சில டிரேடர்கள் தங்கள் மாத சம்பளத்துடன் தினப்படி டிரேடிங்கில் சம்பாதிக்கும் தொகையை வருமானமாக

எடுத்து பட்ஜெட் போடுகிறார்கள். இந்த மாதம் கிடைத்தது அடுத்த மாதமும் கிடைக்கும் என்று அசாத்தியமாக நம்புகிறார்கள். டிரேடிங்கில் தொடர் வெற்றி என்பது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், அதற்கு நீங்கள் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். எப்படி?

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என எல்லாவிதமான கால கட்டத்திலும் டிரேடிங் என்பது அதிக ரிஸ்க் உடைய ஒரு காரியம்தான். இந்த ரிஸ்க்கான விஷயத்தில் நடக்கும் டிரேடர்களின் வாழ்க்கைப் பயணத்தின் மூன்று படிநிலைகளைப் பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புரியும்.

சந்தையில் டிரேடிங் செய்யலாம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் சந்தைக்குள் வருகின்றனர். டிரேடர்கள் பலரும் தங்களுடைய டிரேடிங் பயணத்தில் ஆரம்ப நிலையில் சந்தையின் விலை நிர்ணயச் செயல்பாடுகள் புரியாமலும், சரியான ஸ்ட்ராட்டஜிகளை வடிவமைத்து செயல்படுத்தத் தெரியாமலும் பல தவறுகளை செய்கின்றனர். டிரேடிங்கில் தவறுகள் என்றால் நஷ்டம்தானே! நஷ்டத்தைப் பார்த்து சிலர் இந்த முதல் படி நிலையிலேயே டிரேடிங்கை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

முதல் நிலையில் பெரிய தவறுகளை செய்யாமல் ஓரளவு சந்தையோடு இணைந்து செயல்பட கற்றுக் கொண்டவர்கள் அடுத்த நிலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில், சந்தையில் சற்று வெற்றிகரமாக டிரேடிங் செய்ய முடிகிறது. இப்போது புதிய டிரேடராக சந்தைக்குள் வந்த நபர்கள் அனுபவத்துடன் இருக்கும் டிரேடர்களாக மாறுகின்றனர். இவர்களுடைய டிரேடிங் உத்திகள் ஓரளவுக்கு தொடர்ந்து ஜெயிக்கிறது. ஒரு டிரேடரின் வெற்றியானது மற்றவரின் தோல்வி; அதாவது ஒருவரின் லாபம், இன்னொரு வரின் நஷ்டம். நாளடைவில் சந்தையும் வேகமாக வளர்கிறது. புதிய நபர்கள், புதிய உத்திகள் என கடுமையான போட்டி வரு கிறது. இதனாலேயே ஏற்கெனவே இருக்கும் அனுபவமுள்ள நபர்கள் பெரிய லாபம் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அல்லது நஷ்டத்தை சந்திக்கும்படி சூழ்நிலை மாறிவிடுகிறது.

இந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே இரண்டாம் நிலையில் இருந்த டிரேடர்களை தவிர்த்து, புதிதாக இரண்டாம் நிலைக்கு வந்திருக்கும் டிரேடர்கள் லாபம் பார்க்கின்றனர். ஏற்கெனவே இரண்டாம் நிலையில் இருந்த டிரேடர்கள் சிலர் சந்தை நமக்கு சரிப்பட்டு வராது என்று விலகுகின்றனர்.

இது மூன்றாவது நிலை. இவர்கள் சொல்வது என்ன? சந்தையில் டிரேடிங் செய்வது முன்பு போல் இல்லை என்ற வாசகத்தைத்தான். இவர்கள் முதல் படி நிலையிலிருந்து இரண்டாம் படிநிலைக்கு வந்தபோது, சந்தை மாறிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது சந்தை அவர்களுக்கு பிடிபட்டது. காரணம், வளைந்துகொடுக்க தயாராக இருந்த சமயம் அல்லவா அது?

