இந்தியாவின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான போலாரிஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த விர்சூசா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. போலாரிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.220.73 என ரூ.1,172.81 கோடிக்கு வாங்கியிருக்கிறது விர்சூசா நிறுவனம்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் உள்ள போலாரிஸ் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விதிமுறைப்படி வாங்க தயாராகி இருக்கிறது விர்சூசா நிறுவனம். போலாரிஸின் ஒரு பங்கு ரூ.220.73 என வாங்கிக்கொள்வதாக விர்சூசா அறிவித்துள்ளது. இதற்கான ஓப்பன் ஆஃபர் விண்ணப்பத்தை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விர்சூசா சமர்ப்பித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதிக்குள் செபி அதற்கான அறிவிப்பை அதன் அனைத்து பொது பங்குதாரர்களுக்கும் அதிகாரபூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளது.

ஆனால், தற்போது இந்தியப் பங்குச் சந்தைகளில் போலாரிஸின் பங்குகள் ரூ.201 லிருந்து ரூ.205 என்ற அளவில் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஓப்பன் ஆஃபர் குறித்த செய்தி வெளியான நவம்பர் 6-ம் தேதி, பங்குச் சந்தையில் போலாரிஸ் பங்குகளின் வர்த்தகம் ரூ.204.10 என்ற விலையில் முடிவடைந்தது.

அன்றைய தேதியில் மட்டும் ராஜஸ்தான் குளோபல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனம் போலாரிஸின் 5.3 லட்சம் பங்குகளை ரூ.204.76 வீதத்தில் வாங்கியுள்ளது.

இந்த நிலையில் போலாரிஸ் பங்குகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும், அதை விற்பது

லாபமா, பங்குகளின் நிலை எப்படி இருக்கிறது, புதிதாக போலாரிஸ் பங்குகளை வாங்கலாமா போன்ற கேள்விகளுக்கு விராமத் ஃபைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் பழனியப்பன் மெய்யப்பன் அவர்களிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“போலாரிஸ் பங்குகளின் ஓப்பன் ஆஃபர் விலை 220 ரூபாய் என்பது ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு குறைவான விலைதான். தற்போது போலாரிஸ் நிறுவனத்தை விர்சூசா என்ற நிறுவனம் கையகப்படுத்தியிருப்பதால், எதிர்காலத்தில் அதன் செயல்திறனும் தொழிலும் மேலும் வளர அதிக வாய்ப்புள்ளது. அப்படி இருக்க போலாரிஸ் பங்குகளின் விலை ரூ.260 வரை தோராயமாக உயர வாய்ப்புள்ளது.

அதனால் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும் மனநிலை உள்ளவர்கள் போலாரிஸ் பங்குகளை தற்போது விற்க தேவையில்லை. ஏனெனில் போலாரிஸ் பங்குகள் நீண்ட காலத்தில் புல்லிஷாகவும், குறுகிய காலத்தில் பியரிஷாகவும் இருக்கும்.

குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் பங்குகளை விற்க விரும்பினால், ஓப்பன் ஆஃபரில் விற்காமல் சந்தையில் நல்ல விலையில் விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு பெற்று லாபம் பெறலாம்.

புதிதாக போலாரிஸ் பங்குகளை வாங்க விரும்புபவர்கள் இப்போது வாங்க வேண்டாம். அடுத்த காலாண்டு முடிவுகள் வெளியாகும்போது, அதன் இதர செலவீனங்கள் அதிகரிக்கும் என்பதால், பங்கின் விலை குறைய வாய்ப்புள்ளது. அப்போது வாங்கிக்கொள்ளலாம் எதிர்காலத்தில் விர்சூசா நிறுவனம் போலாரிஸ் பெயரை மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி மாற்றும்பட்சத்தில் போலாரிஸ் பங்குகளை வைத்திருப்பவர்கள் புதிய பெயரிலேயே வர்த்தகம் செய்யும் வகையில் செபி தரப்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்” என்றார்.

