அண்மைக் காலமாக சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அது ஒரு வரம்புக்கு உட்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ஒரு பங்கின் உண்மையான விலையை மிகச் சரியாக கண்டுபிடித்து முதலீடு செய்வது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

பொதுவாக, கரடி சந்தையில் வேல்யூ ஸ்டாக்குகளை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். அப்போது அந்தப் பங்குகள் அந்த நிறுவனத்தின் ஃபண்டமென்டலையும் தாண்டி சரியான விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், காளை சந்தை மற்றும் ஏற்ற இறக்கச் சந்தையில் பங்கின் உண்மை விலையைக் கண்டுபிடிப்பது என்பது கடினமாக இருக்கும். சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது ஏறக்குறைய முடியாத காரியமாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு நல்ல ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளை தேடி கண்டுபிடித்து முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நாணயம் விகடன் வாசகர்களுக்கு அடுத்து 6 முதல் 12 மாதங்களிலும் நல்ல வருமானம் தரக்கூடியதும், அதே நேரத்தில், நீண்ட கால முதலீட்டுக்கும் ஏற்ற, உண்மையான விலையில் வர்த்தகமாகும் ஐந்து பங்குகளை தேர்ந்தெடுத்து தரும்படி மும்பையை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை பயிற்சியாளருமான குரோத் அவென்யுஸ் (Growth Avenues) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சி.கே.நாராயணிடம் கேட்டோம். உண்மை யான மற்றும் சரியான விலையில் இப்போது வாங்குகிற மாதிரியான பங்குகளை அவர் நம் வாசகர்களுக்கு தந்துவிட்டு, அதற்கான விளக்கத்தையும் சொன்னார்.

‘‘ஒரு பங்கை அதன் சரியான விலை யில் வாங்க முடிவு செய்துவிட்டோம் எனில், அந்தப்பங்கு அண்மைக் காலம் வரையில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், சில நியாய மான காரணம் அல்லது காரணங்களால் விலையில் கரெக்ஷனை சந்தித்திருந்தால், அந்தப் பங்கை முதலீட்டுக்கு கவனிக்கலாம்.

இறக்கத்துக்குப் பிறகு, பங்கு அதன் ஏற்றப் போக்கிலேயே செல்லும் என்கிற நிலை மற்றும் அண்மைக்

கால நிதிநிலை முடிவுகளில் பங்கின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் நல்ல வளர்ச்சியைக் காணும் 5 பங்குகளை பரிந்துரை செய்கிறேன். நீண்ட கால முதலீட்டு நோக்கிலும் இந்தப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்தப் பங்குகளின் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆனால், விலை அதிகம் என்கிற நிலைக்கு உயரத் தொடங்கவில்லை. இந்த விலை என்பது இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டிய விலைதான்” என்ற சி.கே.நாராயண், அந்த ஐந்து பங்குகள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

ஐடிபிஐ பேங்க் IDBI

கடந்த சில மாதங்களுக்குமுன் இந்தப் பங்கின் விலை இறக்கத்தை சந்தித்தது. இதன் விலை சிறிது ஏறத்தொடங்கி இருக்கிறது. நீண்ட காலமாக ரூ.55 - 60 என்கிற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. அண்மைக் கால இறக்கத்துக்குப் பிறகு பங்கின் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.

சமீப செய்திகளில் இந்த வங்கியின் பெயர் அதிகமாக அடிபட்டது. இந்த வங்கியின் பங்கு மூலதனத்தில் அரசின் பங்கை குறைக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

இந்த வங்கி மறுசீரமைக்கப்படும் பட்சத்தில், பங்குகளில் இன்னும் அதிகம் பேர் முதலீடு செய்வார்கள். மேலும், வங்கியின் மொத்த வாராக் கடன் (சுமார் 6%) மிக அதிகமாக இருப்பதால், இது தனியார் வங்கியாகக்கூட (ஆக்ஸிஸ் வங்கி போல்) மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் பங்கின் விலை அடுத்த சில மாதங்களில் வேகமாக ஏறக்கூடும்.

இந்தப் பங்கு, இப்போது விற்பனை யாகும் விலை என்பது நல்ல விலை என்று குறிப்பிடலாம். பொறுமையாக, சின்ன சின்ன இறக்கத்தின்போது பங்கை வாங்கிச்் சேர்த்தால், லாபம் பார்க்க வாய்ப்புண்டு.

அடுத்த ஓராண்டுக்கான இலக்கு விலை ரூ.110.

ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைசஸ் லிமிடெட் FCEL

ஃப்யூச்சர் ரீடெய்ல் குழுமத்திலிருந்து பிரிக்கப்பட்டதுதான் ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைசஸ் லிமிடெட். இந்த எஃப்சிஇஎல் பங்கு கடந்த 2011-ல் பட்டியலிடப்பட்டது.

இரு வருட காலமாக கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடந்த பங்கின் விலை அண்மையில் ஏற ஆரம்பித்திருக்கிறது.

பதஞ்சாலி குழுமத்துடன் இந்த நிறுவனம் கூட்டு சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது.

தற்போது இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.3,000 கோடியாக இருக்கிறது. பதஞ்சாலி குழுமத்துடன் இணைந்து செயல்படும்பட்சத்தில், இந்த அளவு தொகை இந்த நிறுவனத்துக்கு ஒருதவணையில் கிடைக்கக்கூடும்.

மேலும், இந்த நிறுவனத்தின் சில பிரிவுகள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது நடக்கும்பட்சத்தில் நிறுவனத்தின் நிதிநிலை நன்றாகவே மேம்படும்.

