இந்தியப் பங்குச் சந்தை நீண்ட நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,

அடுத்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது. இந்த பின்னணியில், சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்று ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘நிஃப்டி புள்ளிகள் 7700 என்கிற நிலையில் இருக்கிறது. சந்தை இதற்கு மேல் பெரிதாக ஏறும் என்று சொல்வதற்கு இல்லை. சந்தை மிக குறுகிய காலத்தில் 7830 வரைக்கும் ஏறலாம். அதைத் தாண்டி இப்போதைக்கு ஏற வாய்ப்பு இல்லை. நடப்பு 2016-ம் ஆண்டில் நிஃப்டி அதிகபட்ச புள்ளிகள் 7972-ஆக உள்ளது. அதனை தாண்ட வாய்ப்பு இல்லை. சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. 7680-க்கு கீழே இறங்கினால், மே மாதத்தில் 6800 புள்ளிகளுக்கு இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஜூன், ஜூலையில் நிஃப்டி புள்ளிகள் 6300-க்கு இறங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

‘‘சந்தையில் இப்போது நடப்பது தற்காலிக ஏற்றம்தான். வெளிநாட்டு வர்த்தகக் கடன் (இசிபி), வட்டி விகித உயர்வு விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தால் லிக்விடிட்டி சார்ந்துதான் சந்தை ஏறி இருக்கிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் ஜெனட் யெலன், வட்டி விகித உயர்வை மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்வோம் என்று புதன்கிழமை குறிப்பிட்டார். இதன் காரணமாக, அன்றைக்கு மட்டும் சென்செக்ஸ் 438 புள்ளிகளும் நிஃப்டி 138 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் எஃப்ஐஐக்களின் முதலீடும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டுமே அவர்கள் சுமார் ரூ.1,440 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருக்கிறார்கள்.

எஃப்ஐஐக்கள் முதலீடு, மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு அதிகரித்து வருகிறது. அவர்கள் மார்ச் மாதத்தில் ரூ.22,100 கோடி மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். சந்தை ஏறுவதற்கான வலுவான அடிப்படை (ஃபண்டமென்டல்) காரணங்கள் இல்லை. மார்ச் காலாண்டில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி சராசரியாக 2-3 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிஃப்டி 12 மாத டிரைலிங் பி.இ விகிதம் 20.46 சதவிகிதமாக உள்ளது. இதன்படி பார்த்தால், சந்தை மிகவும் எக்ஸ்பென்சிவ்-ஆக இருக்கிறது. அதாவது, நிறுவனப் பங்குகளின் விலை அதிகமாக, பிரீமியத்தில் வர்த்தகமாகி வருகிறது.

ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல்படி பார்க்கும்போது, இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய கரெக்ஷன் வரவே அதிக வாய்ப்பு உள்ளது” என்றவரிடம், இது போன்ற சூழ்நிலையில் எந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டோம்.

‘‘தற்போதைய நிலையில், அதிக லாப வரம்பு உள்ள நிறுவனங்கள், கடன் இல்லா நிறுவனங்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக லாபம் ஈட்டி வரும் நிறுவனங்கள், பங்கு மூலதனம் மீதான வருமானம் (ஆர்ஓஇ) 15 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிற நிறுவனப் பங்குகளாக பார்த்து முதலீடு செய்வது பாதுகாப்பாகவும், லாபகரமாக வும் இருக்கும். அந்த வகையில், நல்ல நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பிரச்னைகளில் சிக்கி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த வகையில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், கெயில், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

மேலும், மத்திய அரசு வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பட்ஜெட்டிலும்

அதற்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக பருவ மழை பொய்த்துள்ள நிலையில், இந்த வருடம் நன்றாக மழை பெய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ், கொரமன்டல் இன்டர்நேஷனல், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யுனைடெட் பாஸ்பரஸ், குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் போன்ற பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம்.
உள்கட்டமைப்பு (இன்ஃப்ரா) துறைக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளதால், சிமென்ட் துறை பங்குகளையும் கவனிக்கலாம். குறிப்பாக, ராம்கோ சிமென்ட்ஸ், அம்புஜா சிமென்ட், ஏசிசி, அல்ட்ரா டெக் சிமென்ட் போன்றவற்றை முதலீட்டுக்கு ஆலோசிக்கலாம்.

சந்தை நன்றாக இறங்கும்போது முதலீடு செய்ய, பங்குச் சந்தை முதலீட்டு தொகையில் சுமார் 40 சதவிகிதத்தை ரொக்கமாக வைத்திருப்பது நல்லது.

ஏப்ரல் 5-ம் தேதி கூட்டத்தில் ஆர்பிஐ வட்டியை 0.25% குறைக்கக்கூடும். 0.5% குறைத்தாலும்கூட அதனால் சந்தையில் பெரிய மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. வரும் வாரங்களில் மார்ச் காலாண்டு முடிவுகள் வரவிருக்கின்றன. முடிவுகள் நெகட்டிவ்-ஆக இருந்தால், சந்தை இறங்கும். இந்த முறை சந்தை இறக்கம் என்பது வேகமாக இருக்கும். அப்போது மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை இறக்கம் கணிசமாக இருக்கும்’’ என்றார்.