நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட்: எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு’ என்கிற தலைப்பில் சென்னை, அண்ணா நகரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டத்தினை கடந்த 6-ம் தேதி நடத்தியது.

இந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் முதலில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் (தமிழ்நாடு) அசோக் நஞ்சுண்டராஜ், கடந்த முப்பது ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் தந்த வருமானத்தைவிட பங்குச் சந்தைகள் அதிக வருமானம் தந்திருப்பதை புள்ளிவிவரங் களுடன் எடுத்துச் சொன்னார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பி.பத்மநாபன், ‘‘நாம் செய்யும் முதலீட்டின் மூலமாக கிடைக்கும் வருமானம், பணவீக்கத்தைத் தாண்டியதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு நாம் செய்யும் சில முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தி லிருந்து பணவீக்க விகிதத்தைக் கழித்தால், 1 - 2 சதவிகித லாபம் மட்டுமே கிடைக்கும்’’ என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரான சுரேஷ் பார்த்தசாரதி, ‘‘திருமணம், குழந்தைகளின் படிப்பு, ஓய்வுகால முதலீடு என எதுவாக இருந்தா லும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நாம் பணத்தை சேர்க்கும்போது, நமக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தங்களுக்கு இருக்கும் கேள்வி களை விளக்கம் பெற்றனர் வாசகர்கள். ‘‘இப்படியொரு அருமையான முதலீடு பத்து வருஷத்துக்கு முன்னாலேயே தெரியாம போச்சே!’’என்று வருத்தப்பட்டார் ஒரு வாசகர். மியூச்சுவல் ஃபண்டில் இனியாவது முதலீட்டைத் தொடங்கலாமே!

இரா.ரூபாவதி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்.