உலக நாடுகளில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் டிரேடராகிய செல்லின் (செல்வம்) பாக்கெட்டையும், முதலீட்டளாராகிய என்னுடைய (கன் என்கிற அன்பழகன்) நெட் வொர்த்தையும் ரொம்பவுமே பதம் பார்த்து விட்டது. இந்த நஷ்டத்தைச் சமாளிக்க ஷேருச்சாமியை விநாயகர் சதுர்த்தி அன்று பார்க்கக் கிளம்பினோம். பங்களா வாசலில் ஏழெட்டு பெரிய கார்கள்! யாரோ கெஸ்ட் வந்திருக்கிறார்கள் போல என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, பத்துப் பதினைந்து பேர் பங்களாவினுள்ளிருந்து வெளியே வந்து அவரவர் காரில் ஏறிப் புறப்பட்டனர்.

சற்று நேரத்தில் வெளியே வந்த ஷேருச்சாமி, கொழுக்கட்டையும் சுண்டலும் கொடுத்து உபசரித்தார். “அப்புறம், என்ன பெரிய மனுஷங்க என்னையப் பார்க்க வந்திருக்கீங்க” என்று ஆரம்பித்தார். “ஒண்ணுமில்லை சாமி. மார்க்கெட் ஏன் இப்படி படுத்தி எடுக்குது” என்று ஆரம்பித்தான் செல். “மார்க்கெட் என்ன புயல் மழையா உன்னைப் படுத்தி எடுக்க. நீ பாட்டுக்கு செவனேன்னு இருந்தா அது உன்னைய என்ன செஞ்சுடப் போகுது” என்று கலாய்த்தார்.

“பொழைப்பே மார்க்கெட்டுன்னு ஆயிப்போச்சு சாமி. அப்புறம் எப்படி சிவனேன்னு இருக்குறது” என்றான் செல். “அப்ப கொஞ்சம் கஷ்டம்தான்” என்றார். “இப்போ போனாங்களே பத்துப்பேரு அவங்களெல்லாம் பெரிய அளவில வியாபாரம் பண்றவங்க. அவங்களும் இதையேதான் சொல்றாங்க” எனச் சொல்லி சிரித்தார். “அதை ஏன் கேட்கறீங்க சாமி. நான் கொஞ்சம் லாங் டேர்முக்கு முதலீடு பண்ணியிருக்கேன். எனக்கே பயம்மாகுதே” என்றேன் நான். “ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும்போது உன்னோட நைஸ் மாவு பறக்காதா என்ன” என்று கிண்டலடித்தார் சாமி.

“ஏன் சாமி இப்படி அதிகமா வாலட்டைலிட்டி வருது. உலக பிரச்னை, உள்ளூர் பிரச்னைன்னு எதையாவது சொல்லி இறங்கி ஏறிக்கிட்டே இருக்குதே சந்தை” என்றான் செல். “அப்ப சந்தையின்னா அது நீ நினைக்கிறமாதிரி ஏறிக்கிட்டே இருக்கணும். நீ டவுன் பஸ் ஏறுகிற மாதிரி; உனக்கு வேணுங்குற இடத்துல இறங்கிக்கலாமுன்னு ஆசைப் படுறபோல” என்றார்.

“அப்படியில்ல சாமி. கொஞ்சம் முன்னேபின்னே போய் வரவேண்டியதுதான். ஆனா இவ்வளவு தூரம் ஏற்ற இறக்கம்தான் பயத்தை கொஞ்சம் தூக்கலா ஆக்கிடுது” என்றான் செல். “அவனாவது டிரேடருங்க சாமி. நான் பாத்துப்பாத்து ஒரு சின்ன போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வைச்சிருக்கேன். அதுலயும்கூட பெரிய அளவுல இந்த இறக்கம் பாதிச்சுடுச்சே” என்றேன் நான்.

