‘‘ஹாப்பி நியூ ஃபைனான்ஷியல் இயர்’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

‘‘இந்த நிதி ஆண்டில் உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் மதி நலமும் நிதி நலமும் கிடைக்கட்டும்’’ என்று வாழ்த்தினார். அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

‘‘நிஃப்டி பார்மா இண்டெக்ஸ் 52 வார சரிவை அடைந்திருக்கிறதே?’’ என்றோம் சற்று சோகமாக.

‘‘லூபின், சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், கிளென்மார்க் பார்மா, அரபிந்தோ பார்மா உள்ளிட்ட பல பார்மா நிறுவனப் பங்குகள் விலை குறைந்ததை அடுத்து நிஃப்டி பார்மா இண்டெக்ஸும் அதன் 52 வார குறைவை அடைந்திருக்கிறது. லூபின் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் அமெரிக்கா வின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சோதனை நடத்தியது. சோதனை குறித்த முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையிலும் அதன் விலை குறைந்துள்ளது. மற்ற பார்மா நிறுவனங்களை விட அதிக பட்சமாக 14% வரை குறைந்து ரூ.1280-க்கு வர்த்தகமானது. பார்மா பங்குகள் குறுகிய காலத்தில் விலை சரிவை சந்தித்தாலும் நீண்ட காலத்தில் அவை லாபம் தரும் முதலீடாக இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’ என்றார்.

‘‘டாடா ஸ்டீல் பங்கின் விலை புதன்கிழமை அன்று ஒரே நாளில் 7% அதிகரித்துள்ளதே?’’ என்றோம் ஆச்சரியத்துடன்.

‘‘இங்கிலாந்தில் இருக்கும் அதன் ஸ்டீல் பிசினஸிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.மேலும், கடந்த ஒரு மாதக் காலத்தில் இந்தப் பங்கின் விலை சுமார் 25% அதிகரித்துள்ளது. 2016-17 பட்ஜெட்டில் இன்ஃப்ரா துறைக்கு அதிக திட்டங்களை அறிவித்திருப்பது, விலை மலிவான ஸ்டீல் இறக்குமதியைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச இறக்குமதி விலையை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

ஆனால், கோரஸ் நிறுவனத்தை வாங்கியதால் பெரும் கடன் சுமை அந்த நிறுவனத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன் விளைவு டாடா ஸ்டீல் மீது என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘நம் ஊர் ஈகுடாஸ் ஹோல்டிங்ஸ் ரூ.2,000 கோடிக்கு ஐபிஓ வருகிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘சென்னையைச் சேர்ந்த ஈகுடாஸ் ஹோல்டிங்ஸ் (Equitas Holdings) நிறுவனம், கிராமம் மற்றும் சிறு கிராமங்களை சேர்ந்த வர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை அளித்து வருகிறது. இந்த நிறுவனம், அதன் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக ரூ.2,100 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்ய (ஐபிஓ) இருக்கிறது. இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்ஷூரன்ஸ், ஐசிஐசிஐ புரூடென்சியல் போன்ற நிறுவனங்கள் தலா 2.5% பங்குகளை (மொத்தம் சுமார் ரூ.300 கோடி) வாங்கிக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஐபிஓ ஏப்ரல் 5-ம் தேதி ஆரம்பிக்கிறது. ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலை பட்டை ரூ.109 - 110-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,700 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது’’ என்று சொன்னார்.

‘‘எட்டு நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தை பிஎஸ்இ நிறுத்த உள்ளதே?’’ என்றோம் அதிர்ந்தபடி.