என்றைக்குமே சந்தை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பேயில்லை என்பதுதான் நிரந்தரமான உண்மை. காரணம், சந்தை என்பதே அன்றாட விலை மாறுதல்களைக் கொண்டிருக்கும் இடம்தான். விலை மாறுதலில் லாபம் பார்க்கும் கூட்டமே டிரேடர்கள் கூட்டம். பல்வேறு விதமான பலம், பலகீனம், யூகம் மற்றும் நோக்கம் கொண்ட டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையில் பங்கெடுப்பதனால்தான் இந்த விலை மாற்றம் வருகிறது. அன்றாட விலை மாறுதல்களைக் கொண்டிருக்கும் சந்தை காலப்போக்கில் தொடர்ச்சி யாக வியாபார உத்திகளிலும் மாறுதல்களை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு களமாகும். இந்த வித வியாபார உத்திகளில் தொடர் மாறுதல்கள் சந்தையில் வராவிட்டால் ஒரு சில டிரேடர்கள் மட்டுமே சந்தையில் நிரந்தரமாக கொடிகட்டிப் பறக்கமுடியும்.

டிரேடர்கள் கூட்டம் என்பது சந்தையில் தொடர்ந்து மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வல்லமை கொண்டது. சந்தையின் விலை நிர்ணய செயல்பாட்டில் ஒவ்வொரு மாற்றத்தினையும் கொண்டுவருவது டிரேடர்கள் தான். அதனாலேயே டிரேடர் ஒருவர் வெற்றிகரமாக தொடர்ந்து செயல்பட மாறும் சந்தையின் போக்குக்கேற்ப (ஏனைய டிரேடர்களின் போக்குக்கேற்ப) தன்னுடைய ஸ்ட்ராட்டஜியை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஸ்ட்ராட்டஜியை அமைக்கும் போது ஒவ்வொரு டிரேடரும் தன்னிடம் இருக்கும் தனித்துவத் துக்கு ஏற்ப அதை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படி மாற்றிமைக்கத் தவறி னால் காலம் பறந்து போய்விடும். காசு மட்டும் பார்க்கவே முடியாது.

ஆக ஸ்ட்ராட்டஜியை கட்டாயமாக மாற்றி அமைத்தால் தான் லாபம் பார்க்க முடியும். டிரேடிங்கை பழகும்போது இந்த வகை மாறுதல்களை ஒவ்வொரு டிரேடரும் சுலபமாகச் செய்து கொண்டுவிடுவார். ஏனென்றால், அந்தச் சூழலில் நாம் பழகுநர். நமக்குத் தெரிந்த அல்லது நாம் செய்யும் விஷயங்களை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணம் ஒவ்வொரு டிரேடரின் மனதிலும் இருக்கும். அதே அவர்கள் ஓரளவு டிரேடிங்கில் செட்டிலான பின்னர் தங்களுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது கொஞ்சம் கடினம். ஏனென்றால், நம்முடைய ஸ்ட்ராட்டஜிதான் வெற்றி பெறுகிறதே என்ற டிரேடர்களின் மனதின் எண்ணம்தான். நம்முடைய ஸ்ட்ராட்டஜி தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்றால் தொடர்ந்து யாரோ தோல்வி அடைகிறார்கள்.

லாபத்தினால் நாம் மாறா விட்டாலும் அவர்கள் அடையும் நஷ்டத்தினால் அவர்கள் அவர்களுடைய ஸ்ட்ராட் டஜியை மாற்றிக்கொள்வார்கள் தானே! அப்படி அவர்கள் மாறியபிறகும் நாம் நம்முடைய பழைய வழிமுறைகளையே கையாண்டால் என்னவாகும்? நஷ்டம்தான் வரும்.

சிறந்த டிரேடராக தொடர்ந்து செயலாற்ற மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை வேதவாக்காக கொண்டு செயல்படவேண்டும். இன்றைய சூழலில் நாம் டிரேட் செய்த விதம் நமக்கு வெற்றியை தந்தது. நாளைய சூழல் இன்றைய சூழலைப் போல் இருக்கவே இருக்காது என்பதை மனதில் இருத்தியே வியாபாரம் செய்யும் டிரேடரே தொடர்ந்து வெற்றி பெறுகிற டிரேடராகிறார். வெற்றிகரமான டிரேடராக மாற திறமை வேண்டும். தொடர்ந்து அந்த வெற்றியைப் பெற அந்தத் திறமையில் தேவையான மாற்றங்களை தொடர்ந்து செய்துகொண்டேவர வேண்டியிருக்கும்.