இந்த நிறுவனம், அதனை ஒருங்கிணைந்த உணவு மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 22 சதவிகிதமாக இருக்கிறது.

அடுத்து வரும் காலாண்டுகளிலும் இதேபோன்ற நல்ல நிதி நிலை முடிவுகளை இந்த நிறுவனம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம், இப்போது இழப்பில் இருந்தாலும், மீண்டு வந்துவிடும். அந்த வகையில் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் பங்கின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் பங்கின் இலக்கு விலை ரூ.35.

எல்ஜி எக்யூப்மென்ட் ELGI EQUIPMENT

ஏர் கம்ப்ரசர்கள் பிரிவில் இந்தியாவின் மார்க்கெட் லீடராக இந்த நிறுவனம் இருக்கிறது. ஆசிய அளவிலும் இந்த நிறுவனம் பெரியதாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு அதன் 2014-15-ம் ஆண்டின் வருமானத்தில் சுமார் 40 மடங்குகளில் வர்த்தகமாகி வருகிறது.

நாட்டின் பொருளாதார மேம்பாடு, ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வருவது, பிசினஸ் மாடல் மாற்றம் போன்றவற்றால் வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் லாப வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையில் அதிக பங்களிப்பு, போட்டி நிறுவனங்களைவிட தொழில் நுட்பத்தில் முன்னணி போன்றவற்றால் வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிறுவனப் பங்கின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் தற்போது ரூ.1,900 கோடியாகவும் விற்பனை ரூ.1,300 கோடி யாகவும் உள்ளது. இதன் மிக முக்கிய போட்டி நிறுவனமான இங்கர்சால்-ன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.1,900 கோடி, விற்பனை ரூ.650 கோடியாக உள்ளது. எல்ஜி எக்யூப்மென்ட் நிறுவனப் பங்கின் விலை அதிகம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், அதிகம் பேர் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்த நிறுவனம் வளர்ச்சி அடையும்பட்சத்தில், பங்கின் தற்போதைய விலை மிகவும் மலிவாகும். அடுத்த 6 முதல் 12 மாதங்களில் பங்கின் இலக்கு விலை ரூ.200.

ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம்ஸ் HCL Infosystems

ஐடி சேவை மற்றும் தீர்வு அளிக்கும் இந்திய முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம்ஸ் இருக்கிறது. இந்த நிறுவனம், அதன் வாடிக்கை நிறுவனங்களுக்கு மதிப்புக் கூட்டுதல் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. மேலும், டெலிகாம், ஐடி, ஆபிஸ் ஆட்டோமேஷன், நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங், புரமோஷன்கள் போன்றவற்றிலும் உதவி வருகிறது.

அண்மைக் காலத்தில் இந்த நிறுவனப் பங்குகளை பெரும் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கி இருக்கிறார்கள். இதற்கு முன்னரும்கூட இப்படி முதலீடு நடந்திருக்கிறது. இறங்கிய பங்கின் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. சார்ட் மூலமாக பார்த்தால், பங்கு வர்த்தக எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது. பலவீனமான விஷயங்கள் வெளியேறிவிட்டன. தற்போது அருமையான புல்லிஷ் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது.

ஓராண்டு இலக்கு விலை ரூ.110.

சஹ்யாத்ரி இண்டஸ்ட்ரிஸ் Sahyadri Industries

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.81 கோடி மட்டுமே கொண்ட மைக்ரோ கேப் நிறுவனம் இது. இது ஸ்வஸ்திக் என்கிற பெயரில் ஃபைபர் சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் வேகமான விரிவாக்க நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. செல்லுலோஸ் ஃபைபர் போர்ட்கள் மற்றும் டாய்லெட் பிளாக்குகள் உற்பத்திக்காக ரூ.140 கோடியில் தொழிற்சாலை அமைக்கப் போவதாக அண்மையில் இந்த நிறுவனம் அறிவித்தது. பெண்கள் அனைவருக்கும் கழிவறை வசதி என்கிற மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயனடையும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதிநிலை வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இந்த நிறுவனப் பங்குக்கான சார்ட்டில் ரவுண்ட் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இதன்படி, இந்த பங்கில் நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிகம் பேர் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பேட்டர்ன் உடைக்கப்பட்டால், கப் அண்ட் கேண்டில் பேட்டர்ன் உருவாகும். அப்படி நடந்தால், இந்தப் பங்கின் விலை இன்னும் அதிகரிக்கும். மொமென்டம் இண்டிகேட்டர்கள் பங்கின் விலை உயர்வைக் குறிப்பதாக இருக்கிறது. அடுத்த 6-12 மாதங்களில் பங்கின் விலை ரூ.120-க்கு அதிகரிக்கக் கூடும்” என்று முடித்தார் சி.கே.நாராயண். இந்தப் பங்கு ஸ்மால் கேப் பிரிவைச் சேர்ந்ததால் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே முதலீடு செய்ய உகந்தது.

தீபாவளியையொட்டி இந்தப் பங்குகளை வாங்க பரிசீலிக்கலாமே!

டிஸ்க்ளெய்மர்: இங்கு பங்குகள் குறித்துச் சொல்லப்பட்ட கருத்துகள், பரிந்துரைகள் அனலிஸ்ட்டின் சொந்த கருத்துகளே. அவை நாணயம் விகடன் இதழை சாராது. இங்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பங்குகளில் பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை பயிற்சியாளருமான குரோத் அவென்யுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.கே.நாராயண் (SEBI Registration No As Research Analyst is INH000001964) அவர்களின் சொந்த கணக்கிலோ அல்லது மற்றவர்களுக்காகவோ முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.