‘‘பங்குச் சந்தையில் பட்டிய லிடும் நிபந்தனைகளை சரிவர பின்பற்றத் தவறியதால், எட்டு நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தை ஏப்ரல் 20-ம் தேதி முதல் நிறுத்த இருக்கிறது, பிஎஸ்இ. அவிவா இண்டஸ்ட்ரீஸ், பயோ கிரீன் பேப்பர்ஸ், கனிகா இன்ஃபோடெக், மாதுர் கேபிட்டல் அண்ட் ஃபைனான்ஸ், மகேஷ் அக்ரிகல்சர் இம்ப்ளிமென்ட்ஸ் அண்ட் ஸ்டீல் ஃபோர்ஜ், சன்டோவின் கார்ப், விப்ரோஸ் ஆர்கானிக்ஸ் மற்றும் விஸ்வாமித்ர ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிறுவனங்களின் புரமோட்டர் களின் பங்குகளை உடனடியாக முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்குள் பிஎஸ்இ சொன்ன நிபந்தனைகளை, ஏற்றுக்கொண்டு செயல் படுத்தினால், இந்த நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் தடையில்லாமல் தொடரும். இந்தப் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் உஷாராக இருந்து வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்படுவதற்குள் விற்றுவிட்டு வந்துவிடுவது நல்லது’’ என்றார்.

‘‘ஏப்ரல் 5-ம் தேதி நடக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் வட்டி குறைக்கப்படுமா?’’ என்று வினவினோம்.

‘‘குறைந்தபட்சம் 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகித குறைப்பு நம்பிக்கையில்தான் ஷேர் டிரேடர்கள் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி (மார்ச் 31) அன்று ஏப்ரல் சீரிஸ்-க்கு கான்ட்ராக்ட் களை பாசிட்டிவ்-ஆக கேரி பார்வேர்ட் செய்திருக்கிறார்கள்.ரோலோவர் 74% அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இது பாசிட்டிவ்வாக பார்க்கப் படுகிறது. எனினும், சர்வதேசக் காரணங்களான கமாடிட்டி விலை அதிகரிப்பு, அமெரிக்காவில் இப்போதைக்கு வட்டி விகித உயர்வு இல்லை போன்றவையும் இருக்கின்றன’’என்று உஷார் படுத்தினார்.

‘‘முடிந்த 2015-16-ம் நிதி ஆண்டில் பங்குச் சந்தை முதலீடு எப்படி இருக்கிறது?’’ என்று நமது கடைசி கேள்வியைக் கேட்டோம்.

‘‘முடிந்த 2015-16 -ம் நிதி ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்ஐஐகள்) 220 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றதால், சென்செக்ஸ் புள்ளிகள் 9.36% இறக்கம் கண்டது. இதே காலத்தில் நிஃப்டி 8.86% இறக்கம் கண்டு உள்ளது. இது கடந்த ஐந்தாண்டு களில் மிகவும் மோசமான வருமானம் ஆகும்.

ஆனால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 2015-16ம் நிதி ஆண்டில் நிகர அளவில் ரூ.80,433 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருக்கிறது.

ஆனால், கடந்த மார்ச்-ல் மட்டும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.8,053 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. மார்ச் மாதம் என்பதால், இஎல்எஸ்எஸ் மற்றும் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் ஃபண்டில் டிவிடெண்ட் கொடுப்பதற்காக அதிக பங்குகள் விற்கப்பட்டதும் இதற்கு காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அதே நேரத்தில், மார்ச் -ல் மட்டும் அந்நிய நிதி நிறுவனங்கள் சுமார் ரூ.21,000 கோடி அளவுக்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இதனால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் 10% உயர்வு கண்டன. 2013 பிப்ரவரி மாதத்தில் ரூ. 22,122 கோடி அந்நிய முதலீடு இருந்தது. அதற்குபிறகு இப்போது தான் அந்நிய முதலீடு இந்த உச்சத்தை அடைந்திருக்கிறது’’ என்றவர் கிளம்பத் தயாரானார்.

‘‘புதிய நிதி ஆண்டில் (2106-17) கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...?’’ என்று இழுத்தோம்.

‘‘என் வேலையைத்தான் ஏ.கே.பிரபாகர் செய்து விட்டாரே!’’ என்று சொல்லி விட்டு, வீட்டுக் கிளம்பினார்.