Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

Published:Updated:

உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அனலிஸ்ட்டை தட்டி எழுப்புங்கள்! -28

நீங்களும் அனலிஸ்ட்தான்!


கடந்த  இரண்டு வாரங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டைரக்ஷனல் சிஸ்டத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம். கணக்குவழக்குகளை ஏற்கெனவே விலாவாரியாகப் பார்த்தாயிற்று. இந்த சிஸ்டம் எதை வைத்துக் கொண்டு எதைக் காட்டுகிறது என்பதை இப்போது பார்ப்போம். அதற்கு முன் நீங்கள் கட்டாயம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம், இந்த இண்டிகேட்டர் டிரெண்டை ஃபாலோ செய்து டிரேடிங் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு மட்டும் என்பதைத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
நீங்களும் அனலிஸ்ட்தான்!
ந்த சிஸ்டம் சந்தையில் ஒரு பங்கின் விலை நேற்றைய விலை ரேஞ்சிற்கப்பால் கீழேயும் மேலேயும் எந்த அளவிற்குச் சென்றிருக்கிறது என்பதை வைத்து சந்தையை கணக்கிட முயற்சிக்கிறது. ஒரு நாள் டிரேடிங்கின்போது நேற்றைய விலை ரேஞ்சிற்குக் கீழே விலைகள் எந்த அளவிற்கு போனது, நேற்றைய விலை ரேஞ்சிற்கு மேலே விலைகள் எந்த அளவிற்குப் போனது என்பதை வைத்துக் கொண்டு சந்தையில் செயல்படும் பெரும்பான்மை கூட்டம் காளைத்தனத்துடன் செயல்படுகிறதா அல்லது கரடித்தனத்துடன் செயல் படுகிறதா என்பதை (காளை மற்றும் கரடிகளின் செயல் பாட்டு வேகத்தினை) அளக்க முற்படுகிறது. இன்றைய ஹை நேற்றைய ஹை-ஐவிட அதிகமாக இருந்தால், கூட்டத்தின் காளைத்தனம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இன்றைய லோ நேற்றைய லோ-வைவிட குறைவாக இருந்தால், கூட்டத்தின் கரடித்தனம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இது சின்னப் பிள்ளைக்குகூட தெரியுமே என்கிறீர்களா?! ஆனால், ரியல் மார்க்கெட்டில் ஒரே நாளில் சந்தை நேற்றைய லோ-வைவிட கீழேயும் நேற்றைய ஹை-ஐவிட மேலேயும் அல்லவா போய்விடுகிறது. இதுபோல் ஒரே நாளில் கீழேயும் மேலேயும் போகும்போது, ஒரே நாளின் மூவ்களை வைத்தும் சந்தையின் போக்கை கணிப்பது சிரமமாகிறது. ஒரே நாளின் மூவ்களை வைத்து சந்தையை கணிப்பதைவிட தொடர்ந்து பல நாட்கள் சந்தையிலிருக்கும் கூட்டம், விலைகளை எவ்வாறு எடுத்துச் சென்றுள்ளது என்பதைக் கணக்கிடத்தான் சென்ற வாரம் போட்ட கணக்குகளும் ஆவரேஜ்களும் உதவுகின்றன.

'பாசிட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் இண்டிகேட்டர் வேல்யூ’களை வைத்துப் போடப்படும் லைனின் பெயர் பாசிட்டிவ் டைரக்ஷனல் லைன் (கொடுக்கப்பட்டிருக்கும் சார்ட்டில் நீல நிற லைன்). நெகட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் இண்டிகேட்டர் வேல்யூக்களை வைத்து போடப்படும் லைனின் பெயர் நெகட்டிவ் டைரக்ஷனல் லைன் (சிவப்பு நிற லைன்).  

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இந்த லைன்கள் ஒன்றுக் கொன்று சேர்ந்தும், மேலும் கீழுமாக ஒன்றைத் தாண்டி ஒன்றுமாகச் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப மேலேயும் கீழேயுமாக மாறிமாறிப் போய்க் கொண்டே இருக்கும். பாசிட்டிவ் டைரக்ஷனல் லைன் நெகட்டிவ் டைரக்ஷனல் லைனிற்கு மேலே இருந்தால், சந்தையில் காளைகள் உற்சாகமாக இருக்கிறார்கள் (அல்லது பெரும்பாலானவர்கள் கரடித்தனமாகச் செயல்படு கிறார்கள்) என அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நெகட்டிவ் டைரக்ஷனல் லைன் பாசிட்டிவ் டைரக்ஷனல் லைனிற்கும் மேலே இருந்தால் சந்தையில் கரடிகள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று (அல்லது பெரும்பாலானவர்கள் காளைத்தனமான மூடில் டிரேட் செய்கிறார்கள்) என அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

அட, ஆவரேஜ் டைரக்ஷனல் இண்டெக்ஸ் என்று ஒன்றை வேறு கண்டுபிடித்தோமே! அதன் உபயோகம் என்ன என்கிறீர்களா? அதைப் புரிந்து கொள்ள கீழேயுள்ள சார்ட்டை பாருங்கள்.