கொஞ்சம் யோசித்த சாமி, “உன் வயசு முப்பது முப்பத்து ஐந்து இருக்குமா?” என்றார். “தம்பி உனக்கு கொஞ்சம் சளி தும்மல் இருக்கு. அந்த நேரம் பார்த்து வீட்டுல சுத்தம் பண்ண ஆரம்பிக்க, தூசு தும்பு பறந்து அதுவே சூப்பரான சளிக்கு வழிவகுத்துடாதா... அந்த நேரம் பார்த்து நீ ஆபீசுக்கு பைக்ல போறப்ப திடீர் மழையில் நனைஞ்சுபோயிடற. ஒரு வாரத்துக்கு காய்ச்சல் வந்துடுது. என்னவாகும்” என்றார் சாமி.

“என்னடா இது மார்க்கெட்டை பத்தி கேட்டா சாமி வைத்தியர் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாரே” என முழித்தான் செல். “மருந்து மாத்திரை சாப்பிட்டு இரண்டொரு நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் ”என்றேன் நான்.

“அதுக்கப்புறம் நீ என்ன சொல்வே. என் உடம்பு ரொம்ப வீக்கு. இந்த உடம்பை வைச்சுகிட்டு எப்படி வேலை பார்க்குறதுன்னா?” என்றார்.

“அது என்ன சாமி இப்படி சொல்லீட்டிங்க. வயசு குறைவுதானே. சளியும் காய்ச்சலும் வந்தா போயிடப்போவுது” என்றேன். “அதே மாதிரிதான் சந்தையும், ஏற்கெனவே கொஞ்சம் வேல்யூவேஷன் அதிகமா இருந்துச்சு. அந்த நேரத்துல சீனா டீவேல்யூவேஷனில இறங்குச்சு. அப்புறமா சீனாவோட பொருளாதாரம் சரியில்லைங்கிற மாதிரி செய்திகள் வந்துச்சு. அதுக்குள்ள அமெரிக்க வட்டிவிகிதம் முடிவு பண்ற தேதி வந்துடுச்சு. மார்க்கெட்டும் வேகமா இறங்கிட்டு அப்புறமா மேல்நோக்கி வந்துடுச்சு” என்றார் சாமி.

“மார்கெட் எங்க சாமி மேலே போச்சு. இண்டெக்ஸ்தான் மேலே போச்சு. பல ஸ்டாக்குகள் படுத்த படுக்கையா ஆயிடுச்சு என்று புலம்பினான்” செல். “அடேய் முப்பத்தி ஐந்து வயசுக்காரன் ஒருவாரத்தில எழுந்துக்குவான். அறுபத்தி ஐந்து வயசுக்காரருக்கு நான் சொன்ன சளி காய்ச்சல் வந்தா அவரு குணமாக பதினைஞ்சு இருபதுநாள் பிடிக்குமுல்ல” என்றேன்.

“அதேதான் தம்பி இதுலேயும். பி/இ அதிகமா இருந்த ஸ்டாக்குகள் கொஞ்சம் சருக்குச்சுன்னா பழைய விலை கிடைக்க கொஞ்சகாலம் பிடிக்கும். அதுலயும் கம்பெனிகள் சிறுசா இருந்துச்சுன்னா இதுபோல ஏற்ற இறக்கங்கள் வரும்போது பாதிப்பும் அதிகமா இருக்கும். பாதிப்புல இருந்து வெளிய வரதுக்கு நாளும் அதிகம் எடுக்கும்” என்றார் சாமி.

“சரி சாமி. சீனாவோட எக்கனாமி சரியில்லாம போனா ஏன் உலக சந்தை எல்லாவற்றிலும் பிரளயம் வருது” என்றான் செல். “உனக்கு சீனாவோட பொருளாதாரத்தின் சைஸ் தெரியலை. அது வளர்ந்து வந்த வேகமும் தெரியலை. சீனா உலக அளவில பெரிய பொருளாதாரமா மாறிடுச்சு. அந்த மாறுதலை சந்திக்கிறதுக்கு அது அதிவேகமான வளர்ச்சியை கொண்டிருந்துச்சுன்னு சொல்லலாம். சரி, ஒரு கேள்வி கேட்கிறேன்.

