இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்கள் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஃப்ளிப்கார்ட்,

பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் சேரும் அதே நேரத்தில் ரிலையன்ஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ போன்ற நிறுவனப் பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறிவிடும் என பங்குப் பகுப்பாய்வு நிறுவனமான அம்பிட் கேப்பிட்டல் (Ambit Capital) அதிரடியாக தெரிவித்துள்ளது. இதையொட்டி அது ‘சென்செக்ஸ் 2025’ (The Sensex in 2025) என்ற ஆய்வறிக்கையை (மே 2015)வெளியிட்டுள்ளது.

அம்பிட் கேப்பிட்டலின் தலைமை செயல் அதிகாரி சௌரப் முகர்ஜியாவிடம் (இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ்) இந்த ஆய்வறிக்கை பற்றி பேசினோம். ‘‘பொதுவாக, அதிக பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்கும் காலத்தில் சென்செக்ஸ் பங்குகளின் பட்டியலில் அதிக மாற்றம் ஏற்படும். உதாரணத்துக்கு, 1995 முதல் 2005 வரையிலான பத்தாண்டு காலத்தில் சென்செக்ஸ் பங்குகளில் 67% மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிக பொருளாதார மாற்றங்கள் இல்லாத காலத்தில் சென்செக்ஸ் பங்குகளில் குறைந்த எண்ணிக்கையில்தான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (யூபிஏ) ஆட்சியில் அதிக பொருளாதார சீர்த்திருத்தங்கள் நடக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் சென்செக்ஸ் பங்குகளில் 25 சதவிகிதம்தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014 வரைக்குமான காலத்தில் சென்செக்ஸ் பங்குகளில் 27 சதவிகிதப் பங்குகள் வெளியேறி இருக்கிறது. 2015 முதல் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அதிக பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்துவரும் பத்து ஆண்டுகளில் இப்போதுள்ள சென்செக்ஸ் பங்குகளில் 50 சதவிகித பங்குகள் வெளியேறி, புதிய பங்குகள் பட்டியலில் சேர வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இப்போது இருக்கும் பங்குகளில் 15 பங்குகள் வெளியேற, வேறு புதிய 15 பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்), ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனப் பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. (வெளியேற வாய்ப்புள்ள இந்த 15 பங்குகளில், தனிப்பட்ட காரணத்தினால் ஒரு பங்கின் பெயரை எங்களால் அறிவிக்க முடியவில்லை.) அதேநேரத்தில், ஃப்ளிப்கார்ட், பேடிஎம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், கபே காபி டே, ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் போன்ற நிறுவனங்கள் புதிதாக பட்டியலில் சேர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இந்த மாற்றங்கள் பற்றி அவர் மேலும் விளக்கினார்.

‘‘பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முதலாளித்துவ முதலீடுகள் குறைந்து, பல தரப்பட்ட முதலீடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு (எஃப்ஐஐ), அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) அதிகரித்து வருகிறது. மானியத்துக்காக அரசு செலவிடுவது குறைந்திருக்கிறது. மேலும், மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல் மூலம் அரசுக்கு செலவு கணிசமாக குறைந்திருக்கிறது. கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் துறை ஒழுங்குப்படுத்து தல், லஞ்சம் - ஊழல் ஒழிப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளும் பாசிட்டிவ் விஷயமாக இருக்கின்றன. இவற்றால் நாட்டில் நிறுவனங்களுக்கிடையே போட்டி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி மேம்படும். இதனால், பணவீக்கம் மற்றும் வட்டி இன்னும் குறையும். நாட்டில் மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்கும். மேலும், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பிஸிக்கல் முதலீடுகள் நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுகள் போன்ற நிதி சார்ந்த முதலீடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கிறது. இவற்றின் காரணமாகவும் பல புதிய நிறுவனங்கள் அதிவேக வளர்ச்சி பெறும்போது சென்செக்ஸ் இண்டெக்ஸில் மாற்றம் ஏற்படக்கூடும்” என்றார்.

பங்கு இண்டெக்ஸ்களில் குறிப்பிட்ட பங்குகள் வெறியேறுவதும், புதிய பங்குகள் நுழைவதும் வழக்கமான ஒன்றுதான்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸில் இடம்பெற்றிருக்கும் பங்குகள் எந்த நிலையிலிருந்து வந்தன என ஆராய்ந்து பார்த்ததில் பல சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்தன.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் முன்னணியில் உள்ள 100 பங்குகளில் இருந்து, 50 சதவிகித பங்குகள், சென்செக்ஸ் குறியீட்டுக்கு வந்துள்ளன.

