இன்றைய காலகட்டத்தை ஐபிஓ (இன்ஷியல் பப்ளிக் ஆஃபர்) காலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு புதிய பங்கு வெளியீடுகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. டிசம்பர் மாதத்தில் மட்டும் ஐந்து பங்கு வெளியீடுகள் மூலம் சுமார் ரூ.3,700 கோடி திரட்டப்பட இருக்கிறது.

களைகட்டும் இந்திய ஐபிஓ சந்தை!

கடந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு, அதாவது 2011-க்குப்பிறகு இப்போதுதான் இந்திய ஐபிஓ சந்தை மீண்டும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. தற்போது மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட டாக்டர் லால் பாத்லேப்ஸ், நூழிவீடு சீட்ஸ், அல்கெம் லேபாலெட்டரீஸ், நாராயண ஹிருதாலயா, அமர் உஜலா ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் புதிதாக களத்தில் குதிக்க உள்ளன.

இந்த நிறுவனங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஐபிஓ வருவதற்கு ஒரு சுயநலமும் ஒளிந்திருக்கிறது. அமெரிக்காவில் டிசம்பர் 15 - 16-ம் தேதியில் வட்டி விகித அதிகரிப்பு தொடர்பான கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் வட்டியை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வட்டி அதிகரிக்கப்படும்பட்சத்தில், இந்திய பங்குச் சந்தையில் செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக அமெரிக்கா செல்ல வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ், அதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டு வருவதால், பண்டிகைச் செலவுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்பனை செய்வார்கள். அப்போது சந்தை இன்னும் இறக்கம் காணக்கூடும். அப்போது ஐபிஓக்கு அதிக ஆதரவு இருக்காது என்பது ஐபிஓ வரும் நிறுவனங்களின் கணிப்பாக இருக்கிறது.

2010-ம் ஆண்டில் 64 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.37,500 கோடி திரட்டின. அதன்பிறகு 2011 மற்றும் 2014 இடையே மொத்தம் 56 நிறுவனங்கள் ரூ.15,286 கோடி திரட்டின.

இப்போது 2015-ம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையில் ஐபிஓக்கள் வந்திருக்கின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை 18 நிறுவனங்கள் ரூ.11,021 கோடி திரட்டி உள்ளன.

அதிக ஆதரவு!

அண்மையில் ஐபிஓ வந்த எஸ்ஹெச் கெல்கேர் (ரூ.300 கோடி) பங்கு வெளியீட்டுக்கு 27 மடங்கு அதிக ஆதரவு கிடைத்தது. இந்தப் பங்கின் விலை தற்போது சுமார் 20% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

இதேபோல், இந்த ஆண்டில் இதுவரைக்குமான மிகப்பெரிய ஐபிஓ-ஆக ரூ.3,025 கோடியாக இருக்கும் இன்டர்குளோப் ஏவியேஷன் பங்கு, சுமார் 40% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

லிஸ்டிங் லாபம்!

ஐபிஓ வரும் பங்குகளில் முதலீடு செய்பவர்களில் சிலர் பங்குகள் பட்டியலிடப்படும்போது (லிஸ்ட்) அது அதிக விலையில் லிஸ்ட் ஆகும்; அப்போது லாபம் பார்க்கலாம் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். ஆனால், புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, அப்படி அனைத்து பங்குகளும் பட்டியலிடப்பட்ட அன்று விலை உயர்ந்ததாக தெரியவில்லை. மேலும், பட்டியலிடப்பட்ட அன்று விலை குறைந்துபோன பங்குகள் சோடை போனதாகத் தெரியவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015, நவம்பர் 24 வரைக்கும் 531 பங்குகள் புதிதாக பட்டியலிடப் பட்டுள்ளன. இதில் 351 பங்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்ட அன்று அதிக விலைக்கு லிஸ்ட் ஆகி இருக்கிறது. இதில், 170 பங்குகள் இப்போது, அதன் வெளியீட்டு விலையைவிட குறைவாக வர்த்தகமாகி வருகின்றன.

2007-ம் ஆண்டு பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பட்டியலிடப்பட்ட அன்று, வெளியீட்டு விலையைவிட 25% விலை இறங்கியது. இந்தப் பங்கின் விலை இப்போது அதன் வெளியீட்டு விலையைவிட 35 மடங்கு அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

இதேபோல், பட்டியலிடப்பட்ட அன்று விலை இறங்கிய வி-கார்ட், நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், கேவால் கிரண் கிளாத்திங், வி-மார்ட் ரீடெய்ல், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் இப்போது விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.

இதற்கு நேர்மாறாக, சுஸ்லான் எனர்ஜி நிறுவனப் பங்கு, 2005-ம் ஆண்டு பட்டியலிடப்பட்டபோது, 36% பிரீமியத்தில் லிஸ்ட் ஆனது. ஆனால், இப்போது வெளியீட்டு விலையைவிட சுமார் 75% விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதேபோல இந்தோவிண்ட் எனர்ஜி, எவ்ரான் எஜூகேஷன், கேரியர் பாயின்ட், அட்லேப்ஸ் என்டர்டைன்மெயின் போன்ற பங்குகள் பட்டியலிடப்பட்ட அன்று அதிக விலைக்கு வர்த்தகமாகி இப்போது இறக்கத்தில் வர்த்தகம் ஆகிறது.

நீண்ட கால முதலீடு!

