Election bannerElection banner
Published:Updated:

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

இரா.ரூபாவதி

2015 நவம்பர் மாதத்தின் இறுதி நாட்களைச் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இன்னும் பல வருடங்கள் மறக்க மாட்டார்கள். சாதாரணமாக ஆரம்பித்த மழை வெள்ளமாக மாறி, பலரின் வீடுகளை முழுவதுமாக மூழ்கடித்திருக்கிறது. வீட்டில் இருந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், பாத்திரங்கள், துணி, பீரோ, கட்டில், சோஃபா ,சான்றிதழ் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கி வீணாகப் போயிருக்கிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பொருட்கள் அனைத்தையும் வாழ்க்கையில் கஷ்டப் பட்டு சம்பாதித்துதான் வாங்கி இருப்பார்கள். தீபாவளி போனஸ், சம்பள உயர்வு போன்ற சமயங்களில் ஒவ்வொரு பொருளாக வாங்கியி ருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் பண்டிகை கால கொண்டாட் டத்தின் அடையாளமாக வாங்கிய பொருட்கள் ஒருநாள் வெள்ளத்தில் வீணாகிவிட்டது. ஏற்கெனவே வீட்டுக் கடன், கார் கடன் எனப் பல கடன்களை வாங்கி வைத்திருக்கிறார்கள் நடுத்தர மக்கள். அன்றாட வாழ்க்கையின் தேவையை நிறைவேற்றவே மிகவும் கஷ்டப்படுகிற இந்த நிலையில், இனி புதிதாக இந்தப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மிகவும் கஷ்டப்படத்தான் வேண்டும்.

இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலை யாருக்கு, எப்போது வரும் என்பது தெரியாது. ஆனால், அந்தச் சூழ்நிலை உருவானால் அதிலிருந்து காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள எப்படி தயாராவது என லேடர்செவன் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம். விளக்கமாகச் சொன்னார் அவர்.

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

எதெல்லாம் அவசர காலம்!

‘‘எதிர்பாராத நேரத்தில் நிகழும் சில சம்பவங்களால் நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுவதற்கான வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலைகள் அனைத்துமே நமக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அவசர காலம்தான். அதாவது, திடீர் வேலை இழப்பு, குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக்குறைவு, இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படுவது போன்றவை.  சிலருக்கு நெருங்கிய சொந்தங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த சமயத்தில் உதவி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதுவும் ஒரு மாதிரியான அவசர கால சூழ்நிலைதான்.

ஏன் அவசரகால நிதி?

ஒருவருக்கு திடீர் வேலை இழப்பு ஏற்படும் போது குடும்பத்தின் செலவுகளை சமாளிப் பதற்கு பணம்

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

தேவை. அதேபோல, குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் ஏதாவது நோய்வாய்ப்பட்டால் அந்த சமயத்தில் குடும்ப செலவு மற்றும் மருத்துவ செலவு இரண்டையும் சேர்த்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இன்ஷூ ரன்ஸ் பாலிசியையும் குறைந்தபட்ச கவரேஜூக்குதான் வைத்திருப்போம். அதற்கு மேல் ஆகும் செலவுக்கு நிச்சயம் பணம் தேவை.

அடுத்தது, இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டு உடைமைகள் அனைத்தையும் இழக்கும் தருணங்களை சமாளித்து மீண்டும் இயல்பு வாழ்க்கை நடத்துவதற்கு பணம் தேவை. 

இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு குறிப்பிட்ட அளவு தொகையை அவசரகால ஃபண்டாக வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலையில் யாரிடமும் கடன் வாங்கவும் முடியாது. ஒருவேளை நீங்கள் கடன் கேட்டு யாரும் உதவி செய்யவில்லை எனில், அது வீண் சங்கடத்தையே உண்டாக்கும்.

எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?

எதெல்லாம் அவசர காலம் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதாவது, மழை, வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்கள் தங்களின் வீட்டை முழுவதுமாக சீரமைக்க வேண்டியிருக்கும்.  எனவே, எந்தச் சூழ்நிலையிலும் தற்போது உள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். அதாவது, உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் மீண்டும் புதிதாக வாங்க வேண்டுமெனில், எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

இந்தத் தொகை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். வாழ்க்கைத் தரத்துக்கேற்ப அவசர கால ஃபண்டை வைத்திருப்பது முக்கியம். ஒவ்வொருவரும் குறைந்தபட்சமாக 2 லட்சம் ரூபாயாவது வைத்திருப்பது அவசியம்.

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

எப்படிச் சேமிப்பது?

மாத சம்பளம் வாங்குகிறவர்களின் வருமானத்தில் முதல் சேமிப்பு அவசர கால ஃபண்டுக்கானதாக இருக்க வேண்டும். இந்த ஃபண்டை உருவாக்கியபிறகுதான் வேறு இலக்குகளுக்காக முதலீடு செய்வது என இலக்கு வைத்துக்கொள்வது நல்லது. அவசர காலத்தில் எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைத் தீர்மானித்தபிறகு, அந்தத் தொகையை எத்தனை மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.

அதாவது, 2 லட்சம் ரூபாய் அவசர கால ஃபண்ட் வேண்டும் எனில் மாதம் ரூ.10 ஆயிரம் என முதலீடு செய்யலாம். இப்படிச் செய்தால், அடுத்த 20 மாதங்களில் அவசர கால ஃபண்ட் உருவாகிவிடும். குறைந்தபட்சம் உங்களின் சம்பளத்தில் 10 சதவிகித தொகையை அவசர கால ஃபண்டுக்காக ஒதுக்கலாம்.

