Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்: செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு

ஃபண்ட் பரிந்துரை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்யக்கூடிய ஃபண்டாகும். ஆனால், எதை சிறிய நிறுவனம் என்று எடுத்துக்கொள்வது?

இந்த ஃபண்டின் வரையறைப்படி, சிஎன்எக்ஸ் 500-ல் (இந்தியாவில் பங்குச் சந்தையில் 93 சதவிகித வர்த்தகம் இந்த 500 பங்குகளிலேயே நடக்கின்றன) உள்ள பங்குகளை சந்தை மதிப்பின்படி வரிசைப் படுத்தினால் வரக்கூடிய பட்டியலில், முதல் பெரிய 100 நிறுவனப் பங்குகளை பெரிய நிறுவனங்கள் என இந்த ஃபண்ட் எடுத்துக் கொள்கிறது. அதாவது, 101 முதல் 500 வரை இருக்கும் பங்குகளை சிறிய நிறுவனங்கள் என இந்த ஃபண்ட் வரையறுத்துள்ளது. அந்த 400 பங்குகளுக்குள்ளேயே தனது முதலீட்டை வைத்துக்கொள்கிறது இந்த ஃபண்ட்.

இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்டபோது (ஜனவரி 13, 2006) ஒரு குளோஸ் எண்டட் திட்டமாகத்தான் அறிமுகப்படுத்தப் பட்டது. 5 வருடங்கள் கழித்து (ஜனவரி 14, 2011) இந்த ஃபண்ட் ஓப்பன் எண்டட் திட்டமாக மாற்றப்பட்டது. இந்த ஃபண்டில் ஏறக்குறைய 85% மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும், மீதம் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிவேக வளர்ச்சியுடைய சிறிய நிறுவனப் பங்குகளை, இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் சேர்க்கிறது. ஆகவே, அதிக ரிஸ்க் மற்றும் ரிவார்டை எதிர்பார்ப்பவர்களுக்கே இந்த ஃபண்ட் பொருந்தும்.

இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர்கள் ஆர்.ஜானகிராமன் மற்றும் ரோஷி ஜெயின் ஆவார்கள். 2008-ம் ஆண்டிலிருந்து ஜானகிராமன் இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். ரோஷி ஜெயின் 2014-ம் ஆண்டிலிருந்து ஃபண்டின் கூடுதல் மேனேஜராக உள்ளார்.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,400 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக் கொண்டதின் முக்கிய காரணம், இதன் உன்னதமான வருமானம்தான். மேலும், ஆர். ஜானகிராமன் ஒரு கைதேர்ந்த ஃபண்ட் மேனேஜர். கூடுதலாக, ஃப்ராங்க்ளின் நிறுவனம் நல்ல செயல் முறையைக் கொண்டுள்ள ஃபண்ட் நிறுவனம். கடந்த 1, 3, 5, மற்றும் 7 வருட கால கட்டங்களில் 1.43% - 9.12% வரை கேட்டகிரி ஆவரேஜைவிட அதிக வருமானம் ஈட்டித் தந்துள்ளது. மேலும், இதன் ஆல்ஃபா 20.04 என்ற அளவில் மிக உன்னதமாகவும், இதன் பீட்டா சந்தையை ஒட்டி 0.97 என்ற அளவிலும் உள்ளது. போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 70 பங்குகள் உள்ளதால், எந்த பங்கும் 3.50 சதவிகிதத்துக்கு  அதிகமாக இல்லை. இந்த ஃபண்ட் வைத்தி ருக்கும் பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு ரூ.5,328 கோடியாகும்.

ஃபண்ட் பரிந்துரை

பொதுவாக, லார்ஜ் கேப் மற்றும் மல்ட்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோக்களில், ஒரே மாதிரியான பங்குகளையே பார்ப்போம். இங்கு ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், அதுல், கிரீவ்ஸ் காட்டன், சியண்ட், ஜே.கே.லெக்சுமி சிமென்ட், நவ்நீத் எஜுகேஷன், எம்எம் ஃபோர்ஜிங்ஸ் போன்ற பல வித்தியாசமான பங்குகளை பார்க்கலாம். இந்த ஃபண்ட் இன்ஜினீயரிங், சர்வீசஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன், கெமிக்கல்ஸ், மெட்டல்ஸ் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ், டெக்னாலஜி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் அண்டர்வெயிட் டாகவும் உள்ளது. பங்குகளில் ஏறக்குறைய 92 சதவிகித முதலீடும், எஞ்சியது கேஷாகவும் உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை

ஆரம்பித்த சில வருடங்களுக்கு இந்த ஃபண்டின் செயல்பாடு சற்று சுமாராகத்தான் இருந்தது. இந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க்கான சி.என்.எக்ஸ் மிட்கேப் குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2007, 2008 மற்றும் 2010-ம் வருடங்களில் அண்டர் பெர்ஃபார்ம் செய்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த 5 வருடங்களாக தொடர்ச்சியாக தனது பெஞ்ச்மார்க்கை  அவுட் பெர்ஃபார்ம் செய்துள்ளது.

இந்த ஃபண்ட் துவங்கியபோது (ஜனவரி 13, 2006) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.3,80,430-ஆக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் 14.77% வருமானமாகும்.

பல நல்ல அம்சங்களைக் கொண்ட இந்த ஃபண்டில்,  ஹைரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை

யாருக்கு உகந்தது?

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள். 
 
யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.