பொருளாதாரம் வேகமா வளரும்போது என்னென்ன ஒரு நாட்டுல நடக்கும்னு சொல்லு” என்றார். “நாமதான் பாத்தோமே சாமி. சம்பளம் உயர்ந்துச்சு. வீடுவாசல் வாங்கினோம். நல்லா ரோடு எல்லாம் போட்டோம். கட்டடம் கட்டினோம். தகவல் தொடர்பு வேகமாக மாறுச்சு. நிறைய நல்ல விஷயங்கள் இருந்துச்சு. பொதுவா சொன்னா எல்லா தொழில் சம்பந்தப்பட்ட இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் அதிகமாச்சு” என்றான்.

கரெக்டா சொல்லீட்டியே என்ற சாமி, “இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வளரும்போது மெட்டல்கள் மற்றும் கமாடிட்டிகளோட தேவை அதிகரிக்கும். சீனாவை எடுத்துக்கிட்டா 2014-ம் ஆண்டு வாக்கில் அலுமினியம், காப்பர், ஜிங்க், நிக்கல், நிலக்கரி போன்றவற்றில் உலக உற்பத்தியில் பாதியளவை அவங்க உபயோகிச்சுட்டு இருந்தாங்க. இந்தியா உள்பட பல நாடுகளும் சீனாவுக்கு கமாடிட்டிகளை (மூலப்பொருட்களையும்) ஏற்றுமதி பண்ணுச்சு. இப்போ எக்கனாமி மந்தமானதால அந்த பாதிப்புல போனவருஷத்தில இருந்தே கமாடிட்டிகளோட விலை இறங்க ஆரம்பிச்சுது. வெகுசீக்கிரத்தில ஏற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்ற சாமி 2011-ல் இருந்தே கமாடிட்டி விலைகள் படிப்படியா குறைய ஆரம்பிச்சுது. இதுல பிரச்னை என்னன்னா ஒரு பொருளாதாரம் வேகமா வளர்றப்ப கெப்பாசிட்டி கிரியேஷன் என்பது அதிவேகமா இருக்கும்.

உதாரணத்துக்கு சீனாவுல ஸ்டீல் புரொடக்ஷன் எக்கச்சக்கமா உயர்ந்துச்சு. இப்போ மந்தமானா வெளிநாடு களுக்கு கொண்டுபோய் விற்க நினைப்பாங்க. அதனால குறைந்த விலையில ஸ்டீலை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ண முயற்சி செய்வாங்க. இதுமாதிரி பல பிரச்னைகளையும் மற்ற நாடுகள் சந்திக்கவே செய்யும் என்றார்.

மேலும், பொருளாதாரம் வேகமா வளர்றப்ப தொழிலதிபர்கள் வேகமா கடனை உடனை வாங்கிப் போட்டு விரிவாக்கம் பண்ணுவாங்க. பொருளாதாரம் மந்தமடைந்தால் என்னவாகும்? கடன் கொடுத்தவங்களுக்கு வாராக் கடன் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? இந்த பிரச்னையையும் சமாளிக்க வேண்டியிருக்கும்” என்றார் சாமி.

“இது என்ன விவகாரமாவுல்ல இருக்கு” என்றான் செல். “இதுதானப்பா பிசினஸ் சைக்கிள்” என்று சொல்லி சிரித்தார் சாமி. “இந்த ஃபெட்ரல் வட்டி விகிதம் பெரிய அளவுல மார்க்கெட்டை கீழே கொண்டுவரும்ங்கி றாங்களே” என்றான் செல்.

