நாணயம் விகடன், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து “வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு” என்கிற தலைப்பில் திண்டுக்கல்லில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

முதலில் பேசிய ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் திருச்சி சரகத்தின் க்ளஸ்டர் ஹெட் வினோத்குமார், “முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடத்தப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு எவ்வளவுதான் விழிப்பு உணர்வு இருந்தாலும் கவர்ச்சிகரமான திட்டங்களில் முதலீடு செய்து நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். பள்ளியில் படிக்கும்போதே நாம் நம் குழந்தைகளுக்கு பொருளாதார மற்றும் நிதி சார்ந்த அறிவை கொடுக்க வேண்டும். பணவீக்கம் குறித்த புரிதல் இருக்கவேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களின் விலையையும் பணவீக்கம் பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றவர், இந்தியாவில் பங்குச்சந்தை முதலீடு பற்றியும், அதன் சாதக, பாதகங்கள் பற்றியும் முதலீட்டுக்கான தேவைகள் மற்றும் அதிலுள்ள வாய்ப்புகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், “பங்குச் சந்தையில் இந்தியர்களின் முதலீடு என்பது உலக அளவில் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமாகவே உள்ளது. அமெரிக்காவில் 70% பேர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்பவர்கள் பங்குகளின் ஏற்ற இறக்கம் குறித்த தேவையில்லாத பயம் இல்லாமல் வரவேண்டும். இல்லையென்றால் வரவேண்டாம். எதிர்ப்பார்ப்பு அதிகமாக, அதிகமாக தவறுகளும் அதிகமாகும்.

சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா, ஐரோப்பா இங்கிலாந்து போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் பொன் முட்டை இடும் வாத்தாக இருந்தது. இப்போது இந்தியாவும் அப்படி உருவாகி உள்ளது. 2035-ல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சரியான தேர்வு, பொறுமை நல்ல லாபம் ஈட்டித் தரும்” என்று கூறி முடித்தார்.

நிறைவாக முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்.

படங்கள்: வீ.சிவக்குமார்