எல்லாம் நன்றாகத்தானே போகிறது. நன்றாகப் போவதை மாற்றியமைத்து அதில் சிக்கல் வந்துவிட்டால் என்ன செய்வது என நீங்கள் கேட்கலாம். மாற்ற வேண்டும் என்ற சூழல் கண் முன்னே சுலபமாகத் தெரியும். நஷ்டமடைந்த பின்பே தெரிய வேண்டும் என்பதில்லை. உதாரணத்துக்கு நீங்கள் வாகனம் ஒன்றை ஓட்டுகிறீர்கள். ட்ராபிக் மிகுந்த ஒரு இடத்தில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேகமாக கட்-அடித்து டாப்கியருக்கு மாறி, நெரிசலில் இருந்து தப்பிக்கிறீர்கள். நீங்கள் எடுத்த முடிவு சரியாக செயல்படுத்தப்பட்டது என்றாலும் கொஞ்சம் பக்கென்ற பயம் மனத்தைக் கவ்வும் இல்லையா? அதுபோன்ற பயம் நீங்கள் டிரேடிங் செய்யும்போது தோன்றினால் அது மாற்றத்துக்கு உண்டான தருணம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

வேகமான வளர்ச்சியையும் அதிக வாலட்டைலிட்டியையும் கொண்ட சந்தையில் இந்த பயம் அடிக்கடி வரும். பயத்தைக் கண்டறிந்து மாற்றத்துக்கு உண்டான முயற்சிகளைச் செய்தால், நஷ்டத்தை வரவிடாமல் தடுக்கலாம். பெரும்பாலான டிரேடர்கள் இதனைச் செய்வதில்லை. பல முறை பக்கென்ற பயம் வந்த டிரேட்களை செய்துவிட்டு, பின்னர் சில முறை நஷ்டம் கையில் வந்தபின்னரே மாற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறார் கள். இந்த நிலைக்கு ஒரு வெற்றிகர மான டிரேடர் வரவே கூடாது. நஷ்டம் பண்ணிய பின்னர் மாற்றம் என்பது ஒரு அதீத பயத்தை கொடுக்கும். ஏற்கெனவே நமக்கு பழகிய முறையில் டிரேடிங் செய்தே நஷ்டம். இதில் புதியதாய் ஒன்றை முயற்சி செய்யவேண்டுமா என்ற பயம் சுலபத்தில் டிரேடர்களை மாறவிடாது.

நஷ்டத்தில் இருக்கும்போது நம் நடவடிக்கையை மாற்றிக்கொள்வது என்பது சுலபமல்ல என்பதை டிரேடர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வெற்றி பெற்ற உத்தியை கொஞ்ச காலம் தொடர்ந்து செய்து பார்க்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாய் தொடர்ந்து செய்துபார்க்கலாம். ஆனால், எதிராளி தொடர்ந்து அதே மாதிரியான ஸ்ட்ராட்டஜியுடன் செயல்பட மாட்டார் என்பதையும் மனதில் கொண்டு அவர் மாறுவதற்கான முகாந்திரமும் வாய்ப்பும் வழியும் இருக்கிறதா என்பதையும் தொடர்ந்து டிரேடர்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதில் நம் ஸ்ட்ராட்டஜி எப்போதும் தோற் காது என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருந்தால் நிச்சயம் நஷ்டம்தான்.

டிரேடிங்கில் லாபம் சம்பாதிக்க சந்தை மிகப் பெரியது என்பதை உணருங்கள். சந்தை யின் மாற்றத்தை உணர்ந்து கொள்ள உங்களுடைய பார்வை யின் கோணம் மாற வேண்டும். தொடர்ந்து ஒரே கோணத்தில் நீங்கள் சந்தையை பார்த்துவந்தால், சந்தையின் உள்ளே மெள்ள மெள்ள நடந்துவரும் மாறுதல் களை உணர்வது கடினம். சூப்பர் டிரேடர்கள் அனைவருமே தாங்கள் செயல்படும் விதத்தில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, அதை ஒரு பழக்க மாகவே வைத்திருக்கின்றனர். அதனாலேயே தொடர்ந்து அவர்கள் வெற்றிகரமான டிரேடராகவும் இருக்கின்றனர்.

4,000 கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றம்!

நியூ வேர்ல்டு வெல்த் என்கிற அமைப்பு உலக அளவில் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து 2015-ம் ஆண்டில் மட்டும் 4,000 பணக்காரர்கள் வெளியேறியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.இவ்வாறு நாட்டை விட்டு பணக்காரர்கள் வெளியேறும் நாடுகளில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாம். இந்தப் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், இத்தாலி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பணக்காரர்கள் சென்று வசிக்க விரும்பும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இதற்கடுத்து, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.