நடப்பு ஆண்டில் ஐபிஓ வந்த 18 நிறுவனப் பங்குகளில், 10 நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்ட அன்று விலை அதிகரித்து வர்த்தகமாகி உள்ளது. மேலும், இந்த 18 பங்குகளில் 11 பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைவிட அதிகமாக இப்போது வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஓவில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் நீண்ட கால முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் லிஸ்டிங் லாபம் பற்றி கவலைக் கொள்வதில்லை, கவலைகொள்ளவும் தேவை இல்லை. அவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை கீழே தந்து உள்ளோம்.

ஐபிஓ: செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும்!

முதலீட்டாளர்கள் அவசியம் செய்ய வேண்டி 5 விஷயங்கள்!

1. ஐபிஓ விவரக் கையேட்டை (பிராஸ்பெக்டஸ்)முழுமையாகப் படிக்கவும்.

2. நிறுவனத்தின் பொறுப்புகள் / கடன்கள் மற்றும் மோசடிகள் / தவறுகள் / விதிமுறை மீறல்கள் குறித்த தகவல்களை கூடுதல் கவனம் எடுத்து ஆராயவும்.

3. ஐபிஓ வருவதன் நோக்கம், திரட்டபடும் நிதி எதற்காக (கடனை அடைக்கவா? / விரிவாக்கத்துக்கா?) பயன்படுத்தப்பட இருக்கிறது?

4. நிறுவனத்தின் நிதி நிலை கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, நிறுவனத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் எப்படி?

5. நிறுவனத்தின் புரமோட்டர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை அலசி ஆராய வேண்டும்.

முதலீட்டாளர்கள் அவசியம் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

1. வதந்தியின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளக் கூடாது.

2. கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பி களமிறங்க கூடாது. காரணம், பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் அதிக லாபத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

3. பட்டியலிடப்படும் அன்று, விலை கணிசமாக உயரும். அன்றே விற்று லாபம் சம்பாதிக்கலாம் என களம் இறங்கக் கூடாது. காரணம், லிஸ்டிங் அன்று கட்டாயம் விலை உயரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

4. ஐபிஓ வரும் துறை நன்றாக இருக்கிறது; அந்த துறையை சேர்ந்த வேறு நிறுவனப் பங்கு விலை நன்றாக ஏறி வருகிறது என்பதற்காக இந்தப் பங்கிலும் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யக்கூடாது.

5. நிறுவனத்தின் நிறுவனர்கள் சொல்வதை அப்படியே நம்பாமல், அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுங்கள்.

செபி என்னும் அரண்!

ஐபிஓ வரும் நிறுவனங்களின் அடிப்படையை (ஃபண்டமென்டல்) சிறு முதலீட்டாளர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் செபி, 2007 ஏப்ரல் முதல் ஐபிஓ வரும் நிறுவனங்கள், இக்ரா, ஃபிட்ச், கேர், கிரைசில் போன்ற தரக்குறியீட்டு நிறுவனங்களிடம் ரேட்டிங் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. 2013-ம் ஆண்டு இறுதி முதல் இது கட்டாயம் இல்லை என்பதால், சிறு முதலீட்டாளர்களால் எது வலிமையான நிறுவனம் என அடையாளம் காண்பது சிக்கலாக இருக்கிறது.

அதேநேரத்தில், சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி எடுத்துள்ளது. ஐபிஓவின்போது பல நிறுவனங்கள், பங்கின் விலையை கண்டபடி நிர்ணயித்தன. இதுபோன்ற நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு நிதி திரட்டி கொடுக்கும் லீட் மேனேஜர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்தது. நியாயம் இல்லாமல் அதிகமாக பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டால், அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும் என செபி எச்சரிக்கை விடுத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

கடந்த 2008 - 09 மற்றும் 2010-11- ம் ஆண்டுகளில் வந்த ஐபிஓக்களில் அதிக பிரீமியம் விலையில் வெளியிடப்பட்டவை 85% முதல் 95 சதவிகிதமாகும். செபியின் கிடுக்குப்பிடியால், இந்த பிரீமிய விலை பங்கு வெளியீடு 2013-14 - ம் ஆண்டில் 22% அளவுக்கு குறைந்து போனது. மேலும், புற்றீசல் போல் பல சிறிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பணம் திரட்டி விட்டு சும்மா இருந்துவிடுகின்றன. இவற்றுக்கும் இப்போது செபி ஆப்பு வைத்துள்ளது. கடந்த ஓராண்டாக மொத்த பங்குகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக பங்குகள் வர்த்தகம் ஆகும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் நலன் கருதி, இந்த நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டும். இப்படி டீலிஸ்டிங் செய்யும் போது, வெளியேறும் விலை, ஃப்ளோர் விலையை விட குறைவாக நிர்ணயிக்க கூடாது என்ற விதியை செபி கொண்டு வந்துள்ளது.

செபியின் இந்த நடவடிக்கைகளால் இனி ஐபிஓவில் முதலீடு செய்பவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்த துறைகள்!

கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கி, வாகனம், தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றன. வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.85,376 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 அக்டோபரில் இது ரூ.62,719 கோடியாக இருந்தது. இதற்கடுத்து ஐ.டி (ரூ.41,817 கோடி), பார்மா (ரூ.34,443 கோடி), வாகனம் (ரூ.29,985 கோடி), நிதிச் சேவை (ரூ.23,944 கோடி) ஆகிய துறை நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகமாகி இருக்கிறது.