இந்த சார்ட்டின் மேல் பகுதி டைரக்ஷனல் மூவ்மென்ட் சார்ட்டை காண்பிக்கிறது. நீல நிற லைன் பாசிட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் (+டிஎம்) லைனாகும். சிவப்பு நிற லைன் நெகட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் (-டிஎம்) லைனாகும். கறுப்பு நிற லைன் ஏ.டி.எக்ஸ். லைனாகும். ஏ.டி.எக்ஸ். லைன் கீழிருந்து மேலே போக ஆரம்பித்தால், மற்ற இரண்டு லைன்களில் (+டிஎம் மற்றும் -டிஎம்) எது மேலே இருக்கிறதோ அந்த திசையில் டிரேடிங்கை ரொம்பவே நம்பிச் செய்யலாம் என்பதுதான் சிம்பிள் ரூல்.

உதாரணத்திற்கு, ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைப் பாருங்கள். ஆகஸ்ட் முதல் வாரத்தில் டைரக்ஷனல் மூவ் நெகட்டிவ்வாக மாறியிருக்கிறது. இதனை சிவப்பு நிற நெகட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் லைன் நீல நிற பாசிட்டிவ் டைரக்ஷனல் மூவ்மென்ட் லைனை கிராஸ் செய்து மேலே போக ஆரம்பித்துள்ளதை வைத்து அறிந்து கொள்ளலாம். அதாவது, பெரும்பாலானவர் கள் கரடிகளாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், சிவப்பு நிற லைன் மேலே இருக்கிறது. ஆகஸ்ட் ஆரம்பத்தில் கறுப்பு நிற ஏ.டி.எக்ஸ்.-லைன் கீழிருந்து மேலே போக ஆரம்பித் திருக்கிறது. ஏ.டி.எக்ஸ்-ன் ரூல்படி, அந்த லைன் கீழிருந்து மேலே போக ஆரம்பித்தால், அப்போது டைரக்ஷனல் லைன் காண்பிக்கும் டிரெண்டை நம்பி அதே திசையில் வியாபாரம் செய்யலாம். காண்பிக்கும் டிரெண்ட்டோ இறக்கம். ஏ.டி.எக்ஸோ வேகமாக கீழிருந்து மேல். ஆகஸ்ட் முழுவதும் சந்தை சரசரவென்று இறங்கத்தானே செய்தது!

நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

சரி, அதெல்லாம் முடிந்து போன விஷயம். இப்போ என்ன நடக்கும் என்று கணிப்பது எப்படி என்கிறீர்களா? மேலே கொடுக்கப்பட்டுள்ள சார்ட் அக்டோபர் 14 வரை உள்ள நிஃப்டியின் சார்ட்டாகும். டைரக்ஷனல் மூவ்மென்டில் நீல நிற பாசிட்டிவ் டைரக்ஷனல் லைன் அக்டோபர் 11-ம் தேதியன்று சிவப்பு நிற லைனை கிராஸ் செய்து மேலே சென்றுள்ளது. ஓ... சந்தை ஏறிவிடுமே என்கிறீர்களா? அடுத்த ரூலை பாருங்கள். கறுப்பு நிற ஏ.டி.எக்ஸ். லைன் எங்கேயுள்ளது? மேலிருந்து கீழாகத்தானே உள்ளது. சந்தை வேகமாக மேலே போக வேண்டுமென்றால், நீல நிற லைன் மேலேயே இருக்க வேண்டும். கறுப்பு நிற ஏ.டி.எக்ஸ். லைன் கீழிருந்து மேல்நோக்கிப் போக ஆரம்பிக்க வேண்டும், அப்போதுதான் நிச்சயம் ஏறும் வாய்ப்பு உள்ளது.

ஆக, அக்டோபர் 14 நிலையை வைத்துச் சொன்னால் அடுத்த வாரத்தின் முதல் நாளன்று  சந்தை கொஞ்சம் சைட்வேய்ஸில்தான் இருக்கும் என கணிக்கலாம் இல்லையா! இந்த இதழ் உங்கள் கையில் இருக்கும்போது சென்ற வார திங்களன்று சந்தை எப்படி யிருந்தது என்பதற்கான விடை உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால்  ஏ.டி.எக்ஸின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த இண்டிகேட்டரை வைத்துக் கொண்டு எப்படி டிரேடிங் செய்ய வேண்டும் என்பதற்கான ரூல்களை இப்போது பார்ப்போம். நீல நிற பாசிட்டிவ் லைன் சிவப்பு நிற நெகட்டிவ் லைனிற்கு மேலே இருந்தால் லாங் சைடிலும், சிவப்பு நிற நெகட்டிவ் லைன் நீல நிற பாசிட்டிவ் லைனிற்கு மேலே இருந்தால் ஷார்ட் சைடிலும் டிரெண்டை ஃபாலோ செய்து சிறிய அளவில் டிரேடிங் செய்யலாம்.