“2008-ல் வந்த நெருக்கடியான சூழலுக்குப் பிறகு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0 முதல் 0.25 வரை என்ற டார்கெட்டை வச்சு நடத்தி வருது. வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்க வட்டியை 0 பண்ணிட்டாங்க. இப்ப வேலையில்லா திண்டாட்டம் குறைஞ்சிடுச்சு. படிப்படியா பொருளாதாரம் மீண்டுகிட்டு வருதுங்கிறதனால வட்டியை உயர்த்தலாமுன்னு ஃபெடரல் ரிசர்வ் முயற்சி எடுக்குது” என்றார்

“அதுக்கும் மார்க்கெட் இறங்குறதுக்கும் என்ன சாமி சம்பந்தம்” என்றேன். “வட்டி குறைவா இருக்கறதால அமெரிக்க பணம் உலக சந்தைகளை நோக்கி வந்துருக்கு. அங்கே வட்டி உயர ஆரம்பிச்சுதுன்னா கொஞ்சமாவது திரும்பி போகத்தானே செய்யும் என்றவரிடம், அதனாலதான் டாலர் மதிப்பு ஏறுதா” என்றான் செல். “அதுவும் ஒரு காரணம் என்று திருத்தினார் சாமி. இப்பதான் வட்டியை ஏத்தலையே” என்றேன்.

“இது நிரந்தரம் இல்லை. அடுத்த மீட்டிங்கில உயர்த்தலாம்” என்றார் சாமி. “தள்ளிப்போட்டுகிட்டே போய் கடைசியில ஒரேயடியாய் ஏத்திட்டா என்ன செய்வது” என்று கேட்டான் செல்.

“அடேய் உனக்கு நிறைய விஷயம் புரிய மாட்டேங்குது, எல்லா நாட்டிலேயேயும் அரசாங்கம்தான் பெரிய அளவில கடன் வாங்குது. அதனால தடாலடியாவெல்லாம் ஏத்திட மாட்டாங்க. நிச்சயமா கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஏத்துவாங்க. அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு இருந்த பயங்கரமான காய்ச்சல் சரியாகிட்டு வருது. இந்தச் சூழ்நிலையில கொஞ்சம் கொஞ்சமாதான் மருந்தை நிறுத்துவாங்க. ஒரேயடியாய் டக்குன்னு நிறுத்தினா சிக்கலாயிடும். இங்கே மருந்துங்கிறது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் என்றார்” சாமி.

“அப்ப நான் எப்படி வியாபாரம் பண்றது” என்றான் செல்.

“டிரேடரா நீ அளவா வியாபாரம் பண்ணிப் பழகு. நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கற கம்பெனியில மட்டும் வியாபாரம் பண்ணு. விடுமுறை நாட்கள் இருக்குறப்போ பொசிஷன்களை எதையும் எடுத்து ஓவர்நைட் வைக்காதே. டேட்டா வெளியீடுகள் இருக்கற அன்னைக்கு வியாபாரத்தை குறைச்சுக்கோ, அவ்வளவுதான்” என்றார்.

“ நான் டிரேடர் இல்லையே. முதலீட்டாளராச்சே” என்றேன்.

“நீ படுற கவலையப் பார்த்தா நீ டிரேடரை விட மோசமாவுல்ல இருக்கே! பொருளாதாரம், வாழ்க்கை, சந்தை எல்லாம் ஒரு சைக்கிள். இந்த சைக்கிள் கீழேயும் மேலேயுமா போயிட்டு வர்றது. கீழே இருக்கறப்ப பார்த்துட்டு விலகிப்போனேன்னு வச்சுக்க, மேலே போனப்ப பாத்துட்டு ஆத்தீ... ஏமாந்துட்டோமோன்னு நொந்துக்குவே. முதலீட்டாளர் அப்படீன்னு சொல்லீட்டீன்னாலே மூணு முதல் ஐந்து வருட காலத்துக்கு மட்டுமே கவலைப்படணும். நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் கம்பெனிகளோடேயே இருக்கணும். திடீர் இறக்கங்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட கூடாது” என்றார் சாமி.

“திடீரென நல்ல ஃபண்டமென்டல்னா எது சாமி” என ஒரு கேள்வியை கேட்டான் செல்.

“உன்னையை உதைக்கணுமடா என்று விளையாட்டாய் கையை ஓங்கினார் சாமி. அதற்குள் யாரோ விசிட்டர் வர... “தீபாவளிக்கு சந்திப்போம்” என்று விடை கொடுத்தார் சாமி.