அடுத்த 200 பங்குகளிலிருந்து 16 சதவிகித பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் சேர்ந்துள்ளன. மீதியுள்ள 34 சதவிகித பங்குகள் புதிதாகப் பட்டியலிடப்பட்டு, சென்செக்ஸ் பட்டியலில் சேர்ந்துள்ளன. அந்த வகையில், புதிதாக பட்டியலிடப்படும் ஒரு நிறுவனம், மெகா தொகையைத் திரட்டும்போது அதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மிக அதிகமாக இருக்கும். அந்த நிறுவனம் மிக எளிதாக சென்செக்ஸ் பட்டியலில் சேர்ந்துவிடும்.

சென்செக்ஸ் பங்குகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கிறது என்பதை 1992 முதல் 2002 ஆண்டுகளில் நடந்த மாற்றங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டிருக்கிறது.

அதன் விவரம் இதோ...

1992 - 2002 இடையே இந்தியாவில் பத்து ஆண்டு காலத்தில் லைசென்ஸ் ராஜ்ஜிய முறை ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது சென்செக்ஸ் பங்குகளில் வெளியே சென்றது 60 சதவிகிதமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 18 பங்குகள் வெளியேறி இருக்கின்றன. இதில் 4 பங்குகள் டெக்ஸ்டைல் துறையையும், 3 பங்குகள் கேப்பிட்டல் கூட்ஸ் துறையையும் சேர்ந்ததாக இருந்தன. இந்தக் காலத்தில் நிதிச் சேவை அல்லது எஃப்எம்சிஜி நிறுவனப் பங்கு எதுவும் வெளியேறவில்லை.(பார்க்க முன்பக்க அட்டவணை) 1992 - 2002 இடையே சென்செக்ஸில் புதிதாக நுழைந்த 18 நிறுவனங்களில் தலா 3 நிறுவனங்கள் ஐடி, பார்மா துறையை சேர்ந்ததாகும். இந்தியர்களின் தனிநபர் வருமானம் தற்போது 2000 டாலராக இருக்கிறது. இது அடுத்த பத்தாண்டு காலத்தில் 4,000 டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா, சீனா, போலந்து, கொரியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, துருக்கி போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் 2,000 டாலரில் இருந்து 4,000 டாலராக அதிகரித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளது என ஆராயப்பட்டது.

இந்தக் காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நுகர்வு, நிதிச் சேவை, தொழில் உற்பத்தி துறை நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது போன்ற மாற்றம் இந்தியாவிலும் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். இதன் அடிப்படையில் சென்செக்ஸ் பட்டியலில் சில நிறுவனங்கள் வெளியேறுவதும், நுழைவதும் நடக்கும்.

‘‘புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சென்செக்ஸில் அடுத்த 10 ஆண்டுகளில் புதிதாக நுழையும் 15 நிறுவனங்களில் 11 பங்குகள் ஏற்கெனவே பட்டியல் இடப்பட்ட பங்குகளாக இருக்கும்.

நுகர்வோர் துறை பங்குகள் : ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்லே, பிடிலைட் மற்றும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ்.

நிதிச் சேவைகள்: கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் இண்டஸ் இந்த் பேங்க்.

மருந்து, ரசாயனம்: டாரென்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் மற்றும் பிஐ இண்டஸ்ட்ரீஸ்.

வாகனம்: எய்ஷர் மோட்டார்ஸ்

தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி): ஹெசிஎல் டெக்

ஃபுட் பிராசஸிங்: காபி டே என்டர்பிரைசஸ்

அடுத்த பத்தாண்டுகளில் ஐபிஓ மூலம் எந்த நிறுவனப் பங்குகள் சென்செக்ஸ் பட்டியலில் இணையும் என்பதை மிகச் சரியாகக் கணிப்பது கஷ்டமான காரியம். அதே நேரத்தில், பல நிறுவனங்களின் வேகமான செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, ஃப்ளிப்கார்ட், பேடிஎம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிதாக ஐபிஓ வந்து சென்செக்ஸ் பட்டியலில் 2025-ம் ஆண்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார் சௌரப் முகர்ஜியா.

பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே இயற்கை! பார்ப்போம், என்ன மாற்றங்கள் நடக்கும் என்று!