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

எங்கு முதலீடு செய்வது?

அவசர கால ஃபண்டை அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். ஏனெனில் எப்போது அவசர கால தேவை வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் எளிதில் பணத்தை திரும்ப எடுக்கக்கூடிய வகையில் உள்ள முதலீடுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

ஆர் டி, ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளில் நினைத்த நேரத்தில் பணத்தை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். இதில் சில முதலீட்டில் வட்டி இழப்பு இருந்தாலும், அசல் தொகை அப்படியே இருக்கும்.

அவசரகால ஃபண்டில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்று ரிஸ்க் எடுக்கக் கூடாது. ஒருமுறை அவசர கால நிதியை உருவாக்கியபின், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. பணவீக்கத்தின் அளவுக்கேற்ப குறிப்பிட்ட அளவு பணத்தை அதில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம்.

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

அவசியம் வரவில்லை எனில்..?

அவசர கால நிதியை உருவாக்கியபின் அதை பயன்படுத்தும் சூழ்நிலை வரவில்லை எனில், அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்ய நினைக்கக் கூடாது. நாம் சேர்த்த அவசர கால நிதி வாழ்க்கை முழுவதுமேகூட தேவைப்படாமல் போகலாம். அப்போதும் அந்தப் பணத்தை எடுக்கக் கூடாது. இந்தப் பணத்தை உங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அவர்கள் தங்களுக்கான அவசரகால நிதியை சேர்க்க இந்த பணம் நிச்சயம் உதவும். இதனால் அவர்களின் சுமை ஓரளவுக்குக் குறையும்”என்றார்.

எமர்ஜென்சி ஃபண்ட் முக்கியம் என்பதை இனியாவது நாம் உணர்வோம்!

படங்கள்: ப.சரவணகுமார்

கடன் தர காத்திருக்கும் நிறுவனங்கள்... உஷார், உஷார்!

இப்போதெல்லாம் சென்னையிலுள்ள பலருக்கும் ஏதேதோ நிறுவனங்களிடமிருந்து போன் வருகிறது. ‘‘சார், வெள்ளம் பாதிக்கப்பட்ட ஏரியாவுல உங்க வீடு இருக்கு. அநேகமா உங்க வீட்ல வெள்ள நீர் புகுந்து, உங்க டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் டேமேஜ் ஆயிருக்கும். இந்தப் பொருட்களை நீங்க வாங்குறதா இருந்தா சொல்லுங்க, உங்களுக்கு நாங்க வட்டி இல்லாமல் கடன் தர்றோம்’’ என்று கேட்கிறார்களாம் சில நிதி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள். ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் முகவரியின் அடிப்படையில் அந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து இப்படி போன் செய்து கேட்கிறார்களாம்.

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

இன்னும் சில தனியார் நிதி நிறுவனங்கள், வெள்ளத்தினால் பாதிப்பா, கவலையை விடுங்க. நாங்க பர்சனல் லோன் தரத் தயார் என்று எஸ்எம்எஸ் அனுப்புகிறார்களாம். வெள்ளம் பாதிப்பினால் ஏற்கெனவே நிதிச் சிக்கலில் இருப்பவர்கள், இந்தக் கடன் வலையில் எளிதில் சிக்கிவிட வாய்ப்புண்டு. இந்த நிதி நிறுவனங்கள் ஜீரோ பர்சன்ட் இன்ட்ரஸ்ட், வட்டியே இல்லை என்று சொன்னாலும், ஈஸி இ.எம்.ஐ. என்கிற போர்வையில் வட்டிக்கும் அதிகமான பணத்தை நம்மிடமிருந்து மறைமுகமாக கறந்துவிடுவார்கள். இதுமாதிரியான கடன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், வட்டி உள்பட அத்தனை விஷயங்களையும் நன்கு ஆராய்ந்தபின் முடிவெடுப்பது நல்லது. எனவே, உஷார், உஷார். 

ஹவுஸ் ஹோல்டர் பாலிசி அவசியம்!

சென்னை வெள்ளத்துக்குப்பின் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி குறித்த விழிப்பு உணர்வு

வெள்ளத்தால் பாதிப்பு... கைகொடுக்கும் எமர்ஜென்சி ஃபண்ட்!

அநேகமானவர்களிடம் இப்போது உருவாக ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே வெள்ளம் பாதித்த பகுதியில் இருப்பவர்கள் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜெ.ஜெயந்தியிடம் கேட்டோம்.

“வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி என்பதற்காக பிரீமியம் அதிகரிக்காது. இதுபோன்ற காரணங்களினால் தனிநபர்களுக்கு நாங்கள் பிரீமியத்தை அதிகரிக்க மாட்டோம். இப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மீண்டும் எப்போது பாதிப்புக்குள்ளாகும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இந்த பாலிசி தேவைப்படுபவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசிக்கான பிரீமியம் சில ஆயிரங்கள்தான். இந்த சிறிய அளவிலான பிரிமீயத்தில், இழப்பீடு கிடைக்கும் என்பதே இந்த பாலிசியின் சிறப்பு. 

இந்த பாலிசி எடுக்கும்போது உங்கள் வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளன, அவற்றின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை பாலிசியில் குறிப்பிட்டு பாலிசி எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் இந்த பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்றார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு