ பங்கின் விலை இன்றைய வர்த்தகத்தின் இடையே சுமார் 75 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து வர்த்தகமானது. சில தினங்களாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் 75 கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்ததால், பங்கின் விலை இன்று தினசரி வர்த்தகத்தில் சுமார் 75% வரை உயர்ந்தது. பிற்பாடு கொஞ்சம் குறைந்து, 53.6 சதவிகிதம் என்கிற அளவில் ஏற்றம் கண்டது. இந்த பங்கில் முதலீடு செய்ய நினைப்ப வர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.

‘‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு ரூ.3,200 கோடி தர செபி உத்தரவு பிறப்பித்து உள்ளதே?’’ என்றோம்.

‘‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கு விற்பனை மூலம் சட்ட விரோத மாக சேர்த்த ரூ.1,800 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.3,200 கோடியாக திருப்பித்தர வேண்டும் என்று அதன் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது அம்மா, சகோதரர் மற்றும் மகன் உள்ளிட்ட 10 பேருக்கு செபி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஆறு ஆண்டு விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என்றார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை திடீரென குறைந்திருக்கிறதே?’’ என்றோம் சற்று வருத்தத்துடன்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை குறைந்துபோனது தற்காலிக பிரச்னைதான். பெரிய நிறுவனங்கள் தங்களின் நிதித் தேவைக்காக லிக்விட் ஃபண்டுகளிலிருந்து அதிக தொகையை எடுத்தது மற்றும் சந்தை இறக்கம் கண்டது இதற்கு காரணங்களாக இருக்கின்றன.

அதேநேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1.65 லட்சம் அதிகரித்து, மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 2.4 கோடியாக அதிகரித்துள்ளது கவனிக்க தக்கது’’ என்று நம் நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டினார் ஷேர்லக்.

‘‘ஆனால், எஃப்ஐஐகள் பங்குகளை விற்பது தொடர்கிறதே?’’ என்று நம் அதிர்ச்சியைக் காட்டினோம்.

‘‘குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) பிரச்னை பெரிதாக இல்லை என்றாலும் எஃப்ஐஐ கள் கடந்த மே மாதம் முதல் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.31,310 கோடியை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில் 7-ம் தேதி வரை ரூ.3,925 கோடியை விலக்கி இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், எல்ஐசி தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகிறது. சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பு. இதைதான் எல்ஐசி பின்பற்றி வருகிறது என அதன் தலைவர் எஸ்.கே.ராய் தெரிவித்துள்ளார். மேலும், ‘எல்ஐசி முதலீடு செய்துள்ள பொதுத் துறை பங்குகள் அனைத்தும் பாசிட்டிவ் ரிட்டர்ன் தந்்துள்ளதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

‘‘சந்தை இறக்கத்தில் பல பங்குகளின் விலை 50 சத விகிதத்துக்கும் மேல் இறக்கம் கண்டிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘கடந்த ஒரு மாதத்தை எடுத்துக்கொண்டால், இப்படி இறக்கம்கண்ட பங்குகளின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இருக்கின்றன. யூனிடெக் (-78%), ஜேபி அசோசியேட்ஸ் (-76), ஜிந்தால் ஸ்டீல் (-75%), வேதாந்தா (-69%), ஹெச்டிஐஎல் (-60), ஹிண்டால்கோ (-59%), பேங்க் ஆஃப் இந்தியா (-59%), டாடா ஸ்டீல் (-58%), கெய்ர்ன் இந்தியா (-57%) என பங்குகளின் விலை மிக அதிகமாக வீழ்ச்சிகண்டு உள்ளன. இவற்றில் அடிப்படையில் வலுவாக உள்ள நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்'’ என்றார் தெளிவாக.

‘‘சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி பல நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்களின் முதலீட்டை உயர்த்தி இருக்கிறார் களே?’’ என்று கேட்டோம்.

‘‘நிறுவனர்களுடன் பணியாளர்களும் பங்கின் விலை இறக்கம் கண்டதால் வாங்கிச் சேர்த்திருக்கிறார்கள். ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்யூஎல், ஜிந்தால் ஸ்டீல், பாம்பே டையிங், லஷ்மி விலாஸ் பேங்க், கிராபைட் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ், அதுல், எவரெடி இண்டஸ்ட்ரிஸ் போன்றவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்’’ என்று சொன்னார் அவர்.

‘‘சிமென்ட் நிறுவனப் பங்குகளின் விலை 52 வார குறைவுக்கும் கீழே இறங்கி இருக்கிறதே?’’ என்று வினவினோம்.

‘‘கட்டுமானப் பணிகள் மந்தமாக இருப்பதால், பெரும்பாலான சிமென்ட் நிறுவனங்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இது பங்குகளின் விலையிலும் எதிரொலித்து வருகிறது. பல சிமென்ட் பங்குகளின் விலை 52 வார குறைவுக்கும் கீழே இறங்கி இருக்கின்றன. அம்புஜா சிமென்ட், கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ், இந்தியா சிமென்ட்ஸ், பிரிசம் சிமென்ட் உள்ளிட்டவை மிகவும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.

பருவமழையில் முன்னேற்றம் மற்றும் அரசு உள்கட்டமைப்பு திட்டங்களில் வேகம் ஏற்பட் டால், சிமென்ட் நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கும். அப்போது பங்கின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக அனலிஸ்ட்டுகள் தெரிவிக் கிறார்கள்’’ என்று புறப்படத் தயாரானவர், ஒரு துண்டுச் சீட்டு தந்தார். அதில் வாசகர்கள் ஃபாலோ பண்ண வேண்டிய பங்குகள் இருந்தன.

கோட்டக் மஹிந்திரா பேங்க், பிராஜ் இண்டஸ்ட்ரிஸ், மாருதி சுஸூகி (நடுத்தரக் கால முதலீட்டுக்கு)