அவர் கூறியது போல இலங்கையைச் சேர்ந்த கிரிஸ் மற்றும் துஷாரா கேன்கெராதின் ஆகிய இரண்டு தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்ட விர்சூசா, போலாரிஸ் நிறுவனம் செய்துவந்த அதே நிதிசார் சேவைகளைத்தான் நிதி நிறுவனங்களுக்கு செய்து வருகிறது. ஆகையால் போலாரிஸ் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்து, அதன் பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என நம்பலாம்.

போலாரிஸின் வரலாறு!

22 வருட பாரம்பர்யம் கொண்ட போலாரிஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீசஸ் நிறுவனம், 1993-ல் அருண் ஜெயின் என்பவரால் வெறும் ரூ.10,000 முதலீட்டில் போலாரிஸ் சாஃப்ட்வேர் லேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிறகு போலாரிஸ் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. நிதிச் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணியாக இருந்து வருகிறது.

உலகின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு போலாரிஸ் தொழில்நுட்ப சேவைகளைக் கொடுத்து வருகிறது. நிதி நிறுவனம் சார்ந்த தொழில்நுட்பத்துக்கு உலகின் முதல் தொழில்நுட்ப வடிவமைப்பு மையத்தை அருண் ஜெயின் உருவாக்கினார். அவர் ஒவ்வொரு வருடமும் நிதி நிறுவனங்களின் தேவைக்கேற்ப தன்னையும் தன் நிறுவனத்தையும் மெருகேற்றி வந்தார். இதனால் பல உலக நிறுவனங்களைக் காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைந்தது.

ரீடெயில் பேங்கிங், கார்ப்பரேட் பேங்கிங், டேட்டா அனாலிசிஸ் மற்றும் இன்ஷூரன்ஸ் என அனைத்து சேவையிலும் சிறந்து விளங்கியது. சிட்டி குழும நிறுவனத்தின் மிகப் பெரிய சேவை வழங்கல் வாடிக்கையாளராக போலாரிஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. பேங்க் ஆஃப் டோக்கியோ, மிட்சுபிஷி மற்றும் பல பன்னாட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் சேவை வழங்கல் வாடிக்கையாளராக இந்த நிறுவனம் உள்ளது. ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியன் மதிப்புள்ள சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் போலாரிஸ் இடம்பிடித்தது. போலாரிஸின் 5 சதவிகித பங்குகளை இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வைத்துள்ளார்.

ஏன் விற்றார் அருண் ஜெயின்?

கடந்த 22 ஆண்டுகால உழைப்பில் அருண் ஜெயின் கட்டி எழுப்பிய போலாரிஸை ஏன் விற்றார்? இந்த கேள்விக்கு பல காரணங்களை சொல்கிறார்கள். போலாரிஸின் வளர்ச்சி வேகம் சமீப காலமாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீப ஆண்டுகளில் அதன் வருமானமும் செயல்திறனும் குறைந்தது. நிறுவனத்தின் தொழிலை வளர்க்க வேண்டி, 2014-ல் போலாரிஸ், போலாரிஸ் நிதிச் சேவை தொழில்நுட்பம் மற்றும் இன்டெலக்ட் டிசைன் அரீனா என்று இரண்டாகப் பிரித்தார். இரண்டும் தனித்தனி நிறுவனமாக இயங்க ஆரம்பித்தது.

பின்னர் போலாரிஸ் நிதிச் சேவை தொழில்நுட்பம் என்பது போலாரிஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் என்று மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வந்துள்ளது. 2014-ல் ரூ.1,547.42 கோடியாக இருந்த அதன் மொத்த மதிப்பு, 2015-ல் ரூ.850.83 கோடியாக சரிவடைந்துள்ளது.

தற்போது தன்னுடைய இன்டெலக்ட் டிசைன் நிறுவனத்தின் பிசினஸில் கவனம் செலுத்துவதற்காகவும், கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாலும், அதற்கான நேரம் வேண்டி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அருண் ஜெயின் தெரிவித்துள்ளார்.