Published:Updated:

டீ, காபி, ஃபண்ட்!

கலக்கல் சந்திப்பு!

டீ, காபி, ஃபண்ட்!

கலக்கல் சந்திப்பு!

Published:Updated:
டீ, காபி, ஃபண்ட்!
டீ, காபி, ஃபண்ட்!

ந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் சமீபத்தில் சென்னையில் வந்து கூடினார்கள். டீ காப்பி சாப்பிட்டுவிட்டு கலைந்து போகும் பல வழக்கமான சந்திப்புக்களைப் போல் அல்லாமல், இன்றைய தேதியில் மியூச்சுவல் ஃபண்ட் துறை எப்படி இருக்கிறது என்பது பற்றி விலாவாரியாகப் பேசி அசத்தினார்கள். 'ஐ.எஃப்.ஏ. கேலக்ஸி நாலட்ஜ் சப்மிட் 2011’ எனும் அந்தக் கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டோம். மியூச்சுவல் ஃபண்டை இன்னும் நிறைய மக்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லையே என்கிற ஏக்கமும் வருத்தமும் கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரிடமும் இருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இனி ஓவர் டு மீட்டிங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீ, காபி, ஃபண்ட்!

ஹெச்.என்.சினார், தலைமை நிர்வாகி, ஆம்ஃபி.

''மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மொத்த பிஸினஸ் முந்தைய வருடங்களில் இரண்டு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போதும் அதே மதிப்பில்தான் இருக்கிறது. ஒரு எஃப்.எம்.சி.ஜி. நிறுவனம் தனது பொருளை விற்கும்போது அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுமோ, அதுபோல மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களும் செயல்பட வேண்டும். இந்தியா மிகப் பெரிய நாடு. இங்குதான் அதிகளவு சேமிப்பு பழக்கம் இருக்கிறது. ஆனால், நாம் மெட்ரோபாலிடன் நகரத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறோமே ஒழிய, கிராமப்புற மக்களை தேடிச் செல்வதில்லை. அவர்களது முதலீடும் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு வர வேண்டும். சாதாரண மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்குத் தகுந்த வருமானம் கிடைத்தால் மட்டுமே பலரும் நம்மை தேடி வந்து முதலீடு செய்வார்கள்.''  

டீ, காபி, ஃபண்ட்!

ஜெய்தீப் பட்டாச்சார்யா, சி.எஃப்.ஓ. மற்றும் குழுத் தலைவர், யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட்.

''வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு இப்போது அதிகரித்து விட்டது. நாம் என்ன சொன்னாலும் இன்டர்நெட் மூலம் தகவல்களைச் சேகரித்துவிட்டு நம்மை கேள்வி கேட்கிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. தற்போது இருப்பதைவிட கல்விக்கான செலவு இன்னும் பல மடங்கு ஆகும், 83% வேலை பார்க்கும் நபர்களுக்கு பென்ஷன் கிடையாது - இப்படி பல விஷயங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான காரணங்களாக இருக்கிறது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு மக்களை அணுகினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதே முதலீடு செய்வது அவசியம் என்பதைத் தெளிவுபடுத்தினால் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டை நோக்கி மக்களை கொண்டுவர முடியும்.''

டீ, காபி, ஃபண்ட்!

நவீன் திவாரி, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தலைவர், பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி.

''முன்புபோல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நுழைவு கட்டணம் இல்லை, வெளியேறும் கட்டணம் இல்லை. இருந்தும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி. போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம், நம்பகத்தன்மையும் பாதுகாப்பும்தான். எஃப்.டி., ஆர்.டி.யில் கிடைக்கும் பாதுகாப்பு ஃபண்டிலும் கிடைக்கும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இன்னும் பலர் இத்துறைக்கு வருவார்கள். வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை விநியோகஸ்தர்கள் சரியாகச் செய்துதர வேண்டும்; அப்போதுதான் இன்னும் அதிகமானவர்கள் முதலீடு செய்ய வருவார்கள்.''

டீ, காபி, ஃபண்ட்!

டேவிட் பெஷார்கர், ஹெட் ஆஃப் ஈக்விட்டீஸ், தாய்வா அசெட் மேனேஜ்மென்ட்.

##~##
''இந்தியாவில் தங்கத்தில் இருபதாயிரம் டன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் ஈக்விட்டி சொத்து மதிப்பு 40 மில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கிறது. காரணம், தங்கத்தின் மீது நம் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. இந்தியாவில் 12 மில்லியன் டீமேட் கணக்கு இருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு கடந்த ஐந்து வருடங்களில் தொடங்கப்பட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டவர்கள்கூட இப்போது கொஞ்சம் விலகி நிற்கிறார்கள். முடிந்தவரை எல்லோரையும் மீண்டும் மியூச்சுவல் ஃபண்டிற்கு அழைத்து வரவேண்டும்!''

இனியாவது மியூச்சுவல் ஃபண்டை நோக்கி மக்கள் வருகிறார்களா என்று பார்ப்போம்!

- பானுமதி அருணாசலம்
படங்கள்:ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism