Published:Updated:

கம்பெனி அலசல் - ஆக்ஸிஸ் பேங்க்!

நிறுவனம்

கம்பெனி அலசல் - ஆக்ஸிஸ் பேங்க்!

நிறுவனம்

Published:Updated:
கம்பெனி அலசல் - ஆக்ஸிஸ் பேங்க்!

தேர்ந்த அறிவு, திறமைச் செறிவேற்றப்பட்ட தொழிலாளர்கள், புத்தம்புது தொழில்நுட்பம் என்ற மூன்று தாரக மந்திரங்களைக் கொண்டு வாடிக்கையாளர்கள் திருப்தி ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படும் ஆக்ஸிஸ் வங்கியைத்தான் இந்த வாரம் அலசப் போகிறோம்.

கம்பெனி அலசல் - ஆக்ஸிஸ் பேங்க்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1994-ல் ஆரம்பிக்கப்பட்ட தனியார் வங்கியான இது தடையேதும் இல்லாத வளர்ச்சிப் பாதை, மொத்த வங்கித் துறையின் ஆவரேஜ் லாபத்தைவிட அதிக லாபம் சம்பாதிக்கும் திறன், கட்டணம் சார்ந்த சர்வீஸ்களிலிருந்து வரும் கணிசமான வருமானம், அகில இந்திய ரீதியான  வியாபாரம், ரீடெயில் கணக்குகளில் கவனம் மற்றும் கைவசமிருக்கும் தரம்மிக்க கடன் அசெட்டுகள் என ஒரு வங்கிக்குத் தேவையான அத்தனை விஷயங்களிலுமே தனித்துவத்தைப் பெற்றுள்ள வங்கி என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறது இந்த வங்கி.  

இந்தியா முழுவதுமாக 1,281 கிளைகள், 6,270 ஏ.டி.எம்.கள் என பெரியதொரு நெட்வொர்க்கை தன் வசத்தே கொண்டுள்ள இந்த வங்கி, கார்ப்பரேட் மற்றும் தனிநபர் பேங்கின் வியாபாரத்தைச் சரியானதொரு விகிதத்தில் வைத்திருப்பதன் மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறது. நேரடிக் கிளைகள், ஏ.டி.எம்.-கள், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பாயின்ட் ஆஃப் சேல் (உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் கருவி வழங்குதல் மூலமாக), கால் சென்டர் என பல்வேறு வழிகளில் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கி வருகிறது. கிளைகளைத் திறப்பதிலும் மிகவும் கவனமாக கிராமப்புறம், ஓரளவுக்கு வளர்ந்த நகரம், நகரம், மெட்ரோ என சமமான விகிதத்தில் திறந்து

வருகிறது. இதுபோன்ற சரியான தொரு கலவையில் கிளைகளும் வருமானமும் இருப்பது வங்கித் தொழிலுக்கு மிக நல்லது.

தொழில் எப்படி?

##~##
வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் வங்கித் துறைக்குச் சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இருப்பினும், தற்போதைய பணவீக்கத்தால் அதிகரித்துவரும் வட்டி விகிதம் லாபத்தைச் சற்று பதம் பார்க்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும், வங்கித் துறையில் ஒரு முக்கியமான வித்தியாசம், போட்டியாளர் அனைவருக்குமே கிட்டத்தட்ட ஒரே சராசரி வட்டி விகிதத்தில் தான் பணம் கிடைக்கும். எனவே, திறமையான பண மேலாண்மை மற்றும் கடன் நிர்வாகம்தான் ஒரு வங்கியின் லாபத்தை நிர்ணயம் செய்வதாக அமையும். இதையெல்லாம் தாண்டியும் இந்திய வங்கித் துறை தனது  கன்சர்வேட்டிவ்-ஆன அணுகுமுறையாலும், பொருளா தாரத்தின் திண்மையாலும் நிச்சய மாக வளர்ந்தே ஆகவேண்டும் என்று சொல்லலாம்.

வங்கியின் செயல்பாடு எப்படி?

ரீடெயில், எஸ்.எம்.இ., இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சார்ந்த ஃபைனான்ஷியல் சர்வீஸ், எங்கேயும் எப்போதும் எல்லார்க்கும் பணம் வழங்குதல் (பேமென்ட் சிஸ்டம்ஸ் - டெலிபோன், ரயில்வே, எலெக்ட்ரிசிட்டி, கிரெடிட் கார்டு, கடை என எல்லோருக்கும்)

என பல்வேறு நவீன உத்திகளைக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி இது. 53 சதவிகித வருமானம் வரும் கார்ப்பரேட் பேங்கிங் டிவிஷனில் கிரெடிட், சிண்டிகேஷன், இன்வெஸ்ட் மென்ட் பேங்கிங்,  டிரெஷரி, பிஸினஸ் பேங்கிங், வங்கியல்லாத சர்வீஸ்கள் என பெருவாரியான விஷயங்களில் சிறப்புத்தன்மை பெற்றுள்ளது ஆக்ஸிஸ் வங்கி.