பாசிட்டிவ் லைனும், ஏ.டி.எக்ஸ். லைனும் நெகட்டிவ் லைனுக்கு மேலே இருந்தால், இன்னும் நம்பிக்கையுடன் லாங் சைடில் வியாபாரத்தில் இறங்கலாம். நெகட்டிவ் லைனும், ஏ.டி.எக்ஸ். லைனும் பாசிட்டிவ் லைனிற்கு மேலே இருந்தால், இன்னும் நம்பிக்கையுடன் ஷார்ட் சைடில் வியாபாரத்தில் இறங்கலாம். ஏ.டி.எக்ஸ். லைன் கீழ் நோக்கி போக ஆரம்பித்தால், சந்தை டைரக்ஷனை தொலைத்து குழப்பமாக போகப் போகிறதென்று அர்த்தமாகும். அதனால், ஏ.டி.எக்ஸ். லைன் கீழே போக ஆரம்பித்தால், டிரெண்ட்டை ஃபாலோ செய்து டிரேடிங் செய்து பழக்கப்பட்டவர்கள் டிரேடிங் செய்யாமல் இருப்பது நல்லது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஏ.டி.எக்ஸ். லைன் இரண்டு டிரெண்ட் லைன்களையும் தாண்டி கீழே போய்விட்ட தென்றால், சந்தையில் பெரிய ஆட்டபாட்டம் இல்லாமல் போய்விடும். அதேசமயம் எவ்வளவு நாள் ஏ.டி.எக்ஸ். லைன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் லைனிற்கு கீழேயே இருக்கிறதோ, அந்த அளவிற்கு சந்தை அடுத்த மூவிற்கான ஸ்ட்ராங்கான தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல், இரண்டிற்கும் கீழே நிறைய நாள் இருந்த ஏ.டி.எக்ஸ். லைன் கீழிருந்து மேலாக போக ஆரம்பித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் டைரக்ஷனல் லைன் களைத் தாண்டி போக ஆரம்பித்தால் சந்தை தூங்கும் நிலையிலிருந்து விழித்துக் கொண்டது என்று அர்த்தம். இந்த மாதிரியான சூழ்நிலை சந்தையில் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டுமுறையோ மட்டுமே வரும். அந்த சூழ்நிலையில் டிரெண்டை ஒட்டி டிரேடிங் செய்பவர்களுக்கு நஷ்டம் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏ.டி.எக்ஸ். லைன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் லைனைத் தாண்டி ஒரேயடியாக மேலே சென்றால், சந்தை ரொம்பவே சூடாகி விட்டது என்று அர்த்தம். லாபத்தை புக் செய்து வெளியே வருவது நல்லது. இதற்கப்புறம் ஏ.டி.எக்ஸ். லைன் கீழ்நோக்கி திரும்ப ஆரம்பித்தால், சந்தையின் டிரெண்ட் தடைபட்டு விட்டது என்று அர்த்தம். நிச்சயமாய் இந்தச் சூழ்நிலையில் லாபத்தை புக்செய்து விட்டு வெளியே வந்தேயாக வேண்டும்.

இல்லாவிட்டால், நஷ்டமடைய நேரிடும். மொத்தத்தில் ஏ.டி.எக்ஸ். லைன் கீழ்நோக்கி திரும்ப ஆரம்பித்தவுடனேயே டிரேடர்கள் மிக மிக  ஜாக்கிரதையுடன் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.

இந்த சூழல் வந்த பின்னர் பொசிஷனை அதிகரிக்கவே கூடாது. லாபத்தை புக் செய்தல், பொசிஷன்களை குறைத்தல், பொசிஷன்களை விட்டு வெளியேறுவதற்கான வழிமுறைகளை பார்த்தல் என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

அட! இவ்வளவு விஷயம் இருக்கிறதே இந்த ஏ.டி.எக்ஸ். இண்டிகேட்டரில் என்கிறீர்களா? ரெண்டு வாரம் படிக்கும்போது பட்ட கஷ்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்ததா? அடுத்த வாரம் மற்றுமொரு முக்கியமான இண்டிகேட்டருடன் சந்திப்போம்.

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism