Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?

முதலீட்டின் நோக்கமே அதிக லாபம் அடைய வேண்டும் என்பதுதான். சில முதலீடுகள், முதலீட்டாளர்கள் எடுக்கும் ரிஸ்க் திறனுக்கு ஏற்ப வருமானம் தரக்கூடியது. ரிஸ்க் எடுப்பதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது மியூச்சுவல் ஃபண்டுகள். இந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்ய முக்கியக் காரணம், மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் சரியான முதலீட்டு முடிவுகளை எடுத்து அதிக லாபம் தருவார்கள் என்கிற நம்பிக்கையினால்தான்.

மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதிக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு ஃபண்டுக்கும் ஒரு பெஞ்ச்மார்க் இருக்கிறது. இந்த பெஞ்ச்மார்க்குக்கு குறையாத அளவுக்கு ஒரு ஃபண்ட் திட்டம்  வருமானம் தரவேண்டும். உதாரணமாக, ஐடி துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யப்படும் ஒரு ஃபண்ட் திட்டத்துக்கு நிஃப்டி அல்லது சென்செக்ஸ் ஐடி இண்டெக்ஸ் பெஞ்ச்மார்க்காக எடுத்துக் கொள்ளப்படும். நிஃப்டி அல்லது சென்செக்ஸ் ஐடி இண்டெக்ஸ் தந்த வருமானத்தைவிட அதே துறையில் முதலீடு செய்யும் ஒரு ஃபண்ட் திட்டம் மிகக் குறைவான வருமானம் தந்தால், அது மோசமான ஃபண்டாகவே கருதப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனவே, புதிதாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது கடந்த 1, 3, 5 ஆண்டு காலத்தில் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸை விட எவ்வளவு வருமானம் குறைவாக தந்துள்ளது என்று பார்க்க வேண்டும். எந்த காலகட்டத்தில், என்ன காரணத்தினால் வருமானம் குறைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். குறுகிய காலத்தில் குறைந்திருந்தால், அதிகம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அந்த நிலை தொடர்கதையாக இருந்தால் அந்த ஃபண்டினை தவிர்ப்பதே நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?

பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட குறைவான வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் மீது எதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

“மியூச்சுவல் ஃபண்டின் வருமானம் கட்டாயம் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸை விட அதிகமாக இருக்க வேண்டும் என சட்டரீதியாக எந்தக் கட்டாயமும் இல்லை. ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. ஃபண்டின் வருமானம் குறையும்போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்ப முடியும். ஏன் வருமானம் குறைந்தது என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கேட்கும்போது, அதற்கான பதிலை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தெரிவிக்கும். அதாவது, இந்த இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருந்தோம்.

அந்த முதலீட்டில் எந்த மாதிரியான சிக்கல் ஏற்பட்டது என்பதை ஃபண்ட் நிறுவனம் தெரிவிக்கும். இதைத் தவிர, வேறு எந்தவிதமான தீர்வையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வழங்காது. அந்த ஃபண்டில் தொடர்ந்து இருக்கலாமா, கூடாதா என்பதை முதலீட்டாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

எனவே, எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருந்தாலும், முதலீடு செய்வதற்குமுன் அந்த ஃபண்ட் அதனது பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தருகிறதா என்பதை அவசியம் கவனித்து முடிவெடுப்பது நல்லது.

இரா.ரூபாவதி