பெருமழையினால் சென்னை நகரமே சீர்குலைந்திருந்த போதிலும், பல பிரச்னைகளுக்கு இடையிலும் விகடன் அலுவலகத்தில் நாணயம் இதழ் முடிக்கும் பணியில் முனைப்புடன் இருந்தோம். வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே மீண்டும் மழை பயமுறுத்தத் தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் ஷேர்லக் நம் அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால் மாலை ஆறு மணிக்கே நாம் அவருக்கு போன் செய்தோம். நல்லவேளையாக, அவர் போன் தொடர்பில் இருந்தது. ‘‘போன் இணைப்பு விட்டுவிட்டுத்தான் கிடைக்கிறது. மீண்டும் போன் இணைப்பு துண்டிக்கப்படுவதற்குள் தகவல்களை சொல்லிவிடுகிறேன்’’ என்று பரபரத்தார் அவர். இனி நாம் அவரிடம் கேட்ட கேள்வியும் அவர் சொன்ன பதில்களும் அப்படியே தருகிறோம்.

‘‘நீண்ட காலத்துக்குப்பிறகு பங்குச் சந்தைகள் பட்டியலிட செபி அமைப்பு ஒரு வழியாக அனுமதி அளித்திருக்கிறதே?’’

‘‘நீண்ட காலமாக பட்டியலிடும் முயற்சியில் களமிறங்கி இருந்த ஆசியாவின் முதல் பங்குச் சந்தையான பிஎஸ்இ-க்கு இது மிகவும் சந்தோஷ செய்தி. பங்குச் சந்தைகளில் அதன் டிரேடிங் மெம்பர்கள் மற்றும் அவர்களின் அசோசியேட்களின் பங்கு மூலதனம் 49 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையை செபி விதித்துள்ளது. பங்குச் சந்தையில் ஹோல்டிங் உள்ள டிரேடிங் மெம்பர்களின் பங்கு மூலதனம் 45 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பங்குச் சந்தைகளுக்கு செபி ஆலோசனை வழங்கி இருக்கிறது. பங்குச் சந்தைகளில் பொதுமக்களின் பங்கு மூலதனம் (public shareholding) குறைந்தபட்சம் 51% கட்டாயம் இருக்க வேண்டும் என செபி சொல்லி இருக்கிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றி விரைவில் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகள் ஐபிஓ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பங்குச் சந்தைகளும் பட்டியலிட்டபின் சில இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் பட்டியலிடப்பட வாய்ப்புண்டு.’’

‘‘ஏர்டெல் நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டத்துக்காக ரூ.60,000 கோடியை செலவு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறதே!’’

‘‘எல்லாம் ரிலையன்ஸ் ஜியோ-வின் 4ஜி வருகைதான் காரணம். அதன் போட்டிக்கு ஈடுகொடுக்கும் விதமாக அடுத்த மூன்றாண்டுகளில் நெட்வொர்க் விரிவாக்கத்துக்காக ரூ.60,000 கோடியை இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் அறிவித்துள்ளது. இதில் நடப்பு நிதி ஆண்டுக்கான ரூ.16,000 கோடி மூலதனச் செலவும் சேரும். ஏர்டெல் இவ்வளவு அதிக தொகையை முதலீடு செய்ய இருக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு சிறு முதலீட்டாளர்கள் இதன் பங்குகளை உடனடியாக வாங்க வேண்டியதில்லை என்கிறார்கள் அனலிஸ்ட்கள். விரிவாக்கத் திட்டத்துக்கான நிதியை கடன் வாங்குதல் மற்றும் உள் ஆதாரத்தை கொண்டு திரட்ட இருக்கிறது. மேலும், 2015 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் கடன் ரூ.70,777 கோடியாக உள்ளது. விரிவாக்கத்துக்காக இன்னும் கடன் வாங்கும்போது வட்டிச் சுமை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், ஏர்டெல் நிறுவனம், 2016 மார்ச் மாதத்துக்குள் 2.5 லட்சம் கிராமங்களுக்கு மொபைல் பிராட்பாண்ட் சேவையளிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 5 லட்சம் கிராமங்களுக்கு மொபைல் பிராட்பாண்ட் சேவை கொடுக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறது’’.

‘‘ஐடிபிஐ பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறதே?’’

‘‘பொதுத் துறையை சேர்ந்த வங்கியின் 15% பங்குகளை இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஎஃப்சி) வாங்கப் போவதாக தகவல் வெளியானதை அடுத்து ஒரே நாளில் அந்த பங்கின் விலை 8% அதிகரித்தது. இந்த ஐஎஃப்சி, உலக வங்கி குழுமத்தின் ஓர் அங்கமாகும். மத்திய அரசு, இந்த வங்கியில் கொண்டிருக்கும் 76.50 சதவிகித பங்கு மூலதனத்தில் ஒரு பகுதியை எல்ஐசி மற்றும் சிறு முதலீட்டாளர் களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.’’

‘‘திடீரென மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதே?’’

‘‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா அறிக்கையின்படி, மாநில மின்துறை வாரியங்களுக்கு மத்திய அரசு சில சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான மசோதாகள், உட்கட்டமைப்பு செலவீனங்கள், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் போதுமான நிலக்கரி இருப்பு போன்றவற்றில் கூடுதல் சாத்தியக்கூறுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே மின் உற்பத்தி நிறுவனங்களான அதானி பவர், ஜிவிகே பவர் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஆனால், தற்போது மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பினால் அவை ஏற்றம் காண தொடங்கியுள்ளன. நவம்பர் 5-ம் தேதியிலிருந்து இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்து உள்ளதை அடுத்து, இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகபட்சம் 35% வரை ஏற்றம் அடைந்து உள்ளன.’’

‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?’’

‘‘இந்த மூன்று மாதக் காலத்தில் எஃப்ஐஐக்கள் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.27,300 கோடி மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்துள்ளன. எஃப்ஐஐக்களின் முதலீடு ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளில் அதிகமாக இருக்கிறது. சத்பவ் இன்ஜினீயரிங், ஃபெடரல் பேங்க், கிராம்டன் கிரீவ்ஸ், கேஇசி இன்டர்நேஷனல் போன்ற பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு அதிகமாக உள்ளது. இது டிசம்பர் என்பதால் எஃப்ஐஐக்கள் லாபத்தை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர். வருகிற டிசம்பர் 15, 16 தேதிகளில் அமெரிக்க வட்டி விகித ஏற்றம் பற்றியும் தெரிந்துவிடும். இவை சந்தையை சிறிது கீழ் நோக்கி இழுக்கும்.

சென்செக்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் 30000 புள்ளிகளுக்கு புதிய உச்சத்துக்கு போனது, அதிலிருந்து சுமார் 4000 புள்ளிகள் இறக்கம் கண்டிருக்கிறது. அதேநேரத்தில் அடுத்த ஐந்தாண்டு களுக்கு இந்திய பங்குச் சந்தை காளையின் பிடியில் இருக்கும் என பங்கு தரகு நிறுவனமாக ஐஐஎஃப்எல்-ன் ஈக்விட்டி ஹெட் அமர் அம்பானி தெரிவித்துள்ளார். அவர் முதலீட்டுக்கு வி-மார்ட், கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, சிட்டி யூனியன் பேங்க், எய்ஷர் மோட்டார்ஸ் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை கவனிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்’’ என்று பேசிக் கொண்டிருக்கும்போதே ஷேர்லக்கின் செல்போன் லைன் ‘கட்’டானது.