Published:Updated:

முதலீட்டுக்கு ஏற்ற தருணம்!

நெல்லை கருத்தரங்கில் கலக்கிய முதலீட்டாளர்கள்...

முதலீட்டுக்கு ஏற்ற தருணம்!

நெல்லையில் செப்டம்பர் 27-ல் நாணயம் விகடன், இன்டகிரேட்டட் என்டர்பிரைசஸ்        (இந்தியா) லிமிடெட், என்எஸ்டிஎல் மற்றும் என்எஸ்இ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘அஸெட் அலோகேஷன் - செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ என்கிற கருத்தரங்கினை நடத்தியது. 

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பி.பத்மநாபன், “நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களின் விலையும் உயர்கிறது. நாம் செய்யும் முதலீடு குறைந்தபட்சம் இந்த விலையேற்றத்தை சமாளிக்கக்கூடிய அளவிலாவது இருக்க வேண்டும்'' என்றார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்டகிரேட்டட் நிறுவனத்தின் சார்பில் பேசிய ரவிச்சந்திரன், “தொடர்ச்சியான சேமிப்பு முக்கியம்; அதிலும் சம்பாதிக்க தொடங்கிய நாள் முதலே  முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முதலீட்டை ஓய்வு பெறுகிறவரை நிறுத்தவே கூடாது'' என்றவர், அப்படி செய்வதில் கிடைக்கும் லாபத்தை சொன்னபோது, எல்லா வாசகர்களும் மூக்கின் மீது விரலை வைத்தனர்.

முதலீட்டுக்கு ஏற்ற தருணம்!

என்எஸ்டிஎல் சார்பில் பேசிய ஆரோக்கியராஜ், அனைவரிடமும் டீமேட் கணக்கு துவங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணை உதவித் தலைவரும் பிராந்திய தலைமை அதிகாரியுமான சுவாமிநாதன்,  “காருக்குத் தருகிற மரியாதையை நம் உடலுக்கு நாம் தருவதில்லை. குடும்பத் தலைவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், குடும்ப உறுப்பினர்கள்தான் கஷ்டப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், எல்லோருமே இன்ஷூரன்ஸ் எடுப்பார்கள்'' என்றார்.

இறுதியாக பேசிய குடும்ப நிதி ஆலோசகரான  சுரேஷ் பார்த்தசாரதி, “'நம்மிடம் இருக்கும் எல்லா பணத்தையும் ஒரே வகையான முதலீட்டில் போட்டு வைக்கக்கூடாது. பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் எனப் பிரித்து வைக்க வேண்டும்'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் வாசகர்கள்,  இன்ஷூரன்ஸ் பற்றி அதிக கேள்வி கேட்டது ஆச்சர்யம்!

மு.விஜய்சங்கர்

படங்கள்: எல்.ராஜேந்திரன்.