போக்குவரத்துத் துறையில் ரோடுகள், ரயில்வே, துறைமுகங்கள் கட்டுமானத் திற்கும், மின்சார உற்பத்தி, டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபூஷன், டெலிகாம் துறை, நகர்ப்புற உள்கட்டமைப்பு, கல்வி, ஹெல்த் கேர் என அனைத்து துறைகளுக்கும் கடன் வழங்கி, ஒரு பேலன்ஸ்ட் போர்ட்ஃபோலியோவை தன்வசம் கொண்டுள்ளது ஆக்ஸிஸ் வங்கி. எஸ்.எம்.இ. துறைக்கு சேவை செய்வதிலும் கூட மூன்று தனி பிஸினஸ் டிவிஷன்களாக செயல்பட்டு வருகிறது.

ரீடெயில் துறையில் பெருவாரியான மக்களுக்கான வங்கிச் சேவைகள், அந்த சேவைகளிலும் சிறப்பானவர் களுக்கான தனிச்சேவைகள், ஹெச்.என்.ஐ. சேவைகள் என பலவிதமான செக்மென்டுகளில் சேவைகளை வழங்கி வருகிறது இந்த வங்கி.

கம்பெனி அலசல் - ஆக்ஸிஸ் பேங்க்!


ஏன் வாங்கலாம்?

வங்கிகளுக்குப் பெரும் பான்மை வருமானம் டெபாசிட்டிற்குத் தரும் வட்டிக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியா சத்தில் இருந்து வருவதேயாகும். இதில், வங்கியினை நடத்தும் செலவு மற்றும் வாராக் கடன் போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் போக மீதியுள்ளதுதான் நிகர லாபமாக அமையும். ஆனாலும், தொழில் ரீதியாக பல வித்தைகள் லாபத்தை வேகமாக அதிகரிக்க அனைத்து வங்கிகளுக்கும் உதவியாக இருக்கிறது. அவற்றில் ஒன்று கட்டணம் சார்ந்த சேவைகள். இந்த கட்டணம் சார்ந்த சேவைகள் ரிஸ்க் ஏதும் இல்லாமல் வந்து சேருகிற வருமானமாகும். வட்டிவிகித மாறுதல்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனவே, வெற்றிகரமான வங்கி யன்று கட்டணம் சார்ந்த வருமானத்தைக் கணிசமாக உயர்த்த வேண்டும். ஆக்ஸிஸ் வங்கியின் கட்டணம் சார்ந்த வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட 47 சதவிகித (சி.ஏ.ஜி.ஆர்.) அளவிற்கு வளர்ந்து வருகிறது. 2010-11 நிதியாண்டில் 37.9 பில்லியன் ரூபாய் அளவிற்கு இருந்துள்ளது இது. இது ஒரு ஹெல்த்தியான டிரெண்ட் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

இதில் இன்னமும் தீவிரமாக ஆராய்ந்தால் கார்ப்பரேட்டுகள் (35%), ரீடெயில் பேங்கிங் (27%), டிரெஷரி மற்றும் கேபிட்டல் மார்க்கெட் (21%), பிஸினஸ் பேங்கிங் (10%), மற்றும் விவசாயம் (7%) என ஐந்து விதமான தொழில்களிலும் இருந்து கட்டணம் சார் வருமானம் வந்துகொண்டிருக்கிறது ஆக்ஸிஸ் வங்கிக்கு.

வங்கித் துறையில் இருக்கும் பூதாகாரமான பிரச்னையே வாராக்கடன்தான். இந்த வாராக் கடன்களை உடனுக்குடன் கண்டுபிடித்து லாபத்தில் அதற்குண்டான ஒதுக்கீடுகளை செய்து வைப்பதில் ஆக்ஸிஸ் வங்கி கைதேர்ந்ததாக தொடர்ந்து இருந்து வருகிறது. வாராக் கடன்களைத் தீர்மானிப்பதில் உள்ள ஒளிவுமறைவு குறித்த பிரச்னைகளே வங்கித் தொழிலின் நலிவிற்கு முக்கிய காரணியாக இருக்கும். வாராக் கடன்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தேவையான ஒதுக்கீடுகளைச் செய்து கொள்ளும் குணம் கொண்ட இந்த வங்கி, நிச்சயமாக மாறுபட்டது என்று சொல்லலாம்.

 என்ன ரிஸ்க்?

ஏற்கெனவே சொல்லியபடி ஏறும் வட்டி விகிதம் லாபத்தை சிறிது பதம் பார்க்கலாம். கட்டணம் சார் வருமானம் இந்த லாபக்குறைவிலிருந்து வங்கியினைக் காப்பாற்றலாம்.

நெடுநாளைக்கான கடன்கள் மிகவும் காஸ்ட்லியாகப் போகும் பட்சத்தில் இந்த வங்கி ஷேர் கேபிட்டலை அதிகப்படுத்தலாமா என்று யோசிக்கலாம். இவை இரண்டும்தான் இப்போதைக்கு உள்ள ரிஸ்குகள்.

இந்த வங்கியிலுள்ள குறை நிறைகளை வைத்துப் பார்த்தால், அசாதாரணமான ஒரு சூழ்நிலையில் இறங்கும்போது வாசகர்கள் நிச்சயம் இந்த பங்கை வாங்கிப்போடலாம் என்பதுதான் எங்கள் டீமின் தீர்ப்பு.

-நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism