ஹெச்டிஎஃப்சி மீடியம் டேர்ம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் வேகமாகக் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அரை

அல்லது ஒரு சதவிகிதம் வட்டி வேறு எங்காவது அதிகமாகக் கிடைக்குமா என்று முதலீட்டாளர்கள் தேடுகிறார்கள். வட்டி அதிகம் கிடைத்தால் மட்டும் போதாது – அது அதிக தரமான முதலீடாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறார்கள். ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட சற்று கூடுதலான வருமானத்துடனும், மிகவும் தரமான போர்ட்ஃபோலியோவுடனும் கூடியதுதான் ஹெச்டிஎஃப்சி மீடியம் டேர்ம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்.

இது கார்ப்பரேட் கடன் பத்திரங்கள், மணி மார்க்கெட் உபகரணங்கள் மற்றும் அரசாங்க பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்கிறது. முதிர்வு காலம் 5 வருடங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலி யோவில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான முதலீடுகள் AAA/ A1+ கிரெடிட் ரேட்டிங் கொண்ட முதலீடுகள் ஆகும். இந்த வகை கிரெடிட் ரேட்டிங் மிக மிக பாதுகாப்பான உபகரணங்களுக்கே தரப்படுகிறது. ஆகவே, கடன் சார்ந்த திட்டங்களில் மிகவும் தரமான முதலீட்டை நாடுபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டம் தற்போது ரூ.3,900 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர் அனுபம் ஜோஷி ஆவார். இதன் போர்ட்ஃபோலியோவில் அரசாங்க கடன் பத்திரங்கள் மிகக் குறைவாக (2.34%) உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பத்திரங்கள்தான் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆர்இசி, எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ், பவர் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, நபார்ட் போன்ற தரமான நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் இந்த ஃபண்டின் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

5 வருடங்களுக்கு முன் இந்த ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.1,59,630-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படை யில் ஆண்டுக்கு 9.12% வருமானமாகும்.

3 வருடம் மற்றும் அதற்கு மேல் உள்ள காலகட்டத்துக்கு எஃப்.டி.யில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். வட்டி விகிதங்கள் இறங்கிவரும் இந்த காலத்தில், இந்த ஃபண்ட் திட்டத்தில் எஃப்டி-யைவிட சற்று கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தவிர, இந்த ஃபண்ட் திட்டத்தில் பணவீக்கத்தை அட்ஜஸ்ட் செய்தபிறகு வருமான வரி கணக்கிடப்படுவதால், வரியும் மிகக் குறைவாகவே இருக்கும்.

நிச்சயமான வருமானத்தை விரும்பு பவர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். அல்ட்ரா கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்; ஏனென்றால், போர்ட்ஃபோலியோவில் அதிகமாக AAA மற்றும் A1+ ரேட்டிங் கொண்ட உபகரணங்கள் உள்ளன. இந்த ஃபண்டின் செலவு விகிதமும் மிகவும் குறைவாக 0.28% என்ற அளவில் உள்ளது.

கடந்த 1, 3 மற்றும் 5 வருடங்களில் தனது கேட்டகிரியை ஒட்டியே வருமானத்தைத் தந்துள்ளது. இதற்கு காரணம், குறைவான அரசாங்க பத்திர முதலீடுகள், குறைவான ஆவரேஜ் முதிர்வுக் காலம் மற்றும் மிகவும் தரமான போர்ட்ஃபோலியோ போன்றவை ஆகும். இந்த ஃபண்டின் ஆவரேஜ் முதிர்வுக் காலம் 1.59 வருடங்கள் ஆகும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது முதலீட்டுக் காலத்தை குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வைத்துக் கொள்வது நல்லது. மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேறும்போது, வரும் வருமானத்துக்கு, அவரவர் வருமான வரி வரம்பில் வரி கட்ட வேண்டிவரும்.

அதுவே மூன்று வருடத்துக்கு மேல் ஆகும்போது, நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் உரித்தாகும். அது தற்போது, பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு 20% ஆகும். அவ்வாறு செலுத்தும்போது வருமான வரி மிகவும் சொற்பமாகவே வரும். ஆகவே, வருமான வரியின் உச்ச வரம்பில் இருப்பவர் களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஃபண்ட் ஒரு வரப்பிரசாதம்.

ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக, எஸ்ஐபி முறையிலும் இந்த ஃபண்டில் சிறு முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். மாதாந்திர குறைந்த அளவு எஸ்ஐபி முதலீடு ரூ.500 ஆகும். இந்த ஃபண்ட், போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த ஒதுக்கீட்டை நாடுபவர்களுக்கு சிறப்பான முதலீடாக அமையும்.

யாருக்கு உகந்தது?

பங்குச் சந்தை ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், அதிக வரி வரம்பில் இருப்பவர்கள், வரிக்கு பிந்தைய வருமானத்தை அதிகமாக எதிர்பார்ப் பவர்கள், ஓய்வுக்காலத்தில் இருப்பவர்கள், பணம் அதிகம் உள்ளவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நடுத்தர காலத்தில் ஃபிக்ஸட் டெப்பாசிட்டுக்கு நிகரான வருமானத்துடன், வேண்டும்போது எடுத்துக்கொள்ளும் வசதியை விரும்புபவர்கள், ஹை கிரெடிட் குவாலிட்டி போர்ட்ஃபோலியோவை விரும்புபவர்கள்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

நீண்ட காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள்.