அண்மையில் மத்திய அரசு 15 முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக் கான (Foreign Direct Investment - FDI) விதிமுறைகளை எளிமையாக்கி இருக்கிறது. இதில், ராணுவம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து போன்ற துறைகள் அடங்கும்.

பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை தழுவியதை அடுத்துதான் மத்திய அரசு பல்வேறு துறைகளில் நடைமுறைகளை எளிதாக்கி இருக்கிறது என்று ஒருபக்கம் விமர்சிக்கப்படுகிறது.

மோடி அரசாங்கம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தபடியே இருக்கிறது. தற்போது வெளிவந்த இந்த அறிவிப்பு, பீகார் தேர்தல் முடிவு வெளியானவுடன் வந்ததால், அதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

காரணம், எதுவாக இருந்தாலும், இப்போது மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டில் செய்திருக்கும் விதிமுறைகள் எளிமையாக்கம் பல துறைகளின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

பிரதமர் நரேந்திர மோடி முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, இந்தியாவில் முதலீடு செய்ய அந்த நாடுகளையும் அந்த நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் முதலீடு செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்.

15 துறைகளில் எஃப்டிஐ மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெளிநாட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம்..!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின்படி, முக்கியமாக வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (Foreign Investment Promotion Board -FIPB), எஃப்டிஐ திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எஃப்ஐபிபி அனுமதி அளிக்கும் திட்டத்தின் மதிப்பு இதற்குமுன் அதிகபட்சமாக ரூ.3,000 கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.5,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் அதிக மதிப்பு கொண்ட திட்டங்களுக்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் கேபினெட் கமிட்டி அனுமதி அளிக்கும்.

முக்கிய விதிமுறை தளர்வு!

எஃப்டிஐ முதலீடு, இரு முறைகளில் அனுமதிக்கப்படுகிறது. ஒன்று, மத்திய அரசின் அனுமதி

பெற்றபிறகு அனுமதிக்கப்படும். இரண்டாவது, நேரடி அனுமதி என்கிற ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் அனுமதிக்கப்படும்.

இரண்டாவது முறையில், ஒரு குறிப்பிட்ட துறை நிறுவனத்தின் ஒரு திட்டத்துக்கு எஃப்டிஐ முதலீடு வருகிறது என்றால், அது அனுமதிக்கப்பட்ட சதவிகித அளவுக்குள் இருக்கும்பட்சத்தில், அது எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் அனுமதிக்கப்படும்.

பல துறைகளில் மத்திய அரசின் அனுமதிக்கு பதில் ஆட்டோமேட்டிக் ரூட் அனுமதி மூலம் எஃப்டிஐ முதலீட்டை மேற்கொள்ள இப்போது வழி வகுக்கப்பட்டு இருக்கிறது.

உதாரணத்துக்கு, ராணுவத் துறையில் தற்போது 49 சதவிகிதத்திற்கு அதிகமான எஃப்டிஐ முதலீடு அரசு அனுமதியின் பேரில் அனுமதிக்கப்படுகிறது. இனி கேபினெட் செக்யூரிட்டி கமிட்டியின் அனுமதிக்குப் பதிலாக, எஃப்ஐபிபி இந்த அனுமதியை அளிக்கும்.

தற்போது இந்தத் துறையில் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் 24% வரைக்கும் எஃப்டிஐ முதலீட்டை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது இது 49 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, வேளாண், கால்நடை பராமரிப்பு, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் நடைமுறைகள் எளிமையாக்கப்படுகின்றன.

கட்டுமானத் துறையில் அதிக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, திட்டத்துக்கான பரப்பு (20,000 சதுர மீட்டர்) மற்றும் திட்டம் தொடங்கப்பட்டு, ஆறு மாதங்களில் குறைந்தபட்ச மூலதன தேவை 5 மில்லியன் டாலர் என்கிற நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், முதலீட்டை வெளியே எடுப்பதிலும் விதிமுறை தளர்த்தப்பட்டிருக்கிறது.

உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்ய அரசின் அனுமதி பெற தேவை இல்லை என்கிற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்..!

எஃப்டிஐ முதலீட்டுக்கான விதிமுறைகள் எளிமையாக்கம் மற்றும் வரம்பு அதிகரிப்பு மூலம் இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய முதலீடு வரும். அதே நேரத்தில், நம் நாட்டில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக மாற்றங்கள்..!

இந்த சீர்திருத்த நடவடிக்கைகளினால் கவனிக்க வேண்டிய துறைகள் மற்றும் பங்குகள் என்னென்ன என கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அதிக மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் ஏழு துறைகள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

அதன் விவரம் இதோ...

துறை: பெருந்தோட்டங்கள் (Plantation-Coffee, Rubber, Cardamom, Palm oil)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: அனுமதி இல்லை

எஃப்டிஐ வரம்பு மாற்றம்: 100% ஆட்டோமேட்டிக் ரூட்

விதிமுறை தளர்வு: எடுத்தவுடனே 100% ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் அனுமதி.

கவனிக்க வேண்டிய பங்குகள்: மெக்லியோட் ரஸ்ஸல் (Mcleod Russel), டாடா குளோபல், குட்ரிக் (Goodricke), ஹாரிசன்ஸ் மலையாளம் (Harissons Malayalam)

துறை: ராணுவம் (Military)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: அரசின் மூலம் 49%, போர்ட்ஃபோலியோ முதலீடு மூலம் 24% வரை அனுமதி

எஃப்டிஐ வரம்பு மாற்றம்: போர்ட்ஃபோலியோ முதலீடு மூலம் 49% வரை அனுமதி

விதிமுறை தளர்வு: 49 சதவிகிதத்துக்கு மேல் எஃப்ஐபிபி-யே அனுமதி கொடுத்துவிடும்

கவனிக்க வேண்டிய நிறுவனப் பங்குகள்: டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அசோக் லேலாண்ட், பிபாவவ் டிஃபென்ஸ், அஸ்ட்ரா மைக்ரோவேவ்.

துறை: ஒலி மற்றும் ஒளிபரப்புத் துறை (Broadcasting)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: டிடிஹெச் பிரிவில் 74% (இதில் ஆட்டோமேட்டிக் ரூட் 49%), எஃப்எம் ரேடியோ 26% (அரசு அனுமதியின் கீழ்)

எஃப்டிஐ வரம்பு மாற்றம்: 100% எஃப்டிஐக்கு அனுமதி. இதில் 49% வரை ஆட்டோமேட்டிக் ரூட் அதற்கு மேல் அரசு அனுமதியின் கீழ்; எஃப்எம் ரேடியோ-49% (அரசு அனுமதியின் கீழ்) 49% நிதி அமைச்சகம் மூலம்.

கவனிக்க வேண்டிய பங்குகள்: ஜீ, சன் டிவி, டிஷ் டிவி, இஎன்ஐஎல் (ENIL)

துறை: உள்நாட்டு விமானப் போக்குவரத்து (Civil Aviation)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: 49% பிராந்திய சேவைக்கு, 74% ஷெட்யூல் சாராத விமானப் போக்குவரத்து, சாட்டிலைட் சேவை, விமான நிலைய தள பராமரிப்பு, கிரெடிட் தகவல் கம்பெனிகள் உள்ளிட்டவைக்கு.

எஃப்டிஐ வரம்பு மாற்றம்: பிராந்திய விமான சேவைக்கு 49% ஆட்டோமேட்டிக் ரூட், மற்ற விமானத்துறை சார்ந்த சேவைகளுக்கு 100% அரசு அனுமதி.

கவனிக்க வேண்டிய நிறுவனப் பங்குகள்: இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கிரிசில், கேர்

துறை: கட்டுமான மேம்பாட்டுத் துறை (Construction development sector)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: 100%

விதிமுறை தளர்வு: லாக் இன் காலம் மூன்றாண்டுகள் முடிந்தபின் வெளிநாட்டு முதலீட்டாளர் அந்த திட்டத்தில் வெளியேற / முதலீட்டை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி.

கவனிக்க வேண்டிய பங்குகள்: அசோகா பில்ட்கான், சிம்ளெக்ஸ் இன்ஃப்ரா, காயத்ரி புராஜெக்ட்ஸ், என்சிசி

துறை: சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல் டிரேடிங், டியூட்டி ஃப்ரீ கடைகள்

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: 100% ஆட்டோமேட்டிக் ரூட்

விதிமுறை தளர்வு: இ-காமர்ஸ் அனுமதி, என்ஆர்ஐ நிறுவனங்களின் முதலீட்டுக்கு அனுமதி, உள்நாட்டிலிருந்து 30 % கொள்முதல் செய்ய வேண்டும் என்பதில் சலுகைகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்: பேண்டலூன், கேவல் கிரன் (Kewal Kiran), டிரென்ட், டைட்டன், அர்விந்த் ரீடெய்ல்

துறை: தனியார் துறை வங்கிகள் (Private Banks)

தற்போதுள்ள எஃப்டிஐ வரம்பு: 74% எஃப்டிஐ. இதில் 49% ஆட்டோமேட்டிக் ரூட்

விதிமுறை தளர்வு: எஃப்ஐஐக்கள் 74% வரை முதலீடு செய்யலாம். இதனால் வங்கியின் நிர்வாகம், கட்டுப்பாடு எதுவும் மாற்றத்துக்கு உள்ளாகாது.

கவனிக்க வேண்டிய பங்குகள்: யெஸ் பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், ஃபெடரல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், சிட்டி யூனியன் பேங்க் (சியூபி)

மத்திய அரசாங்கம் எடுத்திருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை காரணமாக விலை உயர வாய்ப்புள்ள பாசிட்டிவ் பங்குகள் இவை. இந்தப் பங்குகளை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யும் முடிவை எடுங்கள்’’ என்று ஆலோசனையுடன் முடித்தார் ரெஜி தாமஸ்.

15 முக்கிய துறைகளில் எஃப்டிஐ முதலீடு செய்வதற்கான அளவு உயர்த்தப்பட்டிருப்பது ஒரு நல்ல தொடக்கமாகவே விவரம் அறிந்தவர்கள் பார்க்கின்றனர். இன்னும் முக்கியமான சீர்திருத்தங்கள் இனிதான் வெளிவர வேண்டும். அப்படி வரும் சமயத்தில் மேற்சொல்லப்பட்டுள்ள பங்குகளின் விலை இன்னும் உயரலாம். எனவே, இந்த பாசிட்டிவ் பங்குகளை வாசகர்கள் ஃபாலோ செய்யத் தொடங்கலாமே!

எஃப்டிஐ அதிகரிக்கப்பட்டுள்ள 15 முக்கிய துறைகள்!

1. கட்டுமானம்
2. ரயில்வே
3 ஹெல்த்கேர்
4. பெருந்தோட்டங்கள்
5. உள்நாட்டு விமானப் போக்குவரத்து
6 ஒலி & ஒளிபரப்புத் துறை
7. ராணுவம்
8. சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல்
9. தனியார் துறை வங்கி
10. டியூட்டி ஃப்ரீ கடைகள்
11. லிமிடெட் லயபிலிட்டி பார்ட்னர்ஷிப்
12. வேளாண் துறை
13. கால்நடை பராமரிப்பு
14. சுரங்கம்
15. தாதுக்கள் பிரிப்பு

டிஸ்க்ளெய்மர்: இங்கு பங்குகள் குறித்துச் சொல்லப்பட்ட கருத்துகள், பரிந்துரைகள் அனலிஸ்ட்டின் சொந்த கருத்துகளே. அவை நாணயம் விகடன் இதழை சாராது. இங்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பங்குகளில் கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸின் சொந்த கணக்கிலோ அல்லது மற்றவர்களுக